ரூ.2 லட்சத்தில் சிறந்த பிஎஸ்6 பைக்கை வாங்க நினைக்கிறீர்களா...? அப்போ இதை படிங்க...

ப்ரீமியம் தரத்திலான மோட்டார்சைக்கிள்கள் டயர்-1 மட்டுமில்லாமல் டயர்-2 நகரங்களிலும் உள்ள இளம் வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. அப்படிப்பட்ட ப்ரீமியம் பைக்குகளில் ரூ.2 லட்சத்திற்கு உள்ளாகவுள்ள சிறந்த பிஎஸ்6 பைக்குகளை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.2 லட்சத்தில் சிறந்த பிஎஸ்6 பைக்கை வாங்க நினைக்கிறீர்களா...? அப்போ இதை படிங்க...

கேடிஎம் 250 ட்யூக்

கேடிஎம் நிறுவனத்தில் இருந்து எண்ட்ரீ-லெவல் 200 ட்யூக் மாடலுக்கும், பெரிய 390 ட்யூக் மாடலுக்கும் இடைப்பட்ட காலி இடத்தை நிரப்பும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட பைக் மாடல் தான் 250 ட்யூக். இந்த பைக்கில் கேடிஎம் நிறுவனம் 248.8சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு டிஒஎச்சி என்ஜினை பொருத்தியுள்ளது.

ரூ.2 லட்சத்தில் சிறந்த பிஎஸ்6 பைக்கை வாங்க நினைக்கிறீர்களா...? அப்போ இதை படிங்க...

இந்த என்ஜின் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் உடன் உள்ள 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் மூலமாக அதிகப்பட்சமாக 9,000 ஆர்பிஎம்-ல் 30 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்-ல் 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டு இந்த வருட துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 250சிசி பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் கிட்டத்தட்ட ரூ.2 லட்ச அளவில் உள்ளது.

ரூ.2 லட்சத்தில் சிறந்த பிஎஸ்6 பைக்கை வாங்க நினைக்கிறீர்களா...? அப்போ இதை படிங்க...

பஜாஜ் டோமினார் 400

பஜாஜ் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் வெளிவந்த பிஎஸ்6 பைக் மாடல் டோமினார் 400. எக்ஸ்ஷோரூமில் ரூ.1.91 லட்சத்தை விலையாக கொண்டுள்ள இந்த பைக்கில் 373.3சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் தொழிற்நுட்பத்துடன் உள்ள இதன் என்ஜின் 8,800 ஆர்பிஎம்-ல் 40 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

ரூ.2 லட்சத்தில் சிறந்த பிஎஸ்6 பைக்கை வாங்க நினைக்கிறீர்களா...? அப்போ இதை படிங்க...

முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருடன் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்களை கொண்டுள்ள இந்த பைக்கில் சஸ்பென்ஷனிற்கு 43மிமீ யுஎஸ்டி ஃபோர்க் முன்புறத்திலும், ப்ரீ-லோடு அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் செட்அப் பின்புறத்திலும் வழங்கப்பட்டுள்ளது. ப்ரேக்கிங் பணியை கவனிக்க இரு சக்கரங்களிலும் முறையே 320மிமீ டிஸ்க் மற்றும் 230மிமீ டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.2 லட்சத்தில் சிறந்த பிஎஸ்6 பைக்கை வாங்க நினைக்கிறீர்களா...? அப்போ இதை படிங்க...

இவற்றுடன் ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கும் உள்ளது. இந்த பைக்கிற்கு சந்தையில் எந்த பைக்குடனும் நேரடி போட்டி இல்லை என்றாலும், சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250, ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் மற்றும் முன்பு பார்த்த கேடிஎம் 250 ட்யூக் மாடல்களை விலையின் அடிப்படையில் எதிர்த்து வருகிறது.

ரூ.2 லட்சத்தில் சிறந்த பிஎஸ்6 பைக்கை வாங்க நினைக்கிறீர்களா...? அப்போ இதை படிங்க...

ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350

அட்டகாசமான டிசைன் அமைப்பால் ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் சிறந்த விற்பனை மோட்டார்சைக்கிளாக கிளாசிக் 350 விளங்குகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள 346சிசி சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், ட்வின்ஸ்பார்க், ஏர்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 5,250 ஆர்பிஎம்-ல் 20 பிஎச்பி பவர் மற்றும் 4,000 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

ரூ.2 லட்சத்தில் சிறந்த பிஎஸ்6 பைக்கை வாங்க நினைக்கிறீர்களா...? அப்போ இதை படிங்க...

