Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்களுக்கான பைக்கை உங்க விருப்பம்போல் மாத்திக்கலாம்... சிறப்பு சேவையை தொடங்கிய பிரபல நிறுவனம்! எது தெரியுமா?
தங்களுக்கு தேவையான பைக்கை தாங்களே கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியை பிரபல நிறுவனம் இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

பிரிட்டிஷ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ட்ரையம்ஃப் நிறுவனம், வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக ஓர் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கான இருசக்கர வாகனத்தை தாங்களே சிறப்பு அணிகலன்கள் மூலம் தனி பயனாக்கம் (customization) செய்து கொள்ளலாம் என அறிவித்திருக்கின்றது.

இந்திய இளைஞர்களைக் கவரும் வகையில் இதுகுறித்த அறிவிப்பை இன்று (டிசம்பர் 8) ட்ரையம்ஃப் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் இருசக்கர வாகனங்களை பரந்தளவு தேர்வில் வழங்கி வருகின்றது. இதைப் போலவே அதற்கான சிறப்பு அணிகலன்களையும் எக்கச்சக்கமாக விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவற்றையே தங்களுக்கேற்பவாறு தங்களின் பைக்குகளில் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக ட்ரையம்ஃப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் மற்றும் செல்போன் செயலியில் வசதி ஏற்படுத்தப்பட்டடிருக்கின்றது. ஆகையால், ஷோரூமிற்கு செல்லாமலேயே ஆன்லைன் ஊடாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கான இருசக்கர வாகனத்தைத் தாங்களே மாற்றியமைத்துக் கொள்ளலாம். பைக்குகளுக்காக 160க்கும் மேற்பட்ட தனித்துவமான அக்ஸசெரீஸ்களை இந்த நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

அவை பைக்கையும், ரைடையும் மிகவும் உற்சாகமானதாக மாற்ற உதவும். டிஜிட்டல் முறையில் தனி பயனாக்கம் செய்கின்றபோது வெவ்வேறு விதமான கூறுகளைக் கொண்டு நமக்கான பைக்கை நம்மால் அலங்கரிக்க முடியும். எது பொருந்துகின்றது, எது பொருந்தவில்லை என்பதையும் மிக தெளிவாக நம்மால் காண முடியும். எனவேதான் சிறப்பு வசதியை ஆன்லைனில் ட்ரையம்ஃப் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ட்ரையம்ஃப் நிறுவனம், பன்முக ஸ்டைல் கொண்ட இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அந்தவகையில், கிளாசிக், அட்வென்சர் மற்றும் மாடர்ன் உள்ளிட்ட பல ரக மோட்டார்சைக்கிள்களை அது விற்பனைக்கு வழங்கி வருவது.

மேலும், விற்பனைச் செய்யும் அனைத்து இருசக்கர வாகனங்களுமே பிரீமியம் ரக மோட்டார்சைக்கிள்களாக மட்டுமே காட்சியளிக்கின்றன. ஆகையால், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சிறப்பு அம்சங்களுக்கு குறைச்சலின்றி ட்ரையம்ஃப் பைக்குகள் காட்சியளிக்கின்றன.

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே தங்களுக்கான பைக்கை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்றும் விதமாக புதிய கஸ்டமைசேஷன் தேர்வை ட்ரையம்ஃப் வெளியிட்டிருக்கின்றது. இதனடிப்படையில், தங்களின் பைக்கிற்கான நிறத்தைக் கூட தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு, அனைத்தும் தனிப் பயனாக்கம் செய்யப்பட்ட பின்னர் அந்த வாகனத்திற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் வாயிலாக கொடுக்கலாம். இதனை சில செயல்முறைகளுக்கு பின்னர் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான பணியை விற்பனையாளர் மேற்கொள்வார்.