அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் விற்பனைக்கு அறிமுகம்!

பண்டிகை காலம் துவங்கி இருக்கும் நிலையில், கவர்ச்சிகரமான புதிய வண்ணத் தேர்வில் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

அட்டகாசமான புதிய வண்ணத்தில் சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர்!

பிரம்மாண்டமான முகப்புத் தோற்றம் கொண்டதாக வடிவமைக்கப்படும் மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடலாக சுஸுகி பர்க்மேன் வரிசை ஸ்கூட்டர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனையில் உள்ளன. தோற்றத்திற்கு தக்கவாறு சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர்களில் சக்திவாய்ந்த எஞ்சின் கொடுக்கப்படுகிறது.

முதல் மேக்ஸி ரக ஸ்கூட்டர்

இந்த நிலையில், இந்தியர்களுக்கும் மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடலை வழங்க வேண்டும்; அதேநேரத்தில், மிகவும் சரியான விலையில் கொடுக்க வேண்டும் என்று கருதிய சுஸுகி இருசக்கர வாகன நிறுவனம் பர்க்மேன் ஸ்ட்ரீட் என்ற மாடலை 125சிசி எஞ்சினுடன் இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்தது.

நல்ல வரவேற்பு

இந்த ஸ்கூட்டருக்கு எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த ஸ்கூட்டரின் விற்பனையை அதிகரிக்கும் விதமாக, தற்போது புதிய வண்ணத் தேர்வில் அறிமுகம் செய்துள்ளது சுஸுகி நிறுவனம்.

புதிய வண்ணத் தேர்வு

சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் இப்போது பியர்ல் சுஸுகி மீடியம் புளூ 2 என்ற பெயரிலான விசேஷ வண்ணக் கலவை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விசேஷ வண்ணத் தேர்வு மாடலுக்கு ரூ.79,700 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கவரும் டிசைன் அம்சங்கள்

இந்த புதிய வண்ணத் தேர்வு மிகவும் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. மேலும், முன்புற அப்ரான் பகுதியில் க்ரோம் பாகங்கள், முரட்டுத்தனத்தை கூட்டும் பேனல்கள், பெரிய புகைப்போக்கி மஃப்ளர் அமைப்பு மற்றும் க்ரோம் பாகங்களுடன் கவர்கிறது.

இதர வண்ணத் தேர்வுகள்

விசேஷமான புதிய நீல வண்ணத்தை தவிர்த்து, மெட்டாலிக் மேட் ஃபைப்ராயின் க்ரே, பியர்ல் மிராஜ் ஒயிட், மெட்டாலிக் மேட் பிளாக் 2 மற்றும் மெட்டாலிக் மேட் போர்டியாக்ஸ் ரெட் ஆகிய வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கிறது.

முக்கிய சிறப்பம்சங்கள்

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் மிகவும் வசதியான இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது. இருவர் பயணிப்பதற்கு சிரமம் இல்லாத வகையில் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள், காம்பி பிரேக்கிங் சிஸ்டம், முன்புறத்தில் க்ளவ் பாக்ஸ் அமைப்பு டிசி சாக்கெட் ஆகியவையும் மிக முக்கிய அம்சங்களாக உள்ளன.

பிஎஸ்-6 எஞ்சின்

சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டரில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 124சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.7 பிஎஸ் பவரையும், 10 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

தனித்துவமான தேர்வு

பண்டிகை காலத்தில் தனித்துவமான ஸ்கூட்டர் மாடலை வாங்க விரும்புவோருக்கு இந்த புதிய வண்ணக் கலவை சிறப்பான தேர்வாக இருக்கும். டிசைன், செய்லதிறன், விலை என அனைத்திலும் மதிப்புவாய்ந்த தேர்வாக கூறலாம்.

Most Read Articles

English summary
Suzuki Motorcycle has introduced ‘Pearl Suzuki Medium No. 2’ Blue Color For Burgman 125 in India.
Story first published: Wednesday, September 2, 2020, 17:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X