ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு குவியும் புக்கிங்! 10 நாட்களில் இவ்வளவு முன்பதிவுகளா?

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு குவியும் புக்கிங்! 10 நாட்களில் இவ்வளவு முன்பதிவுகளா?

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டுக்கு மாற்றாக புத்தம் புதிய மீட்டியோர் 350 பைக் கடந்த நவம்பர் 6ம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. நீண்ட காலமாக வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த பைக்கை, கொரோனா பிரச்னையால் ஏற்பட்ட தாமதத்திற்கு பின் ஒரு வழியாக ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது களமிறக்கியுள்ளது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு குவியும் புக்கிங்! 10 நாட்களில் இவ்வளவு முன்பதிவுகளா?

ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் கிடைக்கும். இதில், ஆரம்ப நிலை ஃபயர்பால் வேரியண்ட்டின் விலை 1.75 லட்ச ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் நடுத்தர வேரியண்ட்டான ஸ்டெல்லர் வெர்ஷனின் விலை 1.81 லட்ச ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு குவியும் புக்கிங்! 10 நாட்களில் இவ்வளவு முன்பதிவுகளா?

அதே சமயம் டாப் வேரியண்ட்டான சூப்பர்நோவா வெர்ஷனின் விலை 1.90 லட்ச ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த பைக்கில், 348 சிசி, ஏர் கூல்டு, ப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 21 பிஎஸ் பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதனுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு குவியும் புக்கிங்! 10 நாட்களில் இவ்வளவு முன்பதிவுகளா?

மிக நீண்ட காலத்திற்கு பின் ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் இருந்து வெளிவந்துள்ள ஒரு புத்தம் புதிய மோட்டார்சைக்கிளாக ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பார்க்கப்படுகிறது. எனவே இந்த பைக்கை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே இந்திய சந்தையில் இந்த பைக் தற்போது வேகமாக பிரபலம் அடைய தொடங்கியுள்ளது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு குவியும் புக்கிங்! 10 நாட்களில் இவ்வளவு முன்பதிவுகளா?

இந்த சூழலில், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு எண்ணிக்கை தற்போது 8 ஆயிரத்தை கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் 10 நாட்களுக்கு உள்ளாக, ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் இவ்வளவு முன்பதிவுகளை பெற்றுள்ளது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு குவியும் புக்கிங்! 10 நாட்களில் இவ்வளவு முன்பதிவுகளா?

கடந்த நவம்பர் 6ம் தேதி விலைகள் அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோதுதான், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பதிவுகள் அதிகரித்து வரும் அதே நேரத்தில், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கான காத்திருப்பு காலமும் உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு குவியும் புக்கிங்! 10 நாட்களில் இவ்வளவு முன்பதிவுகளா?

குறிப்பாக முக்கியமான மெட்ரோ நகரங்களில், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு குறைந்தபட்சம் 1 மாதம் வரை காத்திருப்பு காலம் நிலவுவதாக கூறப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஒரு சில நாட்களில் காத்திருப்பு காலம் வெறும் 15 நாட்களாக மட்டும்தான் இருந்தது. ஆனால் டிமாண்ட் அதிகரிப்பால், காத்திருப்பு காலமும் உயர்ந்துள்ளது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு குவியும் புக்கிங்! 10 நாட்களில் இவ்வளவு முன்பதிவுகளா?

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் எந்த வேரியண்ட்டை நீங்கள் இன்று முன்பதிவு செய்தாலும் கூட, நீங்கள் பைக்கை டெலிவரி பெறுவதற்கு குறைந்தபட்சம் 1 மாதம் வரை காத்திருக்க வேண்டும். சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஹைனெஸ் சிபி350 உள்ளிட்ட பைக்குகளுடன், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 போட்டியிட்டு வருகிறது.

Most Read Articles

English summary
Royal Enfield Meteor 350 Bookings Cross 8,000 Units - All Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X