இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...? முழு விபரம் இதோ..

2019 ஏப்ரலில் இருந்து 2020 மார்ச் மாதம் வரையில், 2020 நிதியாண்டில் இந்திய சந்தையில் விற்பனையான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பெயர்கள் விற்பனை எண்ணிக்கைகளுடன் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...? முழு விபரம் இதோ..

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவு இந்தியாவில் தொடர்ந்து அதிவேகமாக வளர்ந்து வருவதால் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல் ஒரு புதிய அர்த்தத்தை பெற்று வருகிறது. குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை புதியதாக வாகனம் வாங்குபவர்கள் இடையே அதிகரித்து வருவதை வெளிகாட்டும் வகையில் தற்போது இந்த அட்டவணை வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...? முழு விபரம் இதோ..

இதற்கு முக்கிய காரணம் இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய இவி சலுகை திட்டங்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. போதிய சார்ஜிங் நிலையங்கள் இல்லை, விலை அதிகமாக உள்ளது என்பவை மட்டும் தான் தற்போதைக்கு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் குறையாக பார்க்கப்படுகின்றன.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...? முழு விபரம் இதோ..

கடந்த நிதியாண்டில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனையில் 97 சதவீதத்தை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் பெற்றுள்ளன. மீதி உள்ள மூன்று சதவீதத்தை மட்டுமே எலக்ட்ரிக் பைக்குகளும் எலக்ட்ரிக் சைக்கிள்களும் நிரப்பியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள லிஸ்ட்டில் 25kmph-க்கும் குறைவான வேகத்தில் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...? முழு விபரம் இதோ..
Month Okinawa Hero Electric Ather Ampere Revolt
Apr-19 928 1,694 29 0 0
May-19 847 422 107 103 0
Jun-19 688 305 464 107 0
Jul-19 825 255 300 35 0
Aug-19 818 233 183 57 0
Set-19 914 242 96 155 0
Oct-19 1,007 433 141 176 89
Nov-19 1,394 810 358 129 189
Dec-19 762 424 282 434 202
Jan-20 713 575 285 866 314
Feb-20 662 613 369 286 155
Mar-20 575 1,393 294 151 113
Total 10,133 7,399 2,908 2,499 1,062
Avg Per Month 844 616 242 208 177
Market Share 42.22 30.83 12.12 10.41 4.42

இந்த லிஸ்ட்டின்பார்த்தோமேயானால், 2020 நிதியாண்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையில் ஒகினாவா பிராண்ட் தான் அதிக இ-ஸ்கூட்டர்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. இதன் மொத்த விற்பனை 10,000 என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...? முழு விபரம் இதோ..

எலக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவிற்காக முதன்முதலாக இந்தியாவில் ஃபேம் 2 அனுமதியை பெற்ற பிராண்ட் ஆக விளங்கும் ஒகினாவா தற்சமயம் 7 மாடல்களை சந்தைப்படுத்தி வருகிறது. இதில் பிரபலமான ஒகினாவா பிரைஸ் (ரூ.69,790), பிரைஸ் ப்ரோ (ரூ.79,990) மற்றும் ஐ பிரைஸ் (ரூ.1.08 லட்சம்) உள்ளிட்டவை அடங்குகின்றன.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...? முழு விபரம் இதோ..

கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் சந்தையில் பதிவு செய்த 10,133 என்ற விற்பனை எண்ணிக்கை மொத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கையில் 42.22 சதவீதமாகும். இந்நிறுவனம் அதிகப்படியாக தயாரிப்புகளை விற்பனை செய்த மாதம் என்று பார்த்தால், 2019 நவம்பர்.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...? முழு விபரம் இதோ..

இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 1,394 ஒகினாவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டின் சராசரி விற்பனை எண்ணிக்கை 844 ஆகும். இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஹீரோ எலக்ட்ரிக் பிராண்ட் உள்ளது. இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகன பிராண்ட் 2020 நிதியாண்டில் 7,399 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...? முழு விபரம் இதோ..

இது மொத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கையில் 30.83 சதவீதம் ஆகும். எலக்ட்ரிக் பைக்குகளையும் விற்பனை செய்துவரும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் இந்த அட்டவணையில் உள்ள மற்ற தயாரிப்பு நிறுவனங்களை காட்டிலும் அதிக டீலர்ஷிப் மையங்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...? முழு விபரம் இதோ..

மூன்றாவது இடத்தில் 2,908 (12.12 %) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கையுடன் ஏத்தர் எனர்ஜியும், நான்காவதாக 2,499 (10.41%) விற்பனை எண்ணிக்கையுடன் ஆம்பியரும் உள்ளன. எலக்ட்ரிக் பைக்குகளையும் விற்பனை செய்யும் ரிவோல்ட் 1,062 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை 2020 நிதியாண்டில் விற்பனை செய்து இந்த லிஸ்ட்டில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

Most Read Articles

English summary
Okinawa was the only high speed electric scooter maker in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X