Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 6 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எங்கு தேடினாலும் இப்படி ஒரு ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கை பார்க்க முடியாது... சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க!
மாடிஃபிகேஷன் மூலமாக ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் இதுவரை நாம் பார்த்திராத புதிய தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மாடிஃபிகேஷன் வாயிலாக ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் ஒன்று மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. இதனால் இந்தியாவின் மிகவும் முரட்டுத்தனமான ராயல் என்பீல்டு ஹிமாலயன் எனும் மகுடத்தைச் சூடியிருக்கின்றது. இந்த பைக் பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் புகழ்வாய்ந்த பைக்குகளில் ஹிமாலயன் மாடலும் ஒன்று. அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற பன்முக சிறப்பம்சங்களை இப்பைக் பெற்றிருக்கின்ற காரணத்தினால் இந்திய இளைஞர்களின் (அட்வென்சர் பயண பிரியர்களின்) மிகுந்த பிரியமான பைக்காக இது இருக்கின்றது.

இத்தகைய பைக்கையே அக்ஷே பிஏ எனும் இளைஞர் மிகவும் முரட்டுதனமான தோற்றத்திற்கு மாடிஃபை செய்திருக்கின்றனர். இந்த புதிய தோற்றத்திற்காக பல்வேறு இழப்புகளை ஹிமாலயன் பைக் சந்தித்திருக்கின்றது. அந்தவகையில், ஒற்றை மின் விளக்கைக்கொண்ட ஹெட்லேம்ப் நீக்கப்பட்டு, இரட்டை மின் விளக்குகள் கொண்ட ஹெட்லேம்ப் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து, அதன் மேற்பகுதியில் உயரமான வின்ட்ஸ்கிரீனும் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக முகப்பு பகுதி முழுமையாக மாற்றப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. மேலும், புதிய பாதுகாப்பு கவசம் ஒன்றையும் ஹெட்லமேப்பிற்கு கீழே மாடிஃபிகேஷன் குழுவினர் சேர்த்திருக்கின்றனர்.

இதுமட்டுமின்றி, பதிய ஆக்ஸிலரி மின் விளக்கு, இன்டிகேட்டர், எரிபொருள் தொட்டியின் இரு பக்கங்களிலும் ஜெர்ரி கேன்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற புதிய அணிகலன் சேர்ப்பினாலயே ஹிமாலயன் பைக் முன்பெப்போதும் இல்லாத புத்தம் புதிய ஸ்டைலைப் பெற்றிருக்கின்றது. மேலும், கண்கவரும் பைக்காகவும் மாறியிருக்கின்றது.

Image Courtesy: Akshay P.A.
அதேசமயம், மேற்கூறிய புதிய அணிகலன்கள் மட்டுமின்றி புதிதாக கிராஷ் குவார்ட், பின்பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடி, ரிம்மிற்கு வெள்ளை மற்றும் சிவப்பு நிறம், கூடுதல் பேட்டிங் மற்றும் தீயணைக்கும் கருவி உள்ளிட்டவை இப்பைக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இதுபோன்று தோற்றத்தை மாற்றத்தக்கூடிய அணிகலன்கள் மட்டுமே இப்பைக்கில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், எஞ்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும், இது பிஎஸ்4 பைக் என்பதால் இப்பைக்கில் பிஎஸ்-4 தரத்திலான சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜினே உள்ளது. இது அதிகபட்சமாக 411சிசி திறனை வெளிப்படுத்தும்.

மேலும், 24.8 பிஎஸ் மற்றும் 32 என்எம் டார்க்கை இது வெளிப்படுத்தும். அதேசமயம், தற்போது விற்பனையில் இருக்கும் பிஎஸ் 6 ஹிமாலயன் பைக் 24.3 பிஎஸ் பவரையும், 32 என்எம் டார்க்கை மட்டுமே வெளிப்படுத்துகின்ற வகையில் இருக்கின்றது.