மின்சார வாகன தயாரிப்பில் இறங்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா! எல்லாத்துக்கும் தெலுங்கானா அரசுதான் காரணம்

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தை சேர்ந்த எலக்ட்ரிக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மின்சார வாகன தயாரிப்பில் இறங்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா! எல்லாத்துக்கும் தெலுங்கானா அரசுதான் காரணம்

நடிகர் விஜய் தேவரகொண்டாவை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவருக்கு தமிழகத்திலும் பரவலான ரசிகர்கள் உள்ளனர். நடிப்பு தொழில் தவிர்த்து வாகன தயாரிப்பு, ஆடை ஏற்றுமதி மற்றும் அறக்கட்டளை உள்ளிட்ட துறைகளிலும் விஜய்க்கு ஆர்வம் அதிகம்.

மின்சார வாகன தயாரிப்பில் இறங்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா! எல்லாத்துக்கும் தெலுங்கானா அரசுதான் காரணம்

இத்தகையவர் தனது எலக்ட்ரிக் வாகன முதலீட்டு அறிவிப்பை தெலுங்கானா அரசாங்கத்தின் புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கை அறிமுக விழாவில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த வாட்ஸ் மற்றும் வோல்ட்ஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் இணைந்து அடுத்த ஆண்டில் இருந்து இவர் வர்த்தகத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மின்சார வாகன தயாரிப்பில் இறங்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா! எல்லாத்துக்கும் தெலுங்கானா அரசுதான் காரணம்

மற்றப்படி எவ்வளவு தொகையை முதலீடு செய்யவுள்ளார் என்பது குறித்த தகவல் எதையும் விஜய் வெளியிடவில்லை. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தெலுங்கானா அரசு தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மின்சார வாகனங்கள் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

மின்சார வாகன தயாரிப்பில் இறங்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா! எல்லாத்துக்கும் தெலுங்கானா அரசுதான் காரணம்

அதற்கு எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என எண்ணியே இந்த எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் என்னை ஈடுப்படுத்தி கொண்டுள்ளேன். பசுமையான எதிர்காலத்தை எளிதாக்கும் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாற்றங்களை நான் உறுதியாக நம்புகிறேன்.

மின்சார வாகன தயாரிப்பில் இறங்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா! எல்லாத்துக்கும் தெலுங்கானா அரசுதான் காரணம்

வாட்ஸ் மற்றும் வோல்ட்ஸ் மூலம், வழக்கமான எரிபொருள் அடிப்படையிலான போக்குவரத்து முறைக்கு மாறாக குறுகிய பயணங்களுக்கு, மாசுபாட்டை அகற்றும் எலக்ட்ரிக் சைக்கிள்கள், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டிகளை விற்பனைக்கு கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம் என கூறினார்.

மின்சார வாகன தயாரிப்பில் இறங்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா! எல்லாத்துக்கும் தெலுங்கானா அரசுதான் காரணம்

வாட்ஸ் & வோல்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திட்டம் மற்றும் பார்வை அறிக்கை உள்ளிட்டவையும் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கானா இவி உச்சி மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி பார்த்தோமேயானால், இந்நிறுவனத்தால் உருவாக்கப்படும் இவி வாகனங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப குறைந்த தூர பயணத்திற்கு ஏற்றதாக வடிவமைக்கப்படவுள்ளன.

மின்சார வாகன தயாரிப்பில் இறங்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா! எல்லாத்துக்கும் தெலுங்கானா அரசுதான் காரணம்

ஏற்கனவே கூறியதுபோல், வாட்ஸ் மற்றும் வோல்ட்ஸ் நிறுவனத்துடன் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் செயல்பாடுகள் தீவிரமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து துவங்கப்படவுள்ளன. புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கை 2020-ல் இருந்து 2030ஆம் ஆண்டிற்குள்ளாக மாநில போக்குவரத்தில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கேடி ராமாராவ் தெரிவித்துள்ளார்.

Most Read Articles

English summary
Vijay Deverakonda Invests In Electric Mobility By Joining Hands With Hyderabad Based Company
Story first published: Sunday, November 1, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X