ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியானது!

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. மிக நீண்ட தாமதத்திற்கு பின்னர், இந்த மோட்டார்சைக்கிள் அறிமுக தேதி வெளியாகி இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியானது!

இந்தியாவின் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 மிக சரியானத் தேர்வாக இருந்து வந்தது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்த நிலையில், இந்த மோட்டார்சைக்கிளின் எஞ்சின் மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுடன், க்ரூஸர் மார்க்கெட்டில் பல நவீன அம்சங்கள் கொண்ட புதிய மாடல்களும் களமிறங்கி வருவதால் நெருக்கடி ஏற்பட்டது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியானது!

இந்த விஷயங்களை மனதில் வைத்து தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளை முற்றிலும் புதிய தலைமுறை அம்சங்களுடன் மேம்படுத்தி உள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். தண்டர்பேர்டு என்ற பெயரை மாற்றி மீட்டியோர் 350 என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியானது!

கடந்த மார்ச் மாதமே விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய மாடல், கொரோனாவால் தொடர்ந்து தள்ளிப் போய் வந்தது. இந்த நிலையில், வரும் நவம்பர் 6ந் தேதி புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியானது!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 'J' என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ் இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் பழைய மாடலில் இருந்து அதிக வேறுபாடுகளுடன் வர இருக்கிறது. புதிய சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியானது!

இதுவரை வெளிவந்த தகவல்களின்படி, புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் ஃபயர்பால், ஸ்டல்லர், சூப்பர்நோவா ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில்வா அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு வேரியண்ட்டும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கும், பயன்பாட்டிற்கும் ஏற்ற சிறப்பம்சங்களை பெற்றிருக்கும். பிரத்யேக வண்ணத்தில், விண்ட் ஸ்க்ரீன் அமைப்பு மற்றும் டயர்களின் தன்மை ஆகியவற்றில் வேறுபடும்.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியானது!

இந்த புதிய மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளில் மிக முக்கிய அம்சமாக புளூடூத் இணைப்பு வசதியுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட உள்ளது. இதன்மூலமாக, ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொண்டு நேவிகேஷன் மற்றும் போன் அழைப்புகளை கட்டுப்படுத்தும் வசதிகளை ஓட்டுபவர் பெற முடியும்.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியானது!

வட்ட வடிவிலான ஹெட்லைட், நேர்த்தியாக செதுக்கப்பட்ட பெட்ரோல் டேங்க், பாபர் வகை மோட்டார்சைக்கிள்கள் போன்ற பின்புற வால் அமைப்பு ஆகியவை இதன் தனித்துவமான அம்சங்களாக இருக்கும்.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் அறிமுக தேதி அதிகாரப்பூர்வ வெளியானது!

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் மோட்டார்சைக்கிளில் 350 யூசிஇ கட்டமைப்பு கொண்ட 346 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. அதிக செயல்திறன், குறைவான அதிர்வுகள் கொண்டதாக மேம்பட்ட உணர்வை இந்த புதிய எஞ்சின் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். முன்புறத்தில் டெலிஸ்கோ்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டியூவல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கும்.

Images Source: Automobili Infiniti/Instagram

Most Read Articles

English summary
Royal Enfield will finally be launching the Meteor 350 motorcycle in India on November 6, 2020. The Royal Enfield Meteor 350 will be an all-new motorcycle offering from the brand, which will replace the legendary Thunderbird line-up.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X