ஐரோப்பிய சந்தையை கலக்கப்போகும் நம்ம ஊரு ராயல் என்பீல்டு பைக்... அங்க விலை எவ்ளோனு தெரியுமா?

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஐரோப்பிய சந்தையை கலக்கப்போகும் நம்ம ஊரு ராயல் என்பீல்டு பைக்... அங்க விலை எவ்ளோனு தெரியுமா?

இந்தியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புத்தம் புதிய மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) ரெட்ரோ-க்ரூஸர் மோட்டார்சைக்கிளை ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அங்கு 3749 பவுண்டுகள் என்ற விலையில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் விலை தொடங்குகிறது.

ஐரோப்பிய சந்தையை கலக்கப்போகும் நம்ம ஊரு ராயல் என்பீல்டு பைக்... அங்க விலை எவ்ளோனு தெரியுமா?

இது இந்திய மதிப்பில் சுமார் 3.69 லட்ச ரூபாய் ஆகும். ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் மூன்று வேரியண்ட்களும் (ஃபயர்பால், ஸ்டெல்லர், சூப்பர் நோவா) ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் கடந்த நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஐரோப்பிய சந்தையை கலக்கப்போகும் நம்ம ஊரு ராயல் என்பீல்டு பைக்... அங்க விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் வெளிநாட்டு சந்தைகளிலும் இந்த பைக் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக, மீட்டியோர் 350 விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐரோப்பிய சந்தையை கலக்கப்போகும் நம்ம ஊரு ராயல் என்பீல்டு பைக்... அங்க விலை எவ்ளோனு தெரியுமா?

தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்கனவே விற்பனையில் இருந்து விலக்கி விட்டது. முற்றிலும் புத்தம் புதிய பிளாட்பார்ம் அடிப்படையில் மீட்டியோர் 350 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த பைக்கில், 349 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு, எஸ்ஓஹெச்சி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய சந்தையை கலக்கப்போகும் நம்ம ஊரு ராயல் என்பீல்டு பைக்... அங்க விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 உள்ளிட்ட ரெட்ரோ க்ரூஸர் மோட்டார்சைக்கிள்கள் உடன் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 போட்டியிட்டு வருகிறது.

ஐரோப்பிய சந்தையை கலக்கப்போகும் நம்ம ஊரு ராயல் என்பீல்டு பைக்... அங்க விலை எவ்ளோனு தெரியுமா?

இதில், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளும் இந்திய சந்தைக்கு புது வரவுதான். சமீபத்தில்தான் இந்த புத்தம் புதிய பைக்கை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஹோண்டாவின் பிரீமியம் பிக்விங் டீலர்ஷிப்கள் வாயிலாக ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய சந்தையை கலக்கப்போகும் நம்ம ஊரு ராயல் என்பீல்டு பைக்... அங்க விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த பைக்கிற்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய சந்தையில் மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் வேரியண்ட்களை பொறுத்து 1.75 லட்ச ரூபாய் முதல் 1.90 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்து கொண்டுள்ளது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஐரோப்பிய சந்தையை கலக்கப்போகும் நம்ம ஊரு ராயல் என்பீல்டு பைக்... அங்க விலை எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் வேரியண்ட்களை பொறுத்து 1.85 லட்ச ரூபாய் முதல் 1.90 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மீட்டியோர் 350 மட்டுமல்லாது, கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் உடனும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Royal Enfield Meteor 350 Retro-cruiser Motorcycle Launched In Europe - Details. Read in Tamil
Story first published: Thursday, December 10, 2020, 15:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X