Just In
- 4 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கேமிராவின் கண்களில் முதல் முறையாக சிக்கிய ராயல் என்பீல்டின் புதிய தயாரிப்பு... இதுதான் குறைந்த விலை பைக்கா!!
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதுமுக தயாரிப்பு ஒன்று முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பெயரிடப்படாத புதிய தயாரிப்பு ஒன்று முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அந்நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவக்கப்பட்ட புதிய பைக்காகும்.

ஆகையால், இதனை இன்டர்செப்டார் 350 மாடல் பைக் என்றே பலர் அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். இப்பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த அறிமுகத்தை முன்னிட்டே தற்போது பெயரிடப்படாத அப்பைக் தீவிர சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது இணையத்தை ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கியுள்ளன. தற்போது காடிவாடி தளத்தின் வாயிலாகவெளியாகியிருக்கும் புகைப்படத்தை நீங்கள் கீழே காணலாம்.

ராயல் என்பீல்டு தயாரிப்புகளுக்கென இந்தியாவில் தனித்துவமான டிமாண்ட் நிலவி வருகின்றது. அந்தவகையில், ஏற்கனவே விற்பனையில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் மாடலாக இன்டர்செப்டார் 650 பைக் இருக்கின்றது. இதன் குறைந்த திறன் மற்றும் குறைந்த விலைக் கொண்ட பைக்காகவே தற்போது கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கும் பைக் பார்க்கப்படுகின்றது.

எனவேதான் தற்போது இப்பைக் பற்றிய படங்கள் மிக அதிகளவில் வைரலாகத் தொடங்கியிருக்கின்றது. இந்த புகைப்படங்கள் பைக்கின் பின் பகுதியை மட்டுமே வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம், பைக்கில் இடம்பெற இருக்கும் சைலென்சர் மற்றும் பின்பக்க தோற்றம் உள்ளிட்டவை தெளிவாக தெரிய வந்துள்ளது.

தற்போது விற்பனையில் இருக்கும் இன்டர்செப்டார் 650 பைக்கில் இரு சைலென்சர்கள் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதன் சகோதர மாடல் என கூறப்படும், கேமிராவின் கண்களில் சிக்கிய பைக்கில் ஒரு சைலென்சர் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றது. விலை குறைப்பிற்காக இந்த நடவடிக்கையை ராயல் என்பீல்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றது.

இதேபோன்று குறிப்பிட்ட சில இழப்புகளை இப்பைக் பெற இருக்கின்றது. இதனால்தான் பட்ஜெட் பைக்காக அது உருவெடுத்திருக்கின்றது. இந்த பைக்கில் மீட்டியோர் 350 பைக்கில் இடம்பெற்றிருக்கும் 349 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜினே எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸே எதிர்பார்க்கப்படுகின்றது. அதி தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் இப்பைக் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் வெளியாகவில்லை. இது வரும் 2021ம் ஆண்டு அல்லது அடுத்து ஆண்டிற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.