சிறப்பு வசதிகளுடன் ஸ்மார்ட்ரான் இ-பைக் அறிமுகம்... ஆன இதனை சொந்தமாக்குவது ரொம்ப கஸ்டம்... ஏன் தெரியுமா?

சிறப்பு வசதிகளுடன் ஸ்மார்ட்ரான் டி-பைக் ஒன் ப்ரோ எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பிரத்யேகமாக வாடகை மற்றும் டெலிவரி சேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் வகையில் தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பு வசதிகளுடன் ஸ்மார்ட்ரான் இ-பைக் அறிமுகம்... ஆன இதனை சொந்தமாக்குவது ரொம்ப கஸ்டம்... ஏன் தெரியுமா?

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்ரான் நிறுவனம், அதன் புதுமுக இ-பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. டி-பைக் ஒன் ப்ரோ (tbike One Pro) எனும் மாடலையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் க்ராஸோவர் ரக ஸ்மார்ட் இ-பைக்காகும். இதனை வாடகை மற்றும் டெலிவரி உள்ளிட்ட பொது சேவையில் ஈடுபடுத்தும் நோக்கிலேயே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறியிருக்கின்றது.

சிறப்பு வசதிகளுடன் ஸ்மார்ட்ரான் இ-பைக் அறிமுகம்... ஆன இதனை சொந்தமாக்குவது ரொம்ப கஸ்டம்... ஏன் தெரியுமா?

இதற்காக பிரபல ட்ராவல் டெக் நிறுவனமான பிலைவ் உடன் ஸ்மார்ட்ரான் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இவர்கள் இருவரும் இணந்தே விரைவில் புதிய டி-பைக் ஒன் ப்ரோ இ-பைக்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருக்கின்றனர். இதற்கான கூட்டணியே இவர்கள் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது.

சிறப்பு வசதிகளுடன் ஸ்மார்ட்ரான் இ-பைக் அறிமுகம்... ஆன இதனை சொந்தமாக்குவது ரொம்ப கஸ்டம்... ஏன் தெரியுமா?

ஊரை சுற்றிப் பார்ப்பதற்காக விஜயம் செய்து, ரெசார்ட்டுகளில் தங்கும் விருந்தினர்களுக்கு பயன்படுகின்ற வகையிலும், வாடகை வாகன துறையில் ஈடுபடுத்துகின்ற நோக்கிலும் புதிய ஸ்மார்ட் இ-பைக் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதுமட்டுமின்றி இ-வணிகம், இ-மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்வதற்கும் டி-பைக் ஒன் ப்ரோ பயன்படுத்தப்பட உள்ளது.

சிறப்பு வசதிகளுடன் ஸ்மார்ட்ரான் இ-பைக் அறிமுகம்... ஆன இதனை சொந்தமாக்குவது ரொம்ப கஸ்டம்... ஏன் தெரியுமா?

டிபைக் ஒன் ப்ரோ ஓர் மிக புத்திசாலித்தனமான மற்றும் இணைக்கப்பட்ட மின்சார பைக் ஆகும். ஆகையால், இதனைப் பயன்படுத்தும் நபர் தனித்துவமான மற்றும் அற்புதமான அனுபவத்தை நிச்சயம் பெறுவார் என ஸ்மார்ட்ரான் கூறுகின்றது. இதுமட்டுமின்றி இதனை இயக்குவதும் மிக சுலபம் என கூறப்படுகின்றது.

சிறப்பு வசதிகளுடன் ஸ்மார்ட்ரான் இ-பைக் அறிமுகம்... ஆன இதனை சொந்தமாக்குவது ரொம்ப கஸ்டம்... ஏன் தெரியுமா?

முதல் கட்டமாக இந்தியாவின் 14 நகரங்களில் இந்த இ-பைக் பயன்பாட்டிற்கு களமிறக்கப்பட இருக்கின்றது. நகரங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை. ஸ்மார்ட் கிளவுட் இணைப்பு வசதியுடன் ஒவ்வொரு நகரத்திலும் இ-பைக் இயக்கப்பட இருக்கின்றது. ஆகையால், பயன்பாட்டாளரால் எளிதில் அனைத்து பாதைகளையும் எளிதில் கண்டறிந்து பயணிக்க முடியும். இதற்காக நேவிகேஷன் போன்ற சிறப்பு வசதிகளும் இதில் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு வசதிகளுடன் ஸ்மார்ட்ரான் இ-பைக் அறிமுகம்... ஆன இதனை சொந்தமாக்குவது ரொம்ப கஸ்டம்... ஏன் தெரியுமா?

மேலும், இந்திய பொறியியல் திறனில் இந்தியா மற்றும் உலக நாடுகள் சிலவற்றிற்காக இந்த பைக் தயாரிக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் பெருமிதம் கூறுகின்றது. பூட்டான், மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த இ-பைக் களமிறக்கப்பட இருக்கின்றது. இதனை ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் தலைவர் மஹேஷ் லிங்காரெட்டி உறுதி செய்துள்ளார்.

சிறப்பு வசதிகளுடன் ஸ்மார்ட்ரான் இ-பைக் அறிமுகம்... ஆன இதனை சொந்தமாக்குவது ரொம்ப கஸ்டம்... ஏன் தெரியுமா?

டி-பைக் ஒன் புரோ டிரான்எக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது. இது செயற்கை நுண்ணறிவு (AIoT) தளம் ஆகும். இந்த தொழில்நுட்பமே பல்வேறு தகவல்களை விரல் நுணியில் பயனர்களுக்கு வழங்க இருக்கின்றது. இத்துடன், ரிமோட் லாக் மற்றும் அன்லாக் வசதியும் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்று பல்வேறு சிறப்பு வசதிகளை புதிய ஸ்மார்ட் இ-பைக் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Smartron TBike One Pro Electric Bike Unveiled In India. Read In Tamil.
Story first published: Thursday, December 10, 2020, 10:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X