சுஸுகியின் 2021ஆம் ஆண்டிற்கான 650சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டு இளைஞர்களுக்குதான் கொடுத்து வைக்கல

2021ஆம் ஆண்டிற்கான சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி அட்வென்ச்சர் பைக்கை பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

சுஸுகியின் 2021ஆம் ஆண்டிற்கான 650சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டு இளைஞர்களுக்குதான் கொடுத்து வைக்கல

சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி அட்வென்ச்சர் பைக்கில் 2021ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்டாக சாம்பியன் மஞ்சள் எண்.2 என்ற பெயரில் புதிய நிறத்தேர்வு வழங்கப்பட்டுள்ளது.

சுஸுகியின் 2021ஆம் ஆண்டிற்கான 650சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டு இளைஞர்களுக்குதான் கொடுத்து வைக்கல

சுஸுகியின் தனித்துவமான டிஆர்-பிக் ராலி மோட்டார்சைக்கிளினால் கவரப்பட்டு பெறப்பட்டுள்ள இந்த நிறத்தேர்வில் பைக்கின் பெரும்பான்மையான பகுதிகள் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. ஆனால் அதேநேரம் பெட்ரோல் டேங்கில் மஞ்சள் மற்றும் நீல நிறங்களை பார்க்க முடிகிறது.

சுஸுகியின் 2021ஆம் ஆண்டிற்கான 650சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டு இளைஞர்களுக்குதான் கொடுத்து வைக்கல

வயர்-ஸ்போக் சக்கரங்களின் ரிம்கள் தங்க நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ள சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி பைக் மாடலின் டாப் வேரியண்ட்டாக அதன் அட்வென்ச்சர் வெர்சன் விளங்குகிறது.

சுஸுகியின் 2021ஆம் ஆண்டிற்கான 650சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டு இளைஞர்களுக்குதான் கொடுத்து வைக்கல

ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து வேறுபடுவதற்காக வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி அட்வென்ச்சர் பைக்கில் பெரிய க்ராஷ் பாதுகாப்பான், அலுமினிய பன்னீர்களின் இணை, ஹேண்டில் பார் ப்ரேஸ், நீட்டிக்கப்பட்ட கண்ணாடி மற்றும் செண்டர் ஸ்டாண்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

சுஸுகியின் 2021ஆம் ஆண்டிற்கான 650சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டு இளைஞர்களுக்குதான் கொடுத்து வைக்கல

ஆனால் என்ஜின் அமைப்பு அனைத்து சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி வேரியண்ட்டிற்கும் ஒன்றே. இதனால் இந்த 2021 அட்வென்ச்சர் பைக்கிலும் அதே யூரோ-5க்கு இணக்கமான 645சிசி, இணையான-இரட்டை என்ஜின்தான் தொடர்ந்துள்ளது.

சுஸுகியின் 2021ஆம் ஆண்டிற்கான 650சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டு இளைஞர்களுக்குதான் கொடுத்து வைக்கல

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 70 பிஎச்பி மற்றும் 62 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது. 2021 சுஸுகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி அட்வென்ச்சர் பைக் விரைவில் சர்வதேச சந்தைகளை சென்றடையவுள்ளது.

சுஸுகியின் 2021ஆம் ஆண்டிற்கான 650சிசி அட்வென்ச்சர் பைக்!! நம் நாட்டு இளைஞர்களுக்குதான் கொடுத்து வைக்கல

ஆனால் இந்தியாவிற்கு இந்த அட்வென்ச்சர் பைக் வருகை தருவதற்கு வாய்ப்புகள் குறைவே. அதற்கு பதிலாக வழக்கமான வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி பைக்கிற்கு கூடுதல் ஆக்ஸஸரீகளை நம் நாட்டில் சுஸுகி நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
2021 Suzuki V-Strom 650 XT Adventure unveiled
Story first published: Monday, December 28, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X