ஸ்டட்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு புதுமுக தலைக்கவசம் அறிமுகம்... இதோட விலை மற்றும் சிறப்புகள் என்ன தெரியுமா?

ஸ்டட்ஸ் நிறுவனம் புதுமுக தலைக்கவசம் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு வசதிகள் பற்றிய தகவலை இப்பதவில் காணலாம்.

ஸ்டட்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு புதுமுக தலைக்கவசம் அறிமுகம்... இதோட விலை மற்றும் சிறப்புகள் என்ன தெரியுமா?

பிரபல ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்டட்ஸ் இந்த ஆண்டு மிகுந்த செயல்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றது. இதனை வெளிக்கொணரும் வகையில் நடப்பாண்டில் தொடர்ச்சியாக புதுமுக ஹெல்மெட்டுகளை அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அந்தவகையில் முன்னதாக சியூபி டி4 டெகோர் மற்றும் தண்டர் டி6 எனும் ஹெல்மெட்டுகளை அது அறிமுகப்படுத்தியது.

ஸ்டட்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு புதுமுக தலைக்கவசம் அறிமுகம்... இதோட விலை மற்றும் சிறப்புகள் என்ன தெரியுமா?

இந்த நிலையில், மேலும் ஒரு புதிய தலைக்கவசத்தை அது தற்போது அறிமுகப்படுத்தியிருக்கின்றது. தண்டர் டி7 எனும் புதிய ஹெல்மெட்டையே ஸ்டட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. தண்டர் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹெல்மெட்டின் தேர்வுகளை அதிகரிக்கச் செய்கின்ற வகையிலேயே இந்த ஹெல்மெட்டை அது இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது.

ஸ்டட்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு புதுமுக தலைக்கவசம் அறிமுகம்... இதோட விலை மற்றும் சிறப்புகள் என்ன தெரியுமா?

இதற்கு இந்திய மதிப்பில் ரூ. 1,795 என்ற விலையை ஸ்டட்ஸ் நிர்ணயித்துள்ளது. மீடியம் (570மிமீ), லார்ஜ் (580mm) மற்றும் எக்ஸ்ட்ரா லார்ஜ் (600mm) ஆகிய அளவுகளில் தண்டர் டி7 ஹெல்மெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன், ஏழு விதமான நிறத் தேர்வையும் இதில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்டட்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு புதுமுக தலைக்கவசம் அறிமுகம்... இதோட விலை மற்றும் சிறப்புகள் என்ன தெரியுமா?

நியான் மஞ்சள், சிவப்பு, மேட் டர்க்கைஸ், மேட் நீலம், மேட் சிவப்பு, மேட் நியான் மஞ்சள் மற்றும் மேட் நியான் பச்சை ஆகிய நிற தேர்வுகளை தண்டர் டி7 ஹெல்மெட்டில் வழங்கப்பட இருக்கின்றது. இந்த நிறங்கள் மற்றும் மேலே குறிப்பிட்ட அளவுகள் இவையே அனைத்து விதமான தலை அளவு மற்றும் விருப்பம் கொண்ட கவர்களை கவர் செய்ய போதுமானதாக உள்ளது.

ஸ்டட்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு புதுமுக தலைக்கவசம் அறிமுகம்... இதோட விலை மற்றும் சிறப்புகள் என்ன தெரியுமா?

இந்த நிறங்கள் அனைத்தும் யுவி எதிர்ப்பு திறன் கொண்டவை ஆகும். இது சூரிய ஒளியில் இருந்து வரும் கதரிவீச்சுகளைத் தடுக்க உதவும். மேலும், தலைக்கவசத்தை அணிந்து செல்லும்போது எரிச்சலை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக ஏர் வெண்டுகள் (காற்றும் புகும் வழி) வழங்கப்பட்டுள்ளன. இது நீண்ட நேரம் அணிந்திருந்தாலும்கூட எரிச்சலான அனுபவத்தை துளியளவும் வழங்காமல் பார்த்துக் கொள்ளும் என ஸ்டட்ஸ் தெரிவித்துள்ளது.

ஸ்டட்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு புதுமுக தலைக்கவசம் அறிமுகம்... இதோட விலை மற்றும் சிறப்புகள் என்ன தெரியுமா?

தொடர்ந்து, சிறிதளவும் அலர்ஜியை ஏற்படுத்தாத ஸ்பாஞ்சுகள் மற்றும் துணி லைனர்களே இந்த ஹெல்மெட்டில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஸ்டட்ஸ் கூறியிருக்கின்றது. மேலும், இது ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற ஹெல்மெட் என்றும் தெரிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Studds Launches Thunder D7 Decor Helmet In India. Read In Tamil.
Story first published: Tuesday, December 29, 2020, 18:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X