இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஸ்மார்ட்ரானின் மலிவு விலை மின்சார டூ-வீலர்... ஆனா நம்மாலதான் வாங்க முடியாது..!

ஸ்மார்ட்ரான் நிறுவனம் மிக மிக குறைந்த விலையில் கார்கோ பயன்பாட்டிற்கான சிறப்பு மின்சார இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஸ்மார்ட்ரானின் மலிவு விலை மின்சார டூ-வீலர்... விலை ரொம்ப கம்மி - ஆனா நம்மால வாங்க முடியாது!!

ஆரம்பநிலை மின்வாகன உற்பத்தி நிறுவனமான ஸ்மார்ட்ரான் கார்கோ பயன்பாட்டிற்கான பிரத்யேக வடிவமைப்புக் கொண்ட மின்சார இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மின்சார இருசக்கர வாகனம் பெற்றிருக்கும் சிறப்பு வசதிகள் நம் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஸ்மார்ட்ரானின் மலிவு விலை மின்சார டூ-வீலர்... விலை ரொம்ப கம்மி - ஆனா நம்மால வாங்க முடியாது!!

குறிப்பாக, அதன் தோற்றம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் நம்மை பெருத்த ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. டிபைக் ஃப்ளெக்ஸ் ( tbike flex) எனும் புதுமுக மின்சார இருசக்கர வாகனத்தையே ஸ்மார்ட்ரான் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மின்சார இருசக்கர வாகனத்திற்கு ரூ. 40 ஆயிரம் என்ற விலையையே அது நிர்ணயித்துள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஸ்மார்ட்ரானின் மலிவு விலை மின்சார டூ-வீலர்... விலை ரொம்ப கம்மி - ஆனா நம்மால வாங்க முடியாது!!

இதனைக் கொண்டு 40 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்விக்கி போன்ற டெலிவரி சேவைக்கு மட்டுமே பயன்படும் வகையில் இப்பைக் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சேவையைக் கருத்தில் கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்டிருப்பதால் இதன் ரேஞ்ஜ் விகிதமும் சற்று கூடுதலாக வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஸ்மார்ட்ரானின் மலிவு விலை மின்சார டூ-வீலர்... விலை ரொம்ப கம்மி - ஆனா நம்மால வாங்க முடியாது!!

இந்த மின்சார இருசக்கர வாகனத்தை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 75 முதல் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம். இந்த தகவலை ஸ்மார்ட்ரான் நிறுவனம் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, டிபைக் ஃப்ளெக்ஸ் மின்சார இருசக்கர வாகனத்தை வெவ்வேறு விதமான பேட்டரி பேக்கேஜ் தேர்வுகளில் வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஸ்மார்ட்ரானின் மலிவு விலை மின்சார டூ-வீலர்... விலை ரொம்ப கம்மி - ஆனா நம்மால வாங்க முடியாது!!

75 முதல் 120 கிமீ வரையிலான ரேஞ்ஜைக் கொடுக்கும் பேட்டரி பேக்குகளிலேயே அவை வழங்கப்பட இருக்கின்றன. இத்தகைய பேட்டரி திறன் மற்றும் மிக குறைந்த விலை உள்ளிட்டவையே நம்மைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. அதிலும், மின்சார வாகன பிரியர்களை இந்த கார்கோ வாகனம் வெகுவாகவே கவர்ந்துள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஸ்மார்ட்ரானின் மலிவு விலை மின்சார டூ-வீலர்... விலை ரொம்ப கம்மி - ஆனா நம்மால வாங்க முடியாது!!

இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆகும். ஆகையால், இதனை இயக்க ஓட்டுநர் உரிமமோ அல்லது ஆர்சி பதிவோ தேவைப்படாது. இதுமட்டுமின்றி, ஜியோ ஃபென்சிங், செல்போன் இணைப்பு, ரிமோட்டால் லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி, இன்டெக்ரேடட் டிகேர் எனும் எக்கச்சக்கமான அளவில் சிறப்பு வசதிகளை இந்த புதுமுகி மின்சார இருசக்கர வாகனம் தாங்கி நிற்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஸ்மார்ட்ரானின் மலிவு விலை மின்சார டூ-வீலர்... விலை ரொம்ப கம்மி - ஆனா நம்மால வாங்க முடியாது!!

இந்த சிறப்பு அம்சங்களைப் பார்க்கையில், ஒரு கார்கோ மின்சார வாகனத்தில் இத்தனை சிறப்பு வசதிகளா?, என்று கேள்வியெழுப்ப வைக்கின்றது. மேலும், இந்த மின்சார இருசக்கர வாகனத்தை கூடுதல் கஸ்டமைஸ் செய்து வழங்க இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தங்களின் நிறுவனத்திற்கான தேவையை முகவர்களால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது தெரியவருகின்றது.

Most Read Articles

English summary
Smartron TBike Flex Cargo Electric Bike Launched In India. Read In Tamil.
Story first published: Thursday, December 31, 2020, 10:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X