Just In
- 3 hrs ago
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- 4 hrs ago
350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?
- 6 hrs ago
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- 6 hrs ago
ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Movies
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2 கியர்களுடன் அறிமுகமான மின்சார ஸ்கூட்டர்... இப்படி ஒரு ஸ்டைலில் ஸ்கூட்டரை பார்த்திருக்கவே மாட்டீங்க... புகைப்படங்கள்!
அட்டகாசமான மிரட்டும் ஸ்டைலில் மின்சார ஸ்கூட்டர் ஒன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான திறனில் மின்சார ஸ்கூட்டர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கிம்கோ நிறுவனத்தின் வெளியீடாகும். இந்த நிறுவனம் தாய்வான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். ஆரம்ப நிலை நிறுவனமான இதுவே தற்போது எஃப்9 ஸ்போர்ட் என்ற பெயரில் மின்சார ஸ்கூட்டரை வெளியீடு செய்துள்ளது.

தோற்றம் மற்றும் ஸ்டைல் என அனைத்தும் இந்த ஸ்கூட்டர் ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டிற்காக மட்டுமே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேசமயம், தினசரி பயன்பாட்டிற்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்படுகின்றது.

இதன் டயர் முதல் எல்இடி மின் விளக்குகள் வரை அனைத்தும் மிகவும் முரட்டுத் தனமான ஸ்டைலில் காட்சியளிக்கின்றன. இதற்கு மிக சிறந்த உதாரணமாக ஸ்கூட்டரின் இருக்கை அமைப்பு உள்ளது. பார்பதற்கு ஒற்றை நபர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய வடிவத்தில் இருக்கின்றது.

இருப்பினும், இரு மெல்லிய தேகமுடையவர்கள் இந்த ஸ்கூட்டரில் அமர்ந்து பயணிக்கலாம் என்கின்றது தயாரிப்பு நிறுவனம் கிம்கோ. இதில், சிவப்பு நிறத்தில் துண்டாக தெரியும் இருக்கை பகுதி பயணிக்கும், கருப்பு நிற இருக்கை ஓட்டுநருக்கானதாகும். இதுவரை இதுவரை நாம் பார்த்திராத ஸ்டைலில் இந்த இருக்கைக் காட்சியளிக்கின்றது.

குறிப்பாக, இதன் தோற்றம் மிகவும் முரட்டுத்தனமானதாக இருக்கின்றது. இந்த தோற்றம் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும். தொடர்ந்து, இந்த ஸ்கூட்டரில் 14 இன்ச் அளவுள்ள அலாய் வீல், துண்டாக நிற்கும் டயர் அணைப்பான், டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை மிகவும் அட்டகாசமானதாக காட்சியளிக்கின்றது. அதேசமயம், இவையனைத்தும் சேர்ந்து பிரீமியம் ஸ்கூட்டர் தோற்றத்தை எஃப்9-க்கு வழங்குகின்றது.

இதன் தோற்றம் மட்டுமில்லைங்க இதன் மின் மோட்டாருடைய திறனும்கூட பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. எஃப்9 மின்சார ஸ்கூட்டரில் 9.4kW திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 30 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது ஸ்கூட்டரை மணிக்கு 110 கிமீ வேகத்தில் இயக்கச் செய்யும்.

இந்த ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. தினசரி மற்றும் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்டவற்றிற்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டிருப்பதால் இத்தகைய குறைந்த ரேஞ்ஜை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதனை சார்ஜ் செய்ய வெறும் 2 மணி நேரங்களே போதும் என கூறப்படுகின்றது. இந்த ஸ்கூட்டரில் 96வோல்ட் 40ஏஎச் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், இந்த ஸ்கூட்டரில் நாம் கவனிக்க வேண்டிய அம்சமாக இதில், இரு வேகக் கட்டுப்பாடு (two-speed automatic transmission) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது ரைடருக்கு மிகச் சிறந்த கன்ட்ரோலைக் கொடுக்க உதவும்.

கிம்கோ நிறுவனம் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் இந்திய வருகை என்பது இதுவரை கேள்விப்படாத தகவலாக இருக்கின்றது. ஆகையால், கிம்கோ எஃப்9 ஸ்போர்ட் மின்சார ஸ்கூட்டரின் இந்திய வருகை என்பது சந்தேகமே.