செம்ம வேட்டை காத்திருக்கு... அட்டகாசமான ஸ்டைலில் விரைவில் அறிமுகமாகிறது சுசுகி எலெக்ட்ரிக் டூ-வீலர்?

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் அதன் அட்டகாசமான மின்சார டூ-வீலரை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செம்ம வேட்டை காத்திருக்கு... அட்டகாசமான ஸ்டைலில் விரைவில் அறிமுகமாகிறது சுசுகி எலெக்ட்ரிக் டூ-வீலர்?

தற்போது ஜாம்பவான் நிறுவனங்களாக திகழ்ந்து வரும் பல நிறுவனங்கள் அதன் மின்சார வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துவிட்டநிலையில், சற்று கால தாமதமாக சுசுகி மோட்டார்சைக்கிள் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்படி, விரைவில் இதன் எலெக்ட்ரிக் வாகனம் சந்தையில் கால் தடம் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்ம வேட்டை காத்திருக்கு... அட்டகாசமான ஸ்டைலில் விரைவில் அறிமுகமாகிறது சுசுகி எலெக்ட்ரிக் டூ-வீலர்?

சுசுகி மோட்டார்சைக்கிள் பிரியர்கள் மத்தியில், அந்நிறுவனம் வெகு நீண்ட நாளாக மின்சார வாகனத்தை அறிமுகம் செய்யாமல் இருந்தது பெருத்த ஏமாற்றத்தை வழங்கி வந்தது. இந்த நிலையில்தான் சுசுகி மோட்டார் சைக்கிள் அதன் புதுமுக மின்சார வாகனத்தை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செம்ம வேட்டை காத்திருக்கு... அட்டகாசமான ஸ்டைலில் விரைவில் அறிமுகமாகிறது சுசுகி எலெக்ட்ரிக் டூ-வீலர்?

அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்த தகவலை, சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கான துணை தலைவர் (விற்பனை மற்றும் மார்க்கெட்டிங், ஆஃப்டர் சேல்ஸ்) தேவாஷிஸ் ஹண்டா உறுதிச் செய்துள்ளார்.

செம்ம வேட்டை காத்திருக்கு... அட்டகாசமான ஸ்டைலில் விரைவில் அறிமுகமாகிறது சுசுகி எலெக்ட்ரிக் டூ-வீலர்?

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. அதிலும், அண்மைக் காலங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்ததில் இருந்து மக்களின் பார்வை மின்சார வாகனங்களின் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளது.

செம்ம வேட்டை காத்திருக்கு... அட்டகாசமான ஸ்டைலில் விரைவில் அறிமுகமாகிறது சுசுகி எலெக்ட்ரிக் டூ-வீலர்?

இந்த சூழ்நிலையை நிச்சயம் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மின்சார வாகனங்களை எரிபொருள் வாகனத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் பராமரிப்பது மிகவும் சுலபம், செலவும் மிகக் குறைவு. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் குறைந்த செலவில் அதிக பயன்பாடுகளை எலெக்ட்ரிக் வாகனத்தின் மூலம்.

செம்ம வேட்டை காத்திருக்கு... அட்டகாசமான ஸ்டைலில் விரைவில் அறிமுகமாகிறது சுசுகி எலெக்ட்ரிக் டூ-வீலர்?

இதனால்தான் மக்கள் மின்சார வாகனங்களின் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். ஆனால், உச்சபட்ட விலை மற்றும் அடிப்படை வசதி இல்லாதது போன்ற காரணங்களால் இன்னும் இதன் விற்பனை ஆரம்பநிலையிலேயே உள்ளது. ஆனால், இருசக்கர மின்சார வாகனங்களைப் பொருத்தவரை இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது.

செம்ம வேட்டை காத்திருக்கு... அட்டகாசமான ஸ்டைலில் விரைவில் அறிமுகமாகிறது சுசுகி எலெக்ட்ரிக் டூ-வீலர்?

இதனை உறுதிச் செய்யும் வகையில், கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மின்சார வாகனங்களைக் களமிறக்கி வரும் ஒகினவா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை விகிதம் உள்ளது.

இத்தகைய வரவேற்பிற்கு அந்த நிறுவனத்தின் பெரும்பாலான வாகனங்கள் மலிவு விலையைக் கொண்டிருப்பதே முக்கியமான காரணமாக உள்ளது.

செம்ம வேட்டை காத்திருக்கு... அட்டகாசமான ஸ்டைலில் விரைவில் அறிமுகமாகிறது சுசுகி எலெக்ட்ரிக் டூ-வீலர்?

ஆனால், சுசுகி நிறுவனத்தின் மின்சார வாகனம் சற்று விலையுயர்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தற்போது விற்பனையில் இருக்கும் ஐசி எஞ்ஜின் வாகனங்களின் விலையைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இது சந்தையில் எம்மாதிரியான டிமாண்டை ஏற்படுத்தும் என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செம்ம வேட்டை காத்திருக்கு... அட்டகாசமான ஸ்டைலில் விரைவில் அறிமுகமாகிறது சுசுகி எலெக்ட்ரிக் டூ-வீலர்?

ஆனால், மின்சார வாகனத்தை வாங்குவது எப்போதுமே தீமையை ஏற்படுத்தாது. இது, தற்போது உச்சபட்ச விலையைத் தொட்டு வரும் எரிபொருள் விலையுயர்வில் இருந்து நம்மை தப்பிக்க வைக்க உதவும். இதுமட்டுமா? சுற்றுப்புறச் சூழலுக்கும் இந்த மின்சார வாகனம் நண்பனாக செயல்படும்.

செம்ம வேட்டை காத்திருக்கு... அட்டகாசமான ஸ்டைலில் விரைவில் அறிமுகமாகிறது சுசுகி எலெக்ட்ரிக் டூ-வீலர்?

எனவேதான், மத்திய மற்றும் மாநில அரசுகள் மின்சார வாகன விற்பனையை ஊக்குவித்து வருகின்றன. இதற்காக ஃபேம்-2 திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இது மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்க உதவும்.

Most Read Articles

English summary
Suzuki Reveals It Has The EV Technology Ready. Read In Tamil.
Story first published: Saturday, June 27, 2020, 20:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X