அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... எந்த மாடலில்னு தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் கிளாசிக் 350 மாடலில் புதிய நிற தேர்வுகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... இனி கிளாசிக் 350 மாடலை இந்த நிறத்திலும் பெறலாம்!

ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த இருசக்கர வாகனங்களில் ஒன்றான கிளாசிக் 350 மாடலில் புதிய வண்ண தேர்வை அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரஞ்சு எம்பெர் மற்றும் மெட்டல்லோ சில்வர் ஆகிய இரு நிறங்களே தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிற தேர்வுகள் ஆகும்.

அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... இனி கிளாசிக் 350 மாடலை இந்த நிறத்திலும் பெறலாம்!

இந்த புதிய நிற தேர்வுகளைக் கொண்டிருக்கும் பைக்குகளுக்கு விலையாக ரூ. 1.83 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேசமயம், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலின் டாப் எண்ட் வேரியண்டுகளில் மட்டுமே இந்த புதிய நிற தேர்வு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த உயர் நிலை மாடல் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... இனி கிளாசிக் 350 மாடலை இந்த நிறத்திலும் பெறலாம்!

தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய நிற கிளாசிக் 350 பைக்கிற்கான நடைபெற்று வருகின்றது. இதனை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு நாளை முதல் பைக் டெலிவரி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நிற தேர்வை வழங்கும் வகையிலும், நிறங்களின் மூலம் புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலும் இந்த புதிய கிளாசிக் 350 பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... இனி கிளாசிக் 350 மாடலை இந்த நிறத்திலும் பெறலாம்!

அதேசமயம், ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய நிற தேர்வை மட்டுமின்றி உங்களுக்கான பைக்கை உங்களுக்கு பிடித்த நிறத்தில் பெற்றுக் கொள்ளுங்கள் என்ற திட்டத்தையும் அறிமுகம் செய்திருக்கின்றது. இதன்மூலம் ராயல் என்பீல்டு பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான பைக்கை பிடித்தமான நிறத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... இனி கிளாசிக் 350 மாடலை இந்த நிறத்திலும் பெறலாம்!

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த பைக்கில் பிஎஸ்6 தரத்திலான 346 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜினைப் பயன்படுத்தியிருக்கின்றது. இது, அதிகபட்சமாக 19.1 பிஎச்பி பவரை 5,250 ஆர்பிஎம்மிலும், 28 என்எம் டார்க்கை 4,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். மேலும், இது 5 ஸ்பீடு வேகக்கட்டுப்பாட்டு கருவியில் இயங்கும் எஞ்ஜின் ஆகும்.

அட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... இனி கிளாசிக் 350 மாடலை இந்த நிறத்திலும் பெறலாம்!

ராயல் என்ஃபீல்டின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் கே தசரி கூறியதாவது, "கிளாசிக் 350 ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எங்கள் மிக வெற்றிகரமான மோட்டார் சைக்கிளாக இருக்கின்றது. இதன் கவர்ச்சியான மற்றும் பன்முக வசதிகள் காரணமாக இந்தியாவில் தொடர்ச்சியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதன் காரணத்தினாலயே இதில் புதிய நிற தேர்வுகளை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளோம்" என்றார்.

Most Read Articles

English summary
Royal Enfield Introduced Classic 350 In Two New Colour Schemes: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Wednesday, November 25, 2020, 16:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X