இந்தியாவில் எகிறும் வரவேற்பு!! வெளிநாடுகளுக்கு பறக்கும் ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக்

இந்திய அறிமுகத்தை தொடர்ந்து வெளிநாடுகளுக்கும் ராயல் என்பீல்டின் புதிய அறிமுகமான மீட்டியோர் 350 பைக் கொண்டு செல்லப்படவுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் எகிறும் வரவேற்பு!! வெளிநாடுகளுக்கு பறக்கும் ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக்

ராயல் என்பீல்டு நிறுவனம் மிகுந்த எதிர்பார்க்கு மத்தியில் மீட்டியோர் 350 பைக்கை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இந்த 350சிசி ராயல் என்பீல்டு பைக் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளின் சந்தைகளுக்கும் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் எகிறும் வரவேற்பு!! வெளிநாடுகளுக்கு பறக்கும் ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக்

இந்த பைக்கில் 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், யூரோ-5க்கு இணக்கமான என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. என்ஜின் வழங்கக்கூடிய இந்த ஆற்றல் அளவுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

இந்தியாவில் எகிறும் வரவேற்பு!! வெளிநாடுகளுக்கு பறக்கும் ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக்

இதனால் ஐரோப்பிய சந்தைகளில் இந்த புதிய ராயல் என்பீல்டு பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆனால் ஏன் அமெரிக்காவில் மீட்டியோர் 350 பைக்கை அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு நிறுவனம் முயற்சிக்கிறது என்பது மட்டும் தான் தெரியவில்லை.

இந்தியாவில் எகிறும் வரவேற்பு!! வெளிநாடுகளுக்கு பறக்கும் ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக்

ஏனெனில் அமெரிக்க நாடுகளின் சந்தைகளை பொறுத்த வரையில் மீட்டியோர் 350 மிகவும் சிறிய ரக பைக்காகும். அமெரிக்காவில் விற்பனையாகும் விலை குறைந்த ராயல் என்பீல்டு பைக்காகவே தற்போது வரையில் 411சிசி ஹிமாலயன் மாடல் தான் உள்ளது. இதனால் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் மலிவான ராயல் என்பீல்டு பைக் என்ற பட்டத்தை விரைவில் மீட்டியோர் 350 பெறவுள்ளது.

இந்தியாவில் எகிறும் வரவேற்பு!! வெளிநாடுகளுக்கு பறக்கும் ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக்

ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தைகளில் இந்த 350சிசி பைக்கை அடுத்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்தைகளிலும் மேற்கூறப்பட்ட என்ஜின் உடன் தான் மீட்டியோர் 350 விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்தியாவில் எகிறும் வரவேற்பு!! வெளிநாடுகளுக்கு பறக்கும் ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக்

அதேபோல் இந்த சர்வதேச சந்தைகளிலும் ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த ராயல் என்பீல்டு பைக்கில் 'ட்ரிப்பர்' என்ற பெயரில் பிராண்டின் நாவிகேஷன் சிஸ்டமும் வழங்கப்படும்.

இந்தியாவில் எகிறும் வரவேற்பு!! வெளிநாடுகளுக்கு பறக்கும் ராயல் என்பீல்டின் புதிய மீட்டியோர் 350 பைக்

ரூ.1.76 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக கொண்டுள்ள ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு விற்பனையில் போட்டியினை அளிக்க ஹோண்டா எச்'னெஸ் சிபி350 மற்றும் சொந்த ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 உள்ளிட்டவை இந்திய சந்தையில் உள்ளன.

Most Read Articles
English summary
Royal Enfield is gearing up to export the Meteor 350 motorcycle to international markets.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X