வெளிநாட்டில் அறிமுகமானது சுசுகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி பிஎஸ்6... அடுத்தது இந்தியாதான்! முழு விபரம்!

சுசுகி நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகனங்களில் ஒன்றான வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பிஎஸ்6 விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வெளிநாட்ல அறிமுகமாயிடுச்சு... அடுத்தது இந்தியாதான்... சுசுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பிஎஸ்6 பற்றிய சுவாரஷ்ய தகவல்!

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் 2021 வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி மோட்டார்சைக்கிளை ஆஸ்திரேலியா சந்தையில் அறிமுகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருசக்கர வாகன பிரியர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் டூ-வீலர்களில் இந்த பைக்கும் ஒன்று. ஆஸ்திரேலிய அறிமுகத்தைத் தொடர்ந்து இப்பைக் விரைவில் இந்தியாவில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்ல அறிமுகமாயிடுச்சு... அடுத்தது இந்தியாதான்... சுசுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பிஎஸ்6 பற்றிய சுவாரஷ்ய தகவல்!

சுசுகி நிறுவனம் அண்மையில் இந்த பைக்கை புதிய மாசு உமிழ்வு தரம் பிஎஸ்6-க்கு இணையாக அப்கிரேட் செய்யும் பணியை மேற்கொண்டது. இது முடிவடைந்தநிலையிலேயே இப்பைக் தற்போது வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. வி-ஸ்ட்ரோம் பைக்கைக் காட்டிலும் அதிக திறன் கொண்ட பைக்குகளை சுசுகி நிறுவனம் உலக நாடுகளில் விற்பனைச் செய்து வருகின்றது.

வெளிநாட்ல அறிமுகமாயிடுச்சு... அடுத்தது இந்தியாதான்... சுசுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பிஎஸ்6 பற்றிய சுவாரஷ்ய தகவல்!

ஆனால், இந்தியாவில் இந்நிறுவனம் விற்பனைச் செய்யும் மிகப்பெரிய எஞ்ஜின் திறன் கொண்ட பைக்காக இதுவே இருக்கின்றது. எனவேதான் இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் இந்த பைக்கிற்கான எதிர்பார்ப்பு சற்று உயர்ந்து காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இந்த பைக்கை நடந்து முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவிலேயே முதல்முறையாக சுசுகி அறிமுகம் செய்தது.

வெளிநாட்ல அறிமுகமாயிடுச்சு... அடுத்தது இந்தியாதான்... சுசுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பிஎஸ்6 பற்றிய சுவாரஷ்ய தகவல்!

2021 சுசுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி மோட்டார்சைக்கிளில் 645சிசி திறன் கொண்ட டிஓஎச்சி வி-ட்வின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 69.7பிஎச்பி திறனை 8,800 ஆர்பிஎம்மிலும், 62 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மில் வெளியேற்றும். இதன் எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைந்து இயங்குகின்றது.

வெளிநாட்ல அறிமுகமாயிடுச்சு... அடுத்தது இந்தியாதான்... சுசுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பிஎஸ்6 பற்றிய சுவாரஷ்ய தகவல்!

புதிய பிஎஸ்-6 தர மாற்றத்தைத் தவிர வேறெந்தம மாற்றத்தையும் சுசுகி நிறுவனம் வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கில் மேற்கொள்ளவில்லை. ஆகையால், பிஎஸ்4 மாடலில் தென்பட்ட அதே எல்இடி மின் விளக்கு, வீல், விண்ட்ஸ்கிரீன் மற்றும் எஞ்ஜின் பாதுகாப்பு கூறுகளே இதிலும் உள்ளன. மேலும், நிற தேர்விலும் எந்தவித புதிய மாற்றமும் வழங்கப்படவில்லை.

வெளிநாட்ல அறிமுகமாயிடுச்சு... அடுத்தது இந்தியாதான்... சுசுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பிஎஸ்6 பற்றிய சுவாரஷ்ய தகவல்!

ஆகையால், மெட்டாலிக் ஊர்ட் கிரே, பியர் பிரில்லியன்டன் வெள்ளை மற்றும் கேண்டி டேரிங் சிவப்பு/கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் ஆகிய நிற தேர்வுகளில் இந்த பைக் கிடைக்கின்றது. மேலும், இந்த பைக்கில் சிறப்பான சஸ்பென்ஷன் வசதிக்காக 43 மிமீ அளவுள்ள டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், மோனோஷாக் அப்சார்பர் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன.

வெளிநாட்ல அறிமுகமாயிடுச்சு... அடுத்தது இந்தியாதான்... சுசுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பிஎஸ்6 பற்றிய சுவாரஷ்ய தகவல்!

இதுதவிர, சிறப்பா பிரேக்கிங் வசதிக்காக 310 மிமீ அளவுள்ள இரு பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய ட்வின் டிஸ்க் முன்பக்கத்திலும், 260 மிமீ சிங்கிள் டிஸ்க் ஒற்றை பிஸ்டன் காலிபருடன் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது மோட்டார்சைக்கிளின் கையாளும் திறனை சிறப்பானதாக அமைக்க உதவுகின்றது. தொடர்ந்து, ட்யூவல் சேனல் ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

வெளிநாட்ல அறிமுகமாயிடுச்சு... அடுத்தது இந்தியாதான்... சுசுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பிஎஸ்6 பற்றிய சுவாரஷ்ய தகவல்!

தொடர்ந்து தொழில்நுட்ப வசதியாக இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு தகவல்களை வழங்கும் திறன் கொண்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பைக்கை சுசுகி நிறுவனம் ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு மதிப்பில் 13,490 என்ற விலைக்கு அறமுககப்படுத்தியுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 7.32 லட்சங்கள் ஆகும்.

Most Read Articles

English summary
Suzuki V-Strom 650 XT BS6 Launched In Australia: Arrives Soon In India. Read In Tamil.
Story first published: Thursday, November 12, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X