Just In
- 3 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 4 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 5 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 6 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2020ல் இத்தனை அட்வென்ச்சர் பைக்குகள் இந்தியாவிற்கு வந்துள்ளதா!! உங்களது தேர்வு எது?
2020ஆம் வருடத்தை பற்றி நான் கூறி உங்களுக்கு தெரிய வேண்டும் என்றில்லை. இந்த வருடத்தில்தான் உலகில் பல வணிகங்கள் மிக பெரிய சரிவை சந்திந்துள்ளன என்றால் அது மிகையில்லை.
ஆட்டோமொபைல் துறை மட்டும் என்ன விதிவிலக்கா. 2020ல் புதிய தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த நிறுவனங்கள் அப்படியே தங்களது அறிமுக மாடல்களை குறைத்து கொண்டன.
சில மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள் நீண்ட கால கலந்துரையாடல்களுக்கு பிறகு இந்திய சந்தைக்கு புதியதான அட்வென்ச்சர் பைக்குகளை களமிறக்க திட்டமிட்டன. அவற்றில் எத்தனை பைக்குகள் கொரோனாவிற்கு மத்தியிலும் 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.

கேடிஎம் 250 அட்வென்ச்சர்
கொரோனாவினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகள் ஒவ்வொன்றாக தளர்வு செய்யப்பட்ட சமயத்தில் 250 அட்வென்ச்சர் பைக் மாடலை கேடிஎம் நிறுவனம் நம் நாட்டில் அறிமுகப்படுத்தியது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.48 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ப்ளூடூத் இணைப்பு கொண்ட டிஎஃப்டி திரை உடன் வழங்கப்படும் இந்த அட்வென்ச்சர் பைக்கில் ட்யூக் 250 பைக்கில் வழங்கப்படுகின்ற அதே 248சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின்தான் வழங்கப்படுகிறது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர்
2019ல் வாடிக்கையாளர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புமிக்க மாடலாக இருந்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் 2020 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு குறிப்பிடத்தக்க வகையிலான வாடிக்கையாளர்கள் பட்டாளத்தை பெற்று வருகிறது.

கேடிஎம் நிறுவனம் 390 அட்வென்ச்சர் உள்பட தனது 390சிசி வரிசை பைக்குகளில் 373சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்துகிறது. அதிகப்பட்சமாக 9000 ஆர்பிஎம்-ல் 43 பிஎச்பி மற்றும் 7000 ஆர்பிஎம்-ல் 37 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பிஎஸ்6 என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. கேடிஎம் 390 அட்வென்ச்சரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.3.06 லட்சமாக உள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி 310ஜிஎஸ்
இந்தியாவில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் பிஎம்டபிள்யூ பைக்குகளில் ஒன்று ஜி 310ஜிஎஸ். இதன் பிஎஸ்6 வெர்சன் ரூ.2.85 லட்சம் என்ற விலையில் அறிமுகமானது. இது அதன் பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் ரூ.64,000 குறைவாகும்.

புதிய எல்இடி ஹெட்லைட் உடன் இளைஞர்களை கவரும் விதத்தில் வழங்கப்படுகின்ற இந்த பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக்கில் 313சிசி, லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், 4-வால்வு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9500 ஆர்பிஎம்-ல் 33.5 பிஎச்பி மற்றும் 7500 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ட்ரையம்ப் டைகர் 900
புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக் ரூ.13.7 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இந்த 2020ல் அறிமுகமானது. அதுவே இதன் டாப் ராலி ப்ரோ வேரியண்ட் ரூ.15.5 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. பிஎஸ்6 என்ஜின் மட்டுமின்றி பைக்கின் க்ரவுண்ட் க்ளியரென்ஸும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பைக்கின் ஆரம்ப விலையில் கிடைக்கும் டைகர் 900ஜிடி மாடல் பெரும்பாலும் பொது சாலைக்கு ஏற்ற விதத்தில்தான் வடிவமைக்கப்படுகிறது. இதில் அலாய் சக்கரங்கள், தாழ்வான இருக்கை அமைப்பு மற்றும் சற்று குறைவான தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
அதுவே ராலி மற்றும் ராலி ப்ரோ வேரியண்ட்கள் ஆஃப்-ரோடுகளுக்கு தேவையான கருவிகள் மற்றும் வயர்-ஸ்போக் சக்கரங்களை பிரத்யேகமாக பெறுகிறது. முன்பை காட்டிலும் குறைவான எடையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மூன்று வேரியண்ட்களிலும் 888சிசி இன்லைன் 3-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 950எஸ்
டுகாட்டி 2020 மல்டிஸ்ட்ராடா 950எஸ் பைக்கை தனது அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக ரூ.15.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டுவந்தது. இதில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 937சிசி L-இரட்டை, லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9000 ஆர்பிஎம்-ல் 111 பிஎச்பி மற்றும் 7,750 ஆர்பிஎம்-ல் 96 என்எம் டார்க் திறனை பைக்கிற்கு வழங்கும் திறன் கொண்டது. ஸ்போர்ட், டூரிங், அர்பன் மற்றும் எண்டுரோ என்ற நான்கு விதமான ட்ரைவிங் மோட்களில் கிடைக்கும் இந்த பைக்கில் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பில் புதியதாக விரைவான-ஷிஃப்டர் இணைக்கப்பட்டுள்ளது.