50 லட்சமாவது வாகனம் வெளிவந்தது... வாகன தயாரிப்பில் புதிய மைல்கல்லை கடந்த சுசுகி...

ஜப்பானை சேர்ந்த சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 50 லட்சமாவது மாதிரியாக தனித்துவமான இந்திய விற்பனை மாடல்களுள் ஒன்றாக இருக்கும் ஜிக்ஸெர் எஸ்எஃப்250 பைக் இந்நிறுவனத்தின் குருக்ராம் தொழிற்சாலையில் இருந்து தயாரிப்பு முழுவதும் நிறைவடைந்து வெளிவந்துள்ளது.

50 லட்சமாவது வாகனம் வெளிவந்தது... வாகன தயாரிப்பில் புதிய மைல்கல்லை கடந்த சுசுகி...

சுசுகி நிறுவனம் பிஎஸ்6 தரத்தில் ஜிக்ஸெர் எஸ்எஃப்250 பைக்கை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்திய சந்தையில் நுழைந்ததில் இருந்து இந்நிறுவனம் வித்தியாச வித்தியாசமான இரு சக்கர வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

50 லட்சமாவது வாகனம் வெளிவந்தது... வாகன தயாரிப்பில் புதிய மைல்கல்லை கடந்த சுசுகி...

இதனால் விரைவிலேயே தன்னை உறுதியாக நிலைநிறுத்தி கொண்ட சுசுகி நிறுவனம் போட்டி நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. இல்லையென்றால் வாகனங்களின் தயாரிப்பில் இவ்வாறு 50 லட்சத்தை தொட முடியுமா என்ன...

50 லட்சமாவது வாகனம் வெளிவந்தது... வாகன தயாரிப்பில் புதிய மைல்கல்லை கடந்த சுசுகி...

முழுக்க முழுக்க இந்நிறுவனத்தின் குருக்ராமில் உள்ள கெர்கி தவுலா தொழிற்சாலையில் படைக்கப்பட்டுள்ள இந்த சாதனை குறித்து சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கொய்சிரோ ஹிராவ் கூறுகையில், இந்த வருடத்தில் சுசுகி மோட்டார் நிறுவனம் தனது 100வது ஆண்டுவிழாவை கொண்டாடியது.

50 லட்சமாவது வாகனம் வெளிவந்தது... வாகன தயாரிப்பில் புதிய மைல்கல்லை கடந்த சுசுகி...

இதற்கிடையில் தற்போது மற்றுமொரு கொண்டாட்டமாக 50 லட்சமாவது சுசுகி இருசக்கர வாகனம் தயாரிப்பை நிறைவு செய்து வெளிவந்துள்ளது. இந்த மைல்கல் சுசுகி தயாரிப்புகளுக்கு எங்கள் வாடிக்கையாளர்களால் அளிக்கப்பட்ட அபரிமிதமான அன்பு மற்றும் நம்பிக்கையின் சான்றாகும்.

50 லட்சமாவது வாகனம் வெளிவந்தது... வாகன தயாரிப்பில் புதிய மைல்கல்லை கடந்த சுசுகி...

இந்த சாதனையை எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் எங்கள் டீலர் கூட்டாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறோம். அவர்கள் இந்தியாவில் எங்கள் பயணத்தை வெற்றிகரமாக செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர் மற்றும் 5 மில்லியனை எட்ட எங்களுக்கு பெரிதும் உதவியுள்ளனர் என தெரிவித்தார்.

50 லட்சமாவது வாகனம் வெளிவந்தது... வாகன தயாரிப்பில் புதிய மைல்கல்லை கடந்த சுசுகி...

இந்தியாவில் இருசக்கர வாகன நிறுவனங்களில் சுசுகி வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நிறுவனமாக உள்ளது. கடந்த வருடம் 2018-19 நிதியாண்டில் 5.7 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது. தற்சமயம் இந்நிறுவனம் நாடு முழுவதும் 530 டீலர்ஷிப்களை கொண்டுள்ளது.

50 லட்சமாவது வாகனம் வெளிவந்தது... வாகன தயாரிப்பில் புதிய மைல்கல்லை கடந்த சுசுகி...

இதற்கிடையில் சுசுகி நிறுவனம் ‘சுசுகி அட் யுவர் டோர்ஸ்டெப்' என்ற திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த திட்டம், வாடிக்கையாளர்கள் வாகனத்தை வாங்குவது, டெஸ்ட் ட்ரைவ் மற்றும் விற்பனைக்கு பிறகான சேவைகளை தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பெற வழி செய்யும்.

Most Read Articles
English summary
Gixxer SF 250 BS6 5 Millionth Unit - Gurugram Plant
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X