எக்ஸ்ஷோரூமில் ரூ.1.57 லட்சத்தை விலையாக கொண்டுள்ள இந்த பைக்கின் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வேரியண்டிற்கு செஸ்ட்நட், சில்வர், கருப்பு, ஆஸ், பளிச்சிடும் கருப்பு மற்றும் மெர்குரி சில்வர் உள்ளிட்ட நிறத்தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

அதுவே இதன் ட்யூல்-சேனல் ஏபிஎஸ் மாடலுக்கு ஸ்டீல்த் கருப்பு, க்ரோம் கருப்பு, கன்மெட்டல் க்ரே, கிளாசிக் கருப்பு, ஸ்டோர்ம்ரைடர் சேண்ட் மற்றும் ஏர்போர்னே ப்ளூ உள்ளிட்ட பெயிண்ட் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ரூ.2 லட்சத்தில் சிறந்த பிஎஸ்6 பைக்கை வாங்க நினைக்கிறீர்களா...? அப்போ இதை படிங்க...

ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஹஸ்க்வர்னா ப்ராண்ட்டை முதன்முதலாக இந்திய சந்தைக்கு கொண்டு வந்த போது அறிமுகப்படுத்திய மோட்டார்சைக்கிள்கள் தான் ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250.

ரூ.2 லட்சத்தில் சிறந்த பிஎஸ்6 பைக்கை வாங்க நினைக்கிறீர்களா...? அப்போ இதை படிங்க...

இதில் ஸ்வர்ட்பிளேன் 250 பைக்கானது ஸ்க்ரம்ப்லர் தோற்றத்தில் ட்யூல்-பர்பஸ் டயர்கள் மற்றும் ஒரே துண்டினாலான பெரிய ஹேண்டில்பாரை கொண்டுள்ளது. அதுவே விட்பிளேன் 250, சற்று தாழ்வான ஹேண்டில்பாருடன் பின்புறத்தில் ஃபுட்பெக் உடன் காட்சியளிக்கிறது. இந்த இரு பைக்குகளிலும் கேடிஎம் 250 ட்யூக்கின் 248.88சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது.

ரூ.2 லட்சத்தில் சிறந்த பிஎஸ்6 பைக்கை வாங்க நினைக்கிறீர்களா...? அப்போ இதை படிங்க...

மேலும் இந்த இரு பைக்குகளுக்கும் இந்த என்ஜின் அதே 30 பிஎச்பி மற்றும் 24 என்எம் டார்க் திறனை தான் வழங்குகிறது. அறிமுகத்தில் இருந்து ரூ.1.80 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக கொண்டுள்ள இந்த இரு 250சிசி பைக்குகளும் தற்போதைக்கு கேடிஎம் நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் மூலமாக தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ரூ.2 லட்சத்தில் சிறந்த பிஎஸ்6 பைக்கை வாங்க நினைக்கிறீர்களா...? அப்போ இதை படிங்க...

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்

இந்திய சந்தையில் மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்யப்படும் அட்வென்ஜெர் டூரர் பைக்காக ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் விளங்குகிறது. வெறும் ரூ.1,86,811 விலையில் எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த பைக்கில் 411சிசி ஃப்யூல்-இன்ஜெக்டட், ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.

ரூ.2 லட்சத்தில் சிறந்த பிஎஸ்6 பைக்கை வாங்க நினைக்கிறீர்களா...? அப்போ இதை படிங்க...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 24.31 பிஎச்பி பவர் மற்றும் 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் காட்சியளிக்கின்ற இந்த பைக்கில் சஸ்பென்ஷனிற்கு 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புறத்திலும், 200மிமீ மோனோஷாக் செட்அப் பின்புறத்திலும் வழங்கப்பட்டு உள்ளது.

ரூ.2 லட்சத்தில் சிறந்த பிஎஸ்6 பைக்கை வாங்க நினைக்கிறீர்களா...? அப்போ இதை படிங்க...

சுமார் 220மிமீ க்ரவுண்ட் க்ளியரென்ஸை கொண்டுள்ள இந்த பைக்கின் முன் மற்றும் பின் சக்கரங்களில் முறையே 21-இன்ச் மற்றும் 17-இன்ச் ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. இந்த பைக்கிற்கு சந்தையில் எந்த பைக்குடனும் நேரடி மோதல் இல்லை. இதனை விட மலிவான ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மாடல் மட்டும் வடிவத்தின் அடிப்படையில் சிறிது போட்டியினை அளிக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Top 5 BS6 Bikes Priced Under Rs 2 Lakh In India Right Now
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X