ஹன்ட்டர் பெயரில் புதிய மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

புதிய மோட்டார்சைக்கிளுக்கு ஹன்ட்டர் என்ற பெயரை பதிவு செய்துள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஹன்ட்டர் பெயரில் புதிய மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

ஜாவா, பெனெல்லி நிறுவனங்களின் புதிய பைக் மாடல்களின் வருகையானது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சந்தையில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சந்தையை தக்க வைக்கவும், வர்த்தகத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் புதிய மோட்டார்சைக்கிள்களை களமிறக்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது.

ஹன்ட்டர் பெயரில் புதிய மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

அதன்படி, புதிய மோட்டார்சைக்கிளுக்காக ஹன்ட்டர் என்ற பெயரை ராயல் என்ஃபீல்டு பதிவு செய்துள்ளது. இது ஆஃப்ரோடு வகை மாடலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹன்ட்டர் பெயரில் புதிய மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

ஹிமாலயன் மோட்டார்சைக்கிளுக்கு அடுத்து இந்த ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் அடுத்து ஒரு புதிய மாடலை நிலைநிறுத்தும் முயற்சிகளில் ராயல் என்ஃபீல்டு ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஹன்ட்டர் பெயரில் புதிய மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

ராயல் என்ஃபீல்டு ஹன்ட்டர் மோட்டார்சைக்கிளில் சாதாரண வகை ஃபோர்க்குகளுடன் முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹன்ட்டர் பெயரில் புதிய மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

இந்த புதிய மோட்டார்சைக்கிள் 350 சிசி எஞ்சினுடன் கூடிய புதிய அட்வென்ச்சர் வகை மாடலாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆனால், தற்போதுதான் இந்த பெயர் பதிவு குறித்த விபரம் கசிந்துள்ளதால், விரைவில் இந்த புதிய பெயருக்கான மாடல் விபரம் குறித்த அதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹன்ட்டர் பெயரில் புதிய மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

மற்றொரு தகவலின்படி, ஹன்ட்டர் பெயரில் புதிய 250 சிசி அட்வென்ச்சர் டூரர் வகை மோட்டார்சைக்கிள் மாடலை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எது எப்படியாகினும், புதிய மாடலில் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் என்பது உறுதியான விஷயம்தான்.

ஹன்ட்டர் பெயரில் புதிய மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

650 சிசி மாடல்கள் போன்றே புதிய ஹன்ட்டர் பைக்கை மிக சவாலான விலையில் கொண்டு வருவதற்கும் ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த புதிய மாடல் குறித்து ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் மத்தியில் அதிக ஆவல் எழுந்துள்ளது.

ஹன்ட்டர் பெயரில் புதிய மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

அண்மையில் வெளியானத் தகவலின்படி, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முதல்முறையாக பைக் வாங்குவோரையும், பெண் வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் இலகு வகை மாடலை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்த விலை குறைவான மாடல்கள் எக்ஸ்ப்ளோரர் என்ற துணை பிராண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஹன்ட்டர் பெயரில் புதிய மாடலை களமிறக்குகிறது ராயல் என்ஃபீல்டு?

1980களில் எக்ஸ்ப்ளோரர் என்ற பெயரில் சிறிய வகை இருசக்கர வாகனத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்தது. ஜெர்மனியை சேர்ந்த ஸுன்டாப் நிறுவனத்துடன் இணைந்து இந்த இருசக்கர வாகனத்தை உருவாக்கியது. இந்த இருசக்கர வாகனத்தில் 49 சிசி எஞ்சினும், 3 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருந்தது. லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் வழங்கும் விதத்தில், நகர்ப்புற பயன்பாட்டு மாடலாக விற்பனை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

குறிப்பு: மாதிரிக்காக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Via- IAB

Most Read Articles
English summary
Chennai based motorcycle manufacturer, Royal Enfield, has filed a Trademark application for the Royal Enfield Hunter. According to IndianAutosBlog, no details about the motorcycle are known just yet, however the name suggests that the Hunter could be an off-road bias motorcycle.
Story first published: Wednesday, January 1, 2020, 17:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X