ராயல் என்பீல்டு பைக்கின் பழுதை சரிசெய்ய முடியாமல் தவிக்கிறீர்களா? உங்களுக்காகவே ‘சக்கரங்களில் சேவை’

ராயல் என்பீல்டின் நடமாடும் பைக் சேவை மையம் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டு பைக்கின் பழுதை சரிசெய்ய முடியாமல் தவிக்கிறீர்களா? உங்களுக்காகவே ‘சக்கரங்களில் சேவை’

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் சக்கரங்களில் சேவை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த சேவை ஆனது வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே சென்று அவர்களது பைக்குகளின் பழுதை சரிப்பார்க்கும் வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பைக்குகளின் மூலம் நடத்தப்படும் ஒன்றாகும்.

ராயல் என்பீல்டு பைக்கின் பழுதை சரிசெய்ய முடியாமல் தவிக்கிறீர்களா? உங்களுக்காகவே ‘சக்கரங்களில் சேவை’

ஆனால் அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில் போக்குவரத்து கிடுக்குபிடியினாலும், கொரோனாவின் பயத்தினால் அடையாளம் தெரியாதவரை சந்திக்க வாடிக்கையாளர்கள் விரும்பாததினாலும் இந்த சேவை பெரியளவில் செயல்பாட்டில் இல்லை.

ராயல் என்பீல்டு பைக்கின் பழுதை சரிசெய்ய முடியாமல் தவிக்கிறீர்களா? உங்களுக்காகவே ‘சக்கரங்களில் சேவை’

ஆனால் உண்மையில் தற்போதைய இக்கட்டான சூழ்நிலைக்கு இவ்வாறான சேவைகளே நிச்சயம் தேவை. பிரத்யேகமாக மாற்றியமைப்பட்டு இந்த சேவையில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் பைக்குகள், பழுது பார்க்க தேவையான கருவிகள் மற்றும் வாடிக்கையாளரின் பைக்கிற்கு தேவையான உதிரி பாகங்களை வைக்க ஏதுவான பாக்ஸ்களுடன் உள்ளன.

ராயல் என்பீல்டு பைக்கின் பழுதை சரிசெய்ய முடியாமல் தவிக்கிறீர்களா? உங்களுக்காகவே ‘சக்கரங்களில் சேவை’

இந்த சர்வீஸ் ப்ளாட்ஃபாரம், 90 சதவீத வழக்கமான சேவைகளையும் பழுது தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் மூலமாக மிகவும் பெரிய அளவிலான பழுதுகளை தவிர்த்து மற்றவற்றை வீட்டில் இருந்தப்படியே முடித்து கொள்ளலாம்.

ராயல் என்பீல்டு பைக்கின் பழுதை சரிசெய்ய முடியாமல் தவிக்கிறீர்களா? உங்களுக்காகவே ‘சக்கரங்களில் சேவை’

வழக்கமான சாலையோர உதவி வாகனங்களை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான பழுதுகளை இந்த சக்கரங்களில் சேவை திட்டத்தின் பைக்குகள் தீர்க்கும். இந்த ஜூலை மாத துவக்கத்தில் இருந்து ராயல் என்பீல்டு சேவை மையத்தில் கிடைக்க பெற்றுவரும் இந்த சேவைக்காக புல்லட் ட்ரையல்ஸ் பைக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு பைக்கின் பழுதை சரிசெய்ய முடியாமல் தவிக்கிறீர்களா? உங்களுக்காகவே ‘சக்கரங்களில் சேவை’

இந்த சேவைக்கான பணியாளர்கள் அரவிந்துஜா மோட்டார்ஸில் இருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த திட்டத்தில் சமீபத்தில் தமிழ்நாடு தீயணைப்பு துறைக்கு சொந்தமான ராயல் என்பீல்ட் பைக் ஒன்று பழுதுபார்க்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு பைக்கின் பழுதை சரிசெய்ய முடியாமல் தவிக்கிறீர்களா? உங்களுக்காகவே ‘சக்கரங்களில் சேவை’

தற்சமயம் இந்நிறுவனத்தின் சர்வீஸ் மையங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த சக்கரங்களில் சேவை, விரைவில் அனைத்து டீலர்ஷிப்களிலும் கிடைக்கவுள்ளது. தற்சமயம் டீலர்ஷிப்களுக்கு சென்று பைக்குகளில் ஏற்பட்டுள்ள பழுதிற்கான தீர்வுகளை காண்பது என்பது சில பகுதிகளில் முடியாத காரியமாகவும், தற்போதைய சூழ்நிலையில் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகும் உள்ளது.

ராயல் என்பீல்டு பைக்கின் பழுதை சரிசெய்ய முடியாமல் தவிக்கிறீர்களா? உங்களுக்காகவே ‘சக்கரங்களில் சேவை’

மேலும் டீலர்ஷிப்களிலும் குவிந்துவரும் சேவை நியமனங்களை சமாளிக்க இந்த திட்டம் நிச்சயம் உதவிகரமாக இருக்கும். தொடர்பில்லா சேவை அனுபவத்தை பெற வாடிக்கையாளர்கள் இ-பேமண்ட் முறையிலும் சேவை கட்டணத்தை செலுத்தலாம்.

Most Read Articles

English summary
Royal Enfield service on wheels becomes operational in Chennai
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X