சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் மீண்டும் புத்துயிர் பெறுகிறது? - புதிய தகவல்கள்!

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் மீண்டும் புத்தியிர் பெற இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் மீண்டும் புத்துயிர் பெறுகிறது? - புதிய தகவல்கள்!

ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரபலமான சூப்பர் பைக் மாடல் ஹயபுசா. 1999ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹயபுசா, அப்போதைக்கு உலகின் அதிவேக தயாரிப்பு நிலை சூப்பர் பைக் மாடலாகவும் பெயர் பெற்றிருந்தது.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் மீண்டும் புத்துயிர் பெறுகிறது? - புதிய தகவல்கள்!

மிக நீண்ட காலமாக உலகின் பல்வேறு நாடுகளின் சூப்பர் பைக் பிரியர்களின் கனவு மாடலாக இருந்து வந்தது சுஸுகி ஹயபுசா. இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பானில் மாசு உமிழ்வு விதிகள் கடுமையாக்கப்பட்ட நிலையில், கடந்த 2018ம் ஆண்டு முதல் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டது.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் மீண்டும் புத்துயிர் பெறுகிறது? - புதிய தகவல்கள்!

மேலும், ஹயபுசாவுக்கு விடை கொடுக்கப்பட்டதாகவும் கருதப்பட்டது. ஆனால், தற்போது சுஸுகி ஹயபுசாவுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு மீண்டும் சந்தைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் மீண்டும் புத்துயிர் பெறுகிறது? - புதிய தகவல்கள்!

ஜப்பானில் வெளிவரும் ஆட்டோபை என்ற ஆட்டோமொபைல் பத்திரிக்கையில் புதிய சுஸுகி ஹயபுசாவின் மாதிரி படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், பழைய மாடலில் இருந்து சில மாற்றங்களுடன் புதிய ஹயபுசா வர இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் மீண்டும் புத்துயிர் பெறுகிறது? - புதிய தகவல்கள்!

புதிய சேஸி மற்றும் யூரோ-5 மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகராக மேம்படுத்தப்பட்ட எஞ்சினுடன் புதிய ஹயபுசா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த பைக்கின் யூரோ-5 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வர இருப்பது, இந்தியாவில் பிஎஸ்6 தரத்திலும் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் மீண்டும் புத்துயிர் பெறுகிறது? - புதிய தகவல்கள்!

புதிய சுஸுகி ஹயபுசா பைக்கில் 1,440 சிசி எஞ்சினுடன் செமி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும் என்றும் ஆட்டோபை பத்திரிக்கையின் செய்தி தெரிவிக்கிறது.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் மீண்டும் புத்துயிர் பெறுகிறது? - புதிய தகவல்கள்!

மேலும், ரைடிங் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய தொழில்நுட்ப அம்சங்களும் கொடுக்கப்பட்டு இருக்கும். சஸ்பென்ஷனும் மேம்படுத்தப்பட்டு வருவதால், கையாளுமை மேம்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் மீண்டும் புத்துயிர் பெறுகிறது? - புதிய தகவல்கள்!

இவை அனைத்தும் யூகத் தகவல்களாகவே இருந்து வருகின்றன. ஆனால், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. ஆனால், சுஸுகி ஹயபுசா விற்பனைக்கு வந்தால், அது நிச்சயம் உலக அளவில் சூப்பர் பைக் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

Most Read Articles

English summary
Suzuki motorcycle company has reportedly been working on the new Hayabusa super bike for the global market.
Story first published: Saturday, October 10, 2020, 12:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X