Just In
- 36 min ago
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- 3 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 10 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 11 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
Don't Miss!
- Movies
வீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா? நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்
- Sports
"கப்பாவில்" ஆஸி.யை கதற வைக்கும் சுப்மான் "கில்லி".. தொடரும் ஆதிக்கம்.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்!
- News
காங்கிரஸுக்கு 10 சீட்தானாம்.. கழற்றிவிட்டே தீருவது என முடிவோடுதான் இருக்கிறதா திமுக?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ட்ரையம்ப் பைக் வைத்துள்ளீர்களா? அப்போ நீங்கதான் இந்த அப்கிரேட் விஷயத்தை முதலில் தெரிஞ்சிக்கனும்...
ட்ரையம்ப் நிறுவனத்தின் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மற்றும் டைகர் 800 மோட்டார்சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மை ட்ரையம்ப் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் ஏற்கனவே விற்கப்பட்ட ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மற்றும் டைகர் 800 மோட்டார்சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் என்று ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி வாடிக்கையாளரை நாவிகேஷன், இசை உள்பட ஏகப்பட்ட வசதிகளை ஸ்மார்ட்போன் இணைப்புடன் உபயோகப்படுத்த அனுமதிக்கும். இந்த சிஸ்டம் வருகிற டிசம்பர் 21ஆம் தேதி முதல் மேற்கூறப்பட்ட மோட்டார்சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

ஆனால் உங்களது ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மாடல் 2017-ல் இருந்து 2019-க்கு உள்ளாகவும், டைகர் 800 மாடல் 2018-ல் இருந்து 2019ஆம் ஆண்டிற்கு உள்ளாகவும் வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும். இவற்றை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி அடுத்த வருடத்தில் டைகர் 1200 பைக்கிற்கும் வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே கூறியதுதான், மை ட்ரையம்ப் கனெக்டிவிட்டி சிஸ்டம் கூகுளின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட ட்ரையம்ப்பின் ‘டர்ன்-பை-டர்ன்' நாவிகேஷன், ஒருங்கிணைக்கப்பட்ட கோப்ரோ கண்ட்ரோல் சிஸ்டம், இசை உள்பட மொபைல் போனின் செயல்பாடுகள் மற்றும் பைக்கின் தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை கண்காணிக்க முடியும்.

ட்ரையம்ப்பின் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன் சிஸ்டம்
மை ட்ரையம்ப் இணைப்பு அமைப்பானது TFT இன்ஸ்ட்ரூமெண்ட் திரை வழியாக மோட்டார்சைக்கிளில் நேரலையான நாவிகேஷனை வழங்கும். இந்த அமைப்பின் செயல்பாட்டிற்கு ஸ்மார்ட்போனில் உள்ள ப்ளூடூத் இணைப்பே போதுமானது.

இந்த இணைப்பு ஹெட்செட் அணிந்திருந்தால் அதன் மூலம் உறுதி செய்யப்படும். இதற்கு முதலில் நீங்கள் ஐஒஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் மை ட்ரையம்ப் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதில் கூகுளின் உதவியுடன் வரையறுக்கப்பட்ட வரைப்படத்தில் இயங்கவுள்ள பாதையின் வழித்தடத்தை குறிக்க வேண்டும். அதன்பின் இயங்க வேண்டிய பாதைக்கான வழிக்காட்டுதல் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் திரை மூலமாக ஓட்டுனருக்கு தெரிவிக்கப்படும்.

ஒருங்கிணைக்கப்பட்ட கோப்ரோ கண்ட்ரோல் சிஸ்டம்
மை ட்ரையம்ப் இணைப்பு அமைப்பு, உலகின் முதல் ஒருங்கிணைந்த மோட்டார் சைக்கிள் கோ-ப்ரோ கட்டுப்பாட்டு அமைப்பை உள்ளடக்கியுள்ளது. இது ஓட்டுனரை கேமராவில் பயணத்தை காட்சிப்படுத்த அனுமதிக்கிறது. மோட்டார் சைக்கிளின் டிஎஃப்டி கருவிகள் மற்றும் இடது கை சுவிட்ச் கியூப் மூலம் கோ-ப்ரோ செயல்பாடுகளை அணுகவும் கட்டுப்படுத்தவும் முடியும்.

டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் மூலமாக இந்த வசதிகளை பெறும் ட்ரையம்ப் மோட்டார்சைக்கிளில் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் 2017-இல் இருந்து 2019 வரையில் ஒரே ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மாடலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2018-இல் இருந்து 2019 வரையில் டைகர் 800 பைக் எக்ஸ்ஆர்எக்ஸ், எக்ஸ்சிஎக்ஸ், எக்ஸ்சிஏ உள்ளிட்ட வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.