விற்பனையில் தனி ராஜ்ஜியம் நடத்திவரும் ஹோண்டா ஆக்டிவா!! மற்றவைகளால் நெருங்க கூட முடியவில்லை

கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் அறிமுகமான டாப்-10 ஸ்கூட்டர்களின் பெயர்கள், விற்பனை எண்ணிக்கைகளுடன் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் தனி ராஜ்ஜியம் நடத்திவரும் ஹோண்டா ஆக்டிவா!! மற்றவைகளால் நெருங்க கூட முடியவில்லை

இந்த லிஸ்ட்டின்படி பார்க்கும்போது, ஹோண்டாவின் பிரபலமான ஸ்கூட்டர் மாடலான ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிடர், சுஸுகி ஆக்ஸஸ், ஹோண்டா டியோ என மற்ற அனைத்து ஸ்கூட்டர் மாடல்களையும் முந்திக்கொண்டு முதலிடத்தை பிடித்துள்ளது.

விற்பனையில் தனி ராஜ்ஜியம் நடத்திவரும் ஹோண்டா ஆக்டிவா!! மற்றவைகளால் நெருங்க கூட முடியவில்லை

ஆக்டிவாவின் 2020 அக்டோபர் மாத விற்பனை எண்ணிக்கை 2,39,570 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்திருந்தாலும், ஆக்டிவா 2019 அக்டோபரில் 2,81,273 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் கடந்த மாதத்தில் இந்த ஸ்கூட்டரின் விற்பனை 14.83 சதவீதம் குறைந்துள்ளது.

விற்பனையில் தனி ராஜ்ஜியம் நடத்திவரும் ஹோண்டா ஆக்டிவா!! மற்றவைகளால் நெருங்க கூட முடியவில்லை

ஆக்டிவாவின் கடந்த விற்பனை எண்ணிக்கை ஹோண்டாவின் சிபி ஷைனின் எண்ணிக்கையின் இரட்டிப்பாகும். மொத்தமாக கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் மட்டும் 4,94,459 யூனிட் ஸ்கூட்டர்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

விற்பனையில் தனி ராஜ்ஜியம் நடத்திவரும் ஹோண்டா ஆக்டிவா!! மற்றவைகளால் நெருங்க கூட முடியவில்லை

இந்த எண்ணிக்கை 2019 அக்டோபர் மாதத்தை காட்டிலும் 1.4 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 4,87,819 ஸ்கூட்டர்களை இந்தியாவில் இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தை டிவிஎஸ் மோட்டார்ஸின் ஜூபிடர் பிடித்துள்ளது.

விற்பனையில் தனி ராஜ்ஜியம் நடத்திவரும் ஹோண்டா ஆக்டிவா!! மற்றவைகளால் நெருங்க கூட முடியவில்லை

இருப்பினும் ஆக்டிவாவிற்கும் ஜூபிடருக்கும் விற்பனையில் மிக பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. எந்த அளவிற்கு ஜூபிடரின் விற்பனை எண்ணிக்கையை மூன்றினால் பெருக்கினால் மட்டுமே ஆக்டிவாவின் விற்பனை எண்ணிக்கை கிடைக்கும்.

விற்பனையில் தனி ராஜ்ஜியம் நடத்திவரும் ஹோண்டா ஆக்டிவா!! மற்றவைகளால் நெருங்க கூட முடியவில்லை

கடந்த மாதத்தில் மொத்தம் 74,159 ஜூபிடர் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆக்டிவாவை போல் இதன் விற்பனையும் 2019 அக்டோபரை காட்டிலும் மிகவும் சிறிய அளவு (0.54%) குறைந்துள்ளது. மூன்றாவது இடத்தை 52,441 யூனிட்கள் விற்பனையுடன் சுஸுகியின் ஆக்ஸஸ்125 ஸ்கூட்டர் மாடல் பெற்றுள்ளது.

விற்பனையில் தனி ராஜ்ஜியம் நடத்திவரும் ஹோண்டா ஆக்டிவா!! மற்றவைகளால் நெருங்க கூட முடியவில்லை

அதுவே 2019 அக்டோபரில் 53,552 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த லிஸ்ட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும் விற்பனையில் வளர்ச்சியை கண்ட முதல் ஸ்கூட்டர் மாடலாக இளைஞர்களின் பேராதரவில் வீறுநடை போடும் ஹோண்டா டியோ உள்ளது.

விற்பனையில் தனி ராஜ்ஜியம் நடத்திவரும் ஹோண்டா ஆக்டிவா!! மற்றவைகளால் நெருங்க கூட முடியவில்லை

இந்த ஹோண்டா ஸ்கூட்டர் 19.24 சதவீத வளர்ச்சி உடன் 44,046 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் எண்டார்க், 31,524 யூனிட்கள் விற்பனையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதன் விற்பனை 2019 அக்டோபர் உடன் ஒப்பிடுகையில் 32.22 சதவீதம் அதிகமாகும்.

விற்பனையில் தனி ராஜ்ஜியம் நடத்திவரும் ஹோண்டா ஆக்டிவா!! மற்றவைகளால் நெருங்க கூட முடியவில்லை

இதற்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த ஸ்கூட்டர் மாடலில் கொண்டுவரப்பட்ட ஸ்பெஷல் எடிசன்கள் முக்கிய காரணம் எனலாம். இதற்கு அடுத்த 6, 7 மற்றும் 8வது இடங்களில் தொடர்ச்சியாக ஹீரோ மோட்டோகார்பின் தயாரிப்புகளான டெஸ்டினி, பிளஷர், மேஸ்ட்ரோ உள்ளன.

விற்பனையில் தனி ராஜ்ஜியம் நடத்திவரும் ஹோண்டா ஆக்டிவா!! மற்றவைகளால் நெருங்க கூட முடியவில்லை
Rank Model Oct 2020 Oct 2019 Growth (%)
1 Honda Activa 2,39,570 2,81,273 -14.83
2 TVS Jupiter 74,159 74,560 -0.54
3 Suzuki Access 52,441 53,552 -2.07
4 Honda Dio 44,046 36,939 19.24
5 TVS Ntorq 31,524 23,842 32.22
6 Hero Destini 26,714 10,371 157.58
7 Hero Pleasure 23,392 16,347 43.10
8 Hero Maestro 23,240 11,807 96.83
9 Yamaha Ray 15,748 8,575 83.65
10 Yamaha Fascino 13,360 12,272 8.87

இவை மூன்றின் விற்பனையும் கடந்த மாதத்தில் ஒரே அடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக 6வது இடத்தில் உள்ள ஹீரோ டெஸ்டினியின் விற்பனை சுமார் 157.58 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களை யமஹா ரே மற்றும் யமஹா ஃபாஸினோ ஸ்கூட்டர்கள் பிடித்துள்ளன.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top-10 Most Sold Scooters In October 2020. Honda Activa again top.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X