Just In
- 49 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிஜிட்டல் தரத்திலான திசைக்காட்டும் கருவியுடன் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350... ஸ்பை படங்கள் இதோ...
டிஜிட்டல் திரையை கொண்ட திசைக்காட்டும் கருவி உடன் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மீட்டியோர் 350 இந்திய சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்த மோட்டார்பீம் செய்திதளம் வெளியிட்டுள்ள கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தண்டர்பேர்டு வரிசை பைக்குகளுக்கு மாற்றாக வெளிவரவுள்ள ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 அடுத்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய என்ஜின் மற்றும் முற்றிலும் புதிய ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்ற இந்த 350சிசி பைக் ராயல் என்பீல்டின் புத்தம் புதிய எடிசனாக அதன் பைக்குகள் வரிசையில் விளங்கவுள்ளது.

தண்டர்பேர்டு ரேஞ்சில் தண்டர்பேர்டு 350 மற்றும் தண்டர்பேர்டு எக்ஸ் 350 என்ற பைக்குகள் இடம் பெற்று வருகின்றன. மற்ற பைக் மாடல்களின் புதிய தலைமுறைகளின் வருகைக்கு மத்தியில் அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ள மீட்டியோர் 350-ன் சோதனை ஸ்பை படங்கள் அறிமுக தேதி நெருங்கிவிட்டதால், கடந்த சில மாதங்களில் பல முறை வெளியாகியுள்ளன.

முற்றிலும் புதிய உடற் அமைப்பை ஏற்றுள்ள மீட்டியோர் 350-ல் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள், கண்ணீர்த்துளி வடிவிலான இண்டிகேட்டர்கள் மற்றும் ராயல் என்பீல்ட் நிறுவனத்திற்கே உரியதாக அகலமான ஃபெண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

என்ஜின், சக்கரங்கள் எக்ஸாஸ்ட் குழாய் உள்பட பைக்கின் வெளிப்புறத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து பாகங்களும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக நீளம் கொண்டதாக மிக முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்ட இந்த ராயல் என்பீல்ட் பைக்கில் சவுகரியமான பயணத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

அகலமான நெடுஞ்சாலைகளில் தொலைத்தூர பயணங்களுக்கு புதிய மீட்டியோர் 350 சரியானதாக விளங்கும். பைக்கில் சிறப்பம்சங்களாக ஒருங்கிணைக்கப்பட்ட ஹலோஜன் ஹெட்லேம்ப்கள், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இணையா வடிவத்தில் பின் பயணிக்கு கைப்பிடி உள்ளிட்டவை உள்ளன.

ப்ளூடூத் வழியாக ஸ்மார்போன் உடன் இணைக்கும் வசதி கொண்ட இதன் டிஜிட்டல் க்ளஸ்ட்டரின் மூலம் பைக் செல்லும் திசையினை அறிந்து கொள்ளலாம். அலாய் சக்கரங்கள், ப்ரேக் மற்றும் க்ளட்ச் லிவர்கள் அனைத்தும் புதியதாக அப்டேட் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

சற்று திருத்தியமைக்கப்பட்ட டிசைனிலான பெட்ரோல் டேங்க் புதிய வடிவில் மூடியினை கொண்டுள்ள பைக்கின் பக்கவாட்டு பகுதியும் மற்ற ராயல் என்பீல்டு பைக்குகளுடன் ஒப்பிடும்போது மிகவும் தனித்துவமான தோற்றத்தில் உள்ளது.

புதிய தலைமுறை யுசிஇ 350 ஏர் கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை புதிய மீட்டியோர் 350 பைக், ஓவர் ஹெட் காம் சிஸ்டத்துடன் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படவுள்ள இந்த என்ஜினை பெறும் முதல் ராயல் என்பீல்டு தயாரிப்பாக மீட்டியோர் 350 விளங்கவுள்ளது.

விரைவான ஆக்ஸலேரேஷனை வழங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த 346சிசி சிங்கிள்-சிலிண்டர், ஃப்யூல் இன்ஜெக்டட் என்ஜின் அதிகப்பட்சமாக 20 பிஎச்பி மற்றும் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜின் அமைப்பில் பழமை வாய்ந்த தட்டு வால்வு இணைக்கப்பட்டுள்ளது.

மீட்டியோர் 350-ல் உள்ள மற்றொரு முக்கியமான மாற்றம் என்னவென்றால் அதன் புதிய மாடுலர் ஜே ப்ளாட்ஃபாரம். மற்ற ராயல் என்பீல்டு 350சிசி பைக்குகளுக்கும் விரைவில் வழங்கப்படவுள்ளதாக கூறப்படும் இந்த ப்ளாட்ஃபாரம் தான் மீட்டியோர் 350-க்கு புதிய சேசிஸ் மற்றும் புதிய என்ஜின் அமைப்பை வழங்க அனுமதிக்கிறது.

இரு சக்கரங்களிலும் ப்ரேக் அமைப்பாக டிஸ்க் ப்ரேக்கை பெற்றுள்ள இந்த புதிய பைக்கில் ட்யூல்-சேனல் ஏபிஎஸ்-ம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேலும் வாடிக்கையாளர் பாதுகாப்பை எதிர்பார்த்தால் அதற்கும் கூடுதல் ஆக்ஸஸரீகள் தேர்வை தயாரிப்பு நிறுவனம் தயாராக வைத்துள்ளது.
பஜாஜ் டோமினார் 400 மற்றும் ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக விளங்கவுள்ள இந்த ராயல் என்பீல்டு பைக்கின் விலையை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.65 லட்சத்தில் எதிர்பார்க்கலாம்.