Just In
- 3 hrs ago
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- 4 hrs ago
350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?
- 6 hrs ago
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- 6 hrs ago
ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Movies
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிகவும் கவர்ச்சியான புதுமுக பைக்கை வெளியீடு செய்த சுசுகி... இதைதான் சுசுகி 2021ல் அமெரிக்காவில் களமிறக்குகிறது
சுசுகி நிறுவனம் புதுமுக பைக் ஒன்றை வெளியீடு செய்துள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சுசுகி, 2021ம் ஆண்டிற்கான ஜிஎஸ்எக்ஸ்250 ஆர் மாடலை வெளியீடு செய்துள்ளது. இது மோட்டார்சைக்கிள் வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இளைஞர்கள் மத்தியில் கடந்த காலைங்களைக் காட்டிலும் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு நல்ல டிமாண்ட் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே 2021ம் ஆண்டிற்கான ஜிஎஸ்எக்ஸ் 250 ஆர் பைக்கின் வெளியீடை சுசுகி செய்திருக்கின்றது. இப்பைக்கிற்கு அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 5,499 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 4.06 லட்சம் ஆகும். அடேங்கப்பா இவ்ளோ அதிக விலையா என கேட்கத் தோன்றலாம். இது அமெரிக்க சந்தைக்கான விலை மட்டுமே ஆகும்.

இப்பைக்கில் பல்வேறு புதிய கூறுகளை சுசுகி சேர்த்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், பைக்கை மேலும் அழகூட்டும் செயல்கள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதிய கட்டுமஸ்தான உடல் பேனல்கல் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமின்றி, எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எல்இடி டிஆர்எல்கள், ஹெட்லேம்ப் மற்றும் வால்பகுதி மின் விளக்குகளில் எல்இடி தரத்திலான லைட்டுகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் எரிபொருள் தொட்டி 15 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும்.

மேலும், சிறப்பு ஹேண்ட்லிங் வசதிக்காக க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் மற்றும் பிளவுபட்ட இருக்கை ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதேபோன்று சிறந்த எஞ்ஜின் திறனுக்காக 248சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய பாரல்லல் ட்வின் சிலிண்டர், லிக்யூடு கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன் சிறப்பான வேகக்கட்டுப்பாட்டிற்காக ஆறு படிநிலைகள் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், சௌகரியமான சஸ்பென்ஷன் வசதிக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், மோனோ-ஷாக் அப்சார்பர் பின்பக்கத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமின்றி பாதுகாப்பான பயண அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்ற வகையில் இரு வீல்களுக்கும் டிஸ்க் பிரேக் வசதி கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற எக்கசக்க வசதிகளை இப்பைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலயே ஜிஎஸ்எக்ஸ்250ஆர் பைக்கிற்கு அதிக விலையை சுசுகி நிர்ணயித்துள்ளது.

ஜப்பான் நிறுவனம் இதன் இந்திய வருகை பற்றிய தகவலை இதுவரை வெளியிடவில்லை. ஆகையால், இப்பைக் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைப்பது கேள்விக் குறியே. இதன் இடத்தைப் பூர்த்தி செய்கின்ற வகையில் மிகவும் கவர்ச்சியான பைக்குகளாக ஜிக்ஸர் 250 மற்றும் ஜிக்ஸர் எஸ்எஃப் 250 ஆகிய இரு மாடல்களை சுசுகி இந்தியாவில் விற்பனைக்கு வழங்கியிருக்கின்றது.