பெண் பைக் ரைடர்களுக்கான உலகின் முதல் ஹெல்மெட் இதுதானாம்!! ஸ்டீல்பேர்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது

ஸ்டீல்பேர்டு நிறுவனம் பெண் பைக் ரைடர்களுக்கான உலகின் முதல் ஹெல்மெட்டை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஹெல்மெட்டை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம். 

பெண் பைக் ரைடர்களுக்கான உலகின் முதல் ஹெல்மெட் இதுதானாம்!! ஸ்டீல்பேர்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது

இத்தாலியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெல்மெட் விரைவில் ஐஎஸ்ஐ மற்றும் ஐரோப்பியன் தரநிலைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக ஸ்டீல்பேர்டு தெரிவித்துள்ளது.

பெண் பைக் ரைடர்களுக்கான உலகின் முதல் ஹெல்மெட் இதுதானாம்!! ஸ்டீல்பேர்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது

பெண்கள் உள்பட அனைவருக்கும் பிடித்த வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெல்மெட் சிவப்பு, வெள்ளை, நீலம், பர்பிள், பிங்க், மகேண்டா என்ற நான்கு விதமான நிறங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

பெண் பைக் ரைடர்களுக்கான உலகின் முதல் ஹெல்மெட் இதுதானாம்!! ஸ்டீல்பேர்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது

இவற்றின் ஆரம்ப விலை ரூ.1,149 ஆக நிர்ணயிக்கபடவுள்ளது. வெவ்வேறு விதமான நிறங்களில் டிகால்ஸ் உடன் இந்த ஹெல்மெட்டை பெண்கள் தங்களது தலைக்கு ஏற்ற வடிவில் பெறலாம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண் பைக் ரைடர்களுக்கான உலகின் முதல் ஹெல்மெட் இதுதானாம்!! ஸ்டீல்பேர்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது

இதற்காக 520மிமீ (எக்ஸ்.எக்ஸ்.எஸ்), 540மிமி (எக்ஸ்.எஸ்), 560மிமீ (எஸ்), 580மிமீ (எம்) மற்றும் 600மிமீ (எல்) என வெவ்வெறு விதமான அளவுகளில் இந்த ஹெல்மெட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

பெண் பைக் ரைடர்களுக்கான உலகின் முதல் ஹெல்மெட் இதுதானாம்!! ஸ்டீல்பேர்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது

ஹெல்மெட்டில் காற்று செல்ல துளைகள் பெண்கள் பெரும்பான்மையானவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பூத்தையல்கள் போன்ற அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பெண் பைக் ரைடர்களுக்கான உலகின் முதல் ஹெல்மெட் இதுதானாம்!! ஸ்டீல்பேர்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது

இதுமட்டுமின்றி வழக்கமான இருபாலருக்குமான ஹெல்மெட்களில் இருந்து வடிவத்திலும், தலையில் பொருத்தப்படும் விதத்தில் வித்தியாசமாக இருக்கும் என்று தயாரிப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஸ்டீல்பேர்டின் இந்த ஹெல்மெட் முழுக்க முழுக்க பெண் பைக் ரைடர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஹெல்மெட் #helmet
English summary
Steelbird claims to launch “world’s first helmet for women riders” SBH-26 Bella
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X