மோடி, கெஜ்ரிவாலை மிஞ்சிய சந்திரசேகர் ராவ்! சாலை வரி, பதிவு கட்டணம் 100% கிடையாதாம்! எதற்கு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரையே மிஞ்சுகின்ற வகையில் ஓர் தரமான அறிவிப்பை தெலங்கானா மாநில முதலைச்சர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல்தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மோடி, கெஜ்ரிவாலை மிஞ்சிய சந்திரசேகர் ராவ்! சாலை வரி, பதிவு கட்டணம் 100% கிடையாதாம்... எதற்கு தெரியுமா?

உலக நாடுகள் அனைத்தும் சந்தித்து வரும் தலையாய பிரச்னைகளாக காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் இருக்கின்றது. அதிகரித்து வரும் எரிபொருள் வாகனங்களினால் இந்த நிலை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில், தெலங்கானா மாநில அரசு 2 லட்சம் இருசக்கர வாகனங்களுக்கு 100 சதவீத சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் விலக்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மோடி, கெஜ்ரிவாலை மிஞ்சிய சந்திரசேகர் ராவ்! சாலை வரி, பதிவு கட்டணம் 100% கிடையாதாம்... எதற்கு தெரியுமா?

இந்த அறிவிப்பானது, மின்சார வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆம், மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எரிபொருளால் இயங்கும் வாகனங்களைப் போன்று இல்லாமல் மின் வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு நண்பனாக செயல்படுகின்றன. குறிப்பாக, பூஜ்ஜியம் உமிழ்வு வெளியீட்டைக் கொண்டிருக்கின்றது.

மோடி, கெஜ்ரிவாலை மிஞ்சிய சந்திரசேகர் ராவ்! சாலை வரி, பதிவு கட்டணம் 100% கிடையாதாம்... எதற்கு தெரியுமா?

அதாவது, மாசு உமிழ்வு என்பது அறவே இல்லாத வாகனம் இந்த மின் வாகனங்கள். எனவேதான் உலக நாடுகள் தங்களின் மக்களை மின் வாகனங்களின் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், இந்திய அரசு ஃபேம்-2 திட்டத்தின்கீழ் மின்சார வாகனங்களுக்கு சிறப்பு மானியத்தை வழங்கி வருகின்றது. இந்நிலையில், தெலங்கானா மாநில அரசு அதன் சார்பில், மாநிலத்தில் மின் வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மோடி, கெஜ்ரிவாலை மிஞ்சிய சந்திரசேகர் ராவ்! சாலை வரி, பதிவு கட்டணம் 100% கிடையாதாம்... எதற்கு தெரியுமா?

புதிய மின் வாகனங்களுக்கான கொள்கை பற்றிய அறிவிப்பை தெலங்கானா மாநிலம் மிக சமீபத்தில் வெளியிட்டது. இதிலேயே மாநிலத்தில் மின் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் முதல் 2 லட்சம் மின்சார இருசக்கர வகானங்களுக்கு 100 சதவீதம் வரி மற்றும் பதிவு கட்டணம் ரத்து என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மோடி, கெஜ்ரிவாலை மிஞ்சிய சந்திரசேகர் ராவ்! சாலை வரி, பதிவு கட்டணம் 100% கிடையாதாம்... எதற்கு தெரியுமா?

டெல்லி அரசு ஏற்கனவே இதுபோன்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்நிலையிலேயே தற்போது தெலங்கானா மாநில அரசும் அதன் வரிசையில் இணைந்துள்ளது. இதுதவிர மாநிலத்தில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தியை ஊக்குவிக்கின்ற வகையிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஊக்கத் தொகைகள் போன்ற சலுகைகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மோடி, கெஜ்ரிவாலை மிஞ்சிய சந்திரசேகர் ராவ்! சாலை வரி, பதிவு கட்டணம் 100% கிடையாதாம்... எதற்கு தெரியுமா?

இத்துடன், மின் வாகனத்தை ஊக்குவிக்கும் மற்றுமொரு முயற்சியாக மாநிலம் முழுவதிலும் பொது மின் வாகன சார்ஜிங் மையங்களை நிறுவ இருப்பதாகவும் அது அறிவித்துள்ளது. இதன்மூலம், மாநில மக்கள் மத்தியில் மின் வாகன பயன்பாட்டை மேம்படுத்த முடியும் என அது நம்புகின்றது. தற்போது, போதிய அளவில் சார்ஜிங் நிலையங்கள் இல்லாத காரணத்தினாலயே மக்கள் மின் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

மோடி, கெஜ்ரிவாலை மிஞ்சிய சந்திரசேகர் ராவ்! சாலை வரி, பதிவு கட்டணம் 100% கிடையாதாம்... எதற்கு தெரியுமா?

எனவே பொது சார்ஜிங் மையங்கள் கணிசமாக மின்வாகன விற்பனையை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஹைதராபாத்தில் முதல் கட்டமாக சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து, மாநிலத்தின் பிற பகுதிகளில் படிப்படியாக மின் வாகன சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

மோடி, கெஜ்ரிவாலை மிஞ்சிய சந்திரசேகர் ராவ்! சாலை வரி, பதிவு கட்டணம் 100% கிடையாதாம்... எதற்கு தெரியுமா?

மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமின்றி நான்கு சக்கர மின் வாகனங்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, முதல் 5,000 மின்சார கார்களுக்கு வரி மற்றும் பதிவு கட்டண விலக்கு வழங்கப்பட இருக்கின்றது. ஆனால், வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தக்கூடிய நான்கு சக்கர மின் வாகனங்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

மோடி, கெஜ்ரிவாலை மிஞ்சிய சந்திரசேகர் ராவ்! சாலை வரி, பதிவு கட்டணம் 100% கிடையாதாம்... எதற்கு தெரியுமா?

மிக தெளிவாக கூற வேண்டுமானால் கால் டாக்சி மற்றும் சுற்றுலா வாகனமாகப் பயன்படுத்தக்கூடிய மின்சார கார்களுக்கு மட்டுமே இந்த சலுகைப் பொருந்தும். இதைத்தொடர்ந்து, 10 ஆயிரம் எலெக்ட்ரிக் ஆட்டோக்களுக்கும் வரி மற்றும் பதிவு கட்டணம் தள்ளுபடி செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி கால்டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களும் மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

மோடி, கெஜ்ரிவாலை மிஞ்சிய சந்திரசேகர் ராவ்! சாலை வரி, பதிவு கட்டணம் 100% கிடையாதாம்... எதற்கு தெரியுமா?

அதேசமயம், நாட்டின் பிற மாநில மக்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பொறாமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தற்போது வரை மின் வாகனத்தை வாங்குவதற்கு மிகப்பெரிய தடை கல்லாக இருப்பதே அதன் உச்சபட்ச விலைதான். இம்மாதிரியான சூழ்நிலையில் வரி மற்றும் பதிவு கட்டணங்கள் விலக்கு செய்யப்ட்டிருப்பதால் கணிசமாக மின் வாகனத்தின் விலை குறைய இருக்கின்றது. இதனால், வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

Most Read Articles
English summary
Telangana New EV Policy: 100% Road Tax & Registration Fee Exempt For 2 Lakh Two-Wheeler EVs. Read In Tamil.
Story first published: Saturday, October 31, 2020, 16:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X