புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் 7 முக்கிய அம்சங்கள்!

பெரும் ஆவலுக்கு மத்தியில் புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் 7 முக்கிய அம்சங்கள்!

கூடுதல் தேர்வு

இந்தியாவில் ஏற்கனவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கைவிட குறைவான விலை தேர்வாக வந்துள்ளது. அதேநேரத்தில், கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் டிசைன் அம்சங்கள் இந்த பைக்கில் பிரதிபலிக்கின்றன. பெரிய எரிபொருள் கலன், அகலமான இருக்கை அமைப்பு, நீண்ட தூரம் பயணிப்பதற்கு ஏதுவான ரைடிங் பொசிஷன் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கலாக இருக்கும்.

புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் 7 முக்கிய அம்சங்கள்!

டிசைன் அம்சங்கள்

இந்த பைக்கிலும் ஹாலஜன் பல்புகள் கொண்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டரும், எல்இடி பகல்நேர விளக்குகளும் உள்ளன. இந்த பைக்கானது ஆரஞ்ச் மற்றும் வெள்ளை வண்ண கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கொண்டதாகவும், கருப்பு மற்றும் ஆரஞ்ச் வண்ண ஸ்டிக்கர் அலங்காரம் கொண்டதாகவும் கிடைக்கிறது.

புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் 7 முக்கிய அம்சங்கள்!

எஞ்சின்

கேடிஎம் 250 ட்யூக் பைக்கில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின்தான் புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சிங்கிள் சிலிண்டர் கொண்ட 248சிசி எஞ்சின் அதிகபட்சமாக 29.5 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் தொழில்நுட்ப வசதியும் உள்ளது.

புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் 7 முக்கிய அம்சங்கள்!

சஸ்பென்ஷன்

புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கில் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற WP APEX சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது. முன்புறத்தில் 170 மிமீ டிராவல் கொண்ட 43 மிமீ ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 177 மிமீ டிராவல் கொண்ட மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன.

புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் 7 முக்கிய அம்சங்கள்!

பிரேக் சிஸ்டம்

முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் உள்ளன. டியூவல் பர்ப்போஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் முன்சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் 7 முக்கிய அம்சங்கள்!

தொழில்நுட்ப வசதிகள்

புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்ில் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆஃப்ரோடு மோடில் வைக்கும்போது பின்புற சக்கரத்தின் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அணைத்து வைக்கப்படும். இந்த பைக்கில் எல்சிடி திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு வசதி இல்லை.

புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் 7 முக்கிய அம்சங்கள்!

விலை விபரம்

புதிய கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கிற்கு ரூ.2.48 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கைவிட ரூ.55,000 வரை விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
Here some important things you should know about new KTM 250 Adventure bike.
Story first published: Monday, November 23, 2020, 12:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X