Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அப்ரில்லாவின் புது முக ஸ்கூட்டர் எஸ்எக்ஸ்ஆர் 160... இதுபற்றி அறிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய தகவல்கள்!
அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட அப்ரில்லா நிறுவனத்தின் புதுமுக ஸ்கூட்டர் எஸ்எக்ஸ்ஆர் 160 பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான அப்ரில்லா இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரிய ஆவலைத் தூண்டி வந்த எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரை நேற்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது மேக்ஸி ரக ஸ்கூட்டர் ஆகும். இதன் பிரீமியம் ஸ்டைல் மற்றும் திறன் உள்ளிட்டவையே இந்தியர்களின் எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம் ஆகும்.

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே அப்ரில்லா நிறுவனம் இந்த ஸ்கூட்டரை நேற்று விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதில் என்னென்ன சிறப்பு வசதிகள் உள்ளன?, எது அதிக கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கின்றது?, என்பது பற்றிய தகவலை இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். குறிப்பாக, ஸ்கூட்டரில் கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய அம்சங்களைப் பற்றியே நாம் பார்க்க உள்ளோம்.

ஸ்டைல்:
அப்ரில்லா நிறுவனம் அதன் எஸ்ஆர் 160 ஸ்போர்ட்ஸ் ரக ஸ்கூட்டரைத் தழுவியே எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரை வடிவமைத்திருக்கின்றது. இதற்கு புது முக ஸ்டைல் மற்றும் தோற்றமே முக்கிய சான்று. இதுமட்டுமின்றி இதன் முகப்பு பகுதியை ஆர்எஸ்660 சூப்பர் ஸ்போர்ட் இருசக்கர வாகனத்தை முன்மாதிரியாகக் கொண்டு தோற்றம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே அப்ரில்லா நிறுவனத்தின் பிற புகழ்வாய்ந்த இருசக்கர வாகனங்களின் கலவையாகவே இது பார்க்கப்படுகின்றது. அதேசமயம், சில தனித்துவமான ஸ்டைல்களையும் எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் பார்க்க முடிகின்றது. இதன் முகப்பு பகுதியில் சற்று உயரமான கருப்பு விண்ட் ஸ்கிரீன், இரு எல்இடி மின் விளக்குகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவை மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை இருசக்கர வாகனத்திற்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

நிறம்:
அப்ரில்லா நிறுவனம் இந்த புதுமுக ஸ்கூட்டருக்கு பன்முக நிற தேர்வை வழங்குகின்றது. அந்தவகையில், வெள்ளை, நீலம், கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய நான்கு விதமான நிற தேர்வை வழங்குகின்றது.

அம்சங்கள்:
இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து மின் விளக்குகளுமே எல்இடி தரத்திலானவை என கூறுமளவிற்கு பெரும்பாலும் எல்இடி மின் விளக்குகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், முழுமையான டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஸ்பீடோ மீட்டர், டேக்கோ மீட்டர், ப்யூவல் கேஜ், இன்னும் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என எச்சரிக்கும் வசதி, கடிகாரம், யுஎஸ்பி சார்ஜர், குளோவ் பாக்ஸ் உள்ளிட்ட எக்கசக்க சிறப்பு வசதிகள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

எஞ்ஜின்:
அப்பிரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் 160 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய சிங்கிள் சிலிண்டர், 3 வால்வ், ஏர் கூல்ட் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 7,600 ஆர்பிஎம்மில் 10.84 பிஎச்பி பவரையும், 6000 ஆர்பிஎம்மில் 11.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதே திறன் கொண்ட மோட்டாரே எஸ்ஆர் 160 ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்படுகின்றது.

விலை:
புதிய எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டருக்கு ரூ. 1.26 லட்சம் என்ற விலையையே அப்ரில்லா நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது ஓர் பிரீமியம் வசதிக் கொண்ட ஸ்கூட்டராகும். எனவேதான் இந்த உச்சபட்ச விலையை அப்ரில்லா நிர்ணயித்துள்ளது. இது இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீடம் 125 ஸ்கூட்டருக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.