ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350: எந்த வேரியண்ட் உங்களுக்கு சரியா இருக்கும்? பார்க்கலாமாங்க!

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 மோட்டார்சைக்கிளின் புதிய தலைமுற மாடல் மீட்டியோர் 350 என்ற பெயரில் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய மாடலின் பல முக்கிய அம்சங்களையும், இந்த செய்தியின் இறுதியில் மூன்று வேரியண்ட்டுகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகளையும் இந்த செய்தியில் தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350: வேரியண்ட்டுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்னென்ன?

புதிய தலைமுறை அம்சங்கள்

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சில டிசைன் மாற்றங்களை செய்து மீட்டியோர் 350 என்ற பெயரில் இந்த மோட்டார்சைக்கிள் களமிறக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் சென்னை மற்றும் இங்கிலாந்தில் உள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சேர்ந்த பொறியாளர்களால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350: வேரியண்ட்டுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்னென்ன?

டிசைன் அம்சங்கள்

வட்ட வடிவிலான ஹெட்லைட், அதே வட்ட வடிவில் எல்இடி பகல்நேர விளக்கு அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கண்ணீர் துளி வடிவிலான பெட்ரோல் டேங்க், அகலமான இருக்கை அமைப்பு, கால்களை வசதியாக வைத்துக் கொள்வதற்கு ஏதுவான ஃபுட் பெக்குகள், உயரமான ஹேண்டில்பார் அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350: வேரியண்ட்டுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்னென்ன?

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இந்த புதிய மாடலில் திரை மின்னணு திரை கொண்ட ஒரு அனலாக் டயல் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. இதில், அனலாக் ஸ்பீடோமீட்டர் உள்ளது. சிறிய மின்னணு திரை மூலமாக ஓடிய தூரம், தினசரி பயணங்களை தெரிந்து கொள்வதற்கான ட்ரிப் மீட்டர், எரிபொருள் அளவு உள்ளிட்டவை தெரிந்து கொள்ளலாம். அதற்கு அருகில் சிறிய அளவில் டிஎஃப்டி திரை கொண்ட சாதனம் நேவிகேஷன் வசதிக்காக அளிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350: வேரியண்ட்டுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்னென்ன?

நேவிகேஷன் வசதி

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளின் நேவிகேஷன் திரை சாதனத்தை புளூடூத் மூலமாக ஸ்மார்ட்ஃபோனுடன் இணைத்துக் கொள்ளலாம். ராயல் என்ஃபீல்டு மொபைல்போன் அப்ளிகேஷன் மூலமாக இந்த வசதியை பெற முடியும். டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியை இது அளிக்கும். நீண்ட தூர பயணங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த மோட்டார்சைக்கிளின் மிக முக்கிய அம்சமாக இது பார்க்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350: வேரியண்ட்டுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்னென்ன?

எஞ்சின்

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளில் எலெக்ட்ரிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட மேம்படுத்தப்பட்ட 350 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350: வேரியண்ட்டுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்னென்ன?

சஸ்பென்ஷன் & பிரேக் சிஸ்டம்

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் 130 மிமீ டிராவல் கொண்ட 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டியூவல் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மோட்டார்சைக்கிளில் முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 270 டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இதன் முக்கிய பாதுகாப்பு அம்சமாக உள்ளது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350: வேரியண்ட்டுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்னென்ன?

ஃபயர்பால் வேரியண்ட் (பேஸ் வேரியண்ட்)

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளின் விலை குறைவான வேரியண்ட்டாக வந்துள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருந்த தண்டர்பேர்டு 350எக்ஸ் மோட்டார்சைக்கிளின் சாயலை இது பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த வேரரியண்ட்டானது சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இதன் ரகத்திலான மோட்டார்சைக்கிள்களில் இந்த வண்ணத் தேர்வில் கிடைக்கும் ஒரே மாடல் இதுதான். மேலும், சாதாரண அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் விண்ட்ஸ்க்ரீன் மற்றும் பின்புறத்தில் பேக் ரெஸ்ட் இல்லை. கருப்பு வண்ண புகைப்போக்கி குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350: வேரியண்ட்டுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்னென்ன?

ஸ்டெல்லர் வேரியண்ட்

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக கருப்பு வண்ண அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. க்ரோம் பூச்சுடன் கூடிய புகைப்போக்கி குழாய், பேக்ரெஸ்ட் ஆகியவை உள்ளன. பெட்ரோல் டேங்கில் ராயல் என்ஃபீல்டு 3டி பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. இந்த வேரியண்ட்டானது சிவப்பு, நீலம், கருப்பு ஆகிய வண்ணத் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350: வேரியண்ட்டுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்னென்ன?

சூப்பர்நோவா

விலை உயர்ந்த இந்த வேரியண்ட்டில் முன்புறத்தில் விண்ட்ஸ்க்ரீன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மெஷின் கட் அலாய் வீல்கள், 3டி லோகோ, டியூவல் டோன் வண்ணத் தேர்வுகள், பெட்ரோல் டேங்க் வண்ணத்தில் இருக்கைகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்த மோட்டார்சைக்கிளுக்கு எக்கச்சக்கமான கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் அழகு கூட்டும் பணிகளை ராயல் என்ஃபீல்டு வழங்குகிறது.

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350: வேரியண்ட்டுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்னென்ன?

விலை விபரம்

ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா ஆகிய மூன்று விதமான மாடல்களில் 15 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். வேரியண்ட், வண்ணத் தேர்வு அடிப்படையில் ரூ.1.75 லட்சம் முதல் ரூ.1.90 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

Most Read Articles

English summary
Here some important things to know about all new Royal Enfield Meteor 350.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X