Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 7 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 8 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூவீலர்கள் இவைதான்... இதில் பொங்கலுக்கு நீங்கள் எதை வாங்க போறீங்க?
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 இரு சக்கர வாகனங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 இரு சக்கர வாகனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹீரோ ஸ்பிளெண்டர் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2,23,289 ஸ்பிளெண்டர் பைக்குகளை விற்பனை செய்திருந்தது.

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 2,48,398 ஆக உயர்ந்துள்ளது. இது 11.25 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,12,164 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 2,25,822 ஆக உயர்ந்துள்ளது. இது 6.44 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,59,544 ஆக இருந்த ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 1,79,426 ஆக உயர்ந்துள்ளது. இது 12.46 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் 4வது இடத்தை பஜாஜ் பல்சர் பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 68,268 பல்சர் பைக்குகளை மட்டுமே பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் 1,04,904 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் விற்பனையில் 53.66 சதவீத வளர்ச்சியை பஜாஜ் பல்சர் பதிவு செய்துள்ளது.

இந்த பட்டியலில் 5வது இடத்தை ஹோண்டா சிபி ஷைன் பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 75,144 ஆக இருந்த ஹோண்டா சிபி ஷைன் பைக்கின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 94,413 ஆக உயர்ந்துள்ளது. இது 25.64 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் 6வது இடத்தை டிவிஎஸ் எக்ஸ்எல் பிடித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 57,550 எக்ஸ்எல் மொபட்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 70,750 ஆக உயர்ந்துள்ளது. இது 22.94 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் 7வது இடத்தை டிவிஎஸ் ஜூபிடர் பிடித்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 41,007 ஜூபிடர் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் 62,626 ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 52.72 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் 8வது இடத்தை ஹீரோ பேஷன் பிடித்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 39,525 ஆக இருந்த பேஷன் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 53,768 ஆக உயர்ந்துள்ளது. இது 36.04 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 இரு சக்கர வாகனங்களின் பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள தயாரிப்புகள் அனைத்தும் வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளன. ஆனால் கடைசி 2 இடங்களை பிடித்துள்ள தயாரிப்புகள் மட்டும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. இந்த பட்டியலில் 9வது இடத்தை சுஸுகி அக்ஸெஸ் பிடித்துள்ளது.

நடப்பாண்டு நவம்பர் மாதம் சுஸுகி நிறுவனம் 45,582 அக்ஸெஸ் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 49,128 ஆக இருந்தது. இது 7.22 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தில் பஜாஜ் பிளாட்டினா உள்ளது. நடப்பாண்டு நவம்பர் மாதம் 41,572 பிளாட்டினா பைக்குகளை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை கடந்தாண்டு நவம்பர் மாதம் 53,015 ஆக இருந்தது. இது 21.58 சதவீத வீழ்ச்சியாகும். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் தற்போது பொது போக்குவரத்தை தவிர்த்து வருகின்றனர். அதற்கு பதிலாக சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களின் விற்பனை உயர்ந்துள்ளது.

எனவேதான் டாப்-10 பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 8 இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. இதை முன்னிட்டு புதிய இரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு நீங்கள் முடிவு செய்திருக்கலாம்.

இங்கே நாங்கள் வழங்கியுள்ள பட்டியலின் அடிப்படையில் நீங்கள் வாங்கவுள்ள புதிய இரு சக்கர வாகனத்தை முடிவு செய்யலாம். டாப்-10 பட்டியலில் இடம்பெற்றுள்ள இரு சக்கர வாகனங்கள் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதே இதற்கு காரணம். எனவே இதன் அடிப்படையில் நீங்கள் வாங்கவுள்ள இரு சக்கர வாகனத்தை தேர்வு செய்வது சிறப்பானதாக இருக்கும்.