Just In
- 41 min ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 1 hr ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Movies
பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு ரம்யாவிடம் மறைமுகமாக காதலை சொல்லும் சோம்? இன்ஸ்டா பக்கத்த பாருங்க!
- News
எல்லாம் கூடி.. வெண்ணை திரண்டு வரும்போது.. இப்படி பானையை போட்டு உடைக்கிறாரே பாரதி!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Lifestyle
நாவூற வைக்கும்... பஞ்சாபி மட்டன் மசாலா
- Sports
ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிக குறைந்த விலையில் ரோட்ஸ்டர் ரக பைக்கை களமிறக்கும் டிரையம்ப்?.. எப்போது அறிமுகம் என தெரியுமா?
குறைந்த விலையில் ரோட்ஸ்டர் ரக பைக்கை களமிறக்க டிரையம்ப் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்வாய்ந்த மோட்டார் சைக்கிள் நிறுவனமான டிரையம்ப், குறைந்த விலை ரோட்ஸ்டர் ரக மோட்டார்சைக்கிளை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியாகியுள்ளது. எனவே, இந்நிறுவனம் மீண்டும் நடுத்தர எடையுள்ள இருசக்கர வாகன உற்பத்தியில் இறங்க இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை டிரையம்ப் நிறுவனம் அதன் ஸ்ட்ரீட் மாடல்களைத் தழுவிய புதிய தயாரிப்பாக அறிமுகம் செய்ய இருக்கின்றது. மேலும், இந்த தயாரிப்புகளுக்கு டிரிடண்ட் எனும் பெயரை வைக்க இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. இந்த பெயரில் 1990ம் ஆண்டுகளில் இருசக்கர வாகனங்களை டிரையம்ப் நிறுவனம் விற்பனைச் செய்து வந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே டிரிடண்ட் வரிசைக்கு மீண்டும் உயிர்பளிக்கும் விதமாக புதிய நடுத்தர எடையில் இருசக்கர வாகனங்களைக் குறைந்த விலையில் களமிறக்க டிரையம்ப் திட்டமிட்டுள்ளது. டிரையம்ப் ரோட்ஸ்டர் வரிசையை விரிவாக்கம் செய்யும் விதமாக அறிமுகம் செய்யப்படும் இந்த மோட்டார்சைக்கிள் அதன் வரிசையிலேயே இல்லாத வகையில் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு களமிறக்க இருப்பதாகவும் அது அறிவித்துள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளை உலகளாவிய வெளியீடாக வருகின்ற 2021ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. அப்போது இந்திய அறிமுகம் பற்றிய தகவலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் அண்மையில் காலங்களாக ஸ்போர்ட்ஸ் மற்றும் ரோட்ஸ்டர் வாகனங்களுக்கான சந்தை விரிவாகிக் கொண்டிருக்கின்றது. எனவே, இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக டிரையம்ப் குறைந்த விலை டிரிடண்ட் ரோட்ஸ்டர் பைக்கை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பைக் தாய்லாந்தில் வைத்தே தயாரிக்கப்பட இருக்கின்றது. விலையை குறைக்க செய்வதற்கு வேண்டுமானால், இந்த பைக் இந்தியாவில் வைத்து கட்டமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலம் எதுவும் டிரையம்ப் வெளியிடவில்லை. டிரையம்ப் டிரிடண்ட் ஹோண்டாவின் சிபி650ஆர், கவாஸகி இசட்650 மற்றும் யமஹா எம்டி07 ஆகிய பைக்குளுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

புதிய பைக்கின் பெயர் 90ஸ் காலத்தினுடையதாக இருந்தாலும், இதன் ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்கள் அனைத்தும் நவீன யுகத்திற்கு ஏற்றதாக உள்ளது. டிரையம்ப் டைகர்900 மாடலை வடிவமைத்த ரோடோல்ஃபோ ஃப்ரஸ்கோலி என்பவரே இந்த பைக்கையும் வடிவமைத்துள்ளார். ஆகையால், டைகர் 900 மாடலில் காணப்படும் கட்டுமஸ்தான உடல்வாகை புதிய பைக்கிலும் எதிர்பார்க்கலாம்.

புதிய டிரையம்ப் டிரிடெண்ட் எப்படி இருக்கும் என்ற முன்னுதாரண புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்-பைக்கைப் பற்றிய ஒரு சில தகவல்கள் நமக்கு தெரியவந்துள்ளது. அவற்றைத் தொடர்ந்து பார்க்கலாம்.
ஹேண்டில் புதிய தோற்றத்திலும், தனியாக தெரியும் வகையிலும் பொருத்தப்பட இருக்கின்றது. இதேபோன்று இருக்கை சற்று உயரமாகவும், ஃபூட் பெக்குகள் சற்று பின்னோக்கியும் நிலை நிறுத்தப்பட இருப்பது புகைப்படத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, இந்த பைக்கில் அண்டர் பெல்லி எக்சாஸ்ட் மற்றும் அப்சைட்-டவுண் பிரண்ட் சஸ்பென்ஷன் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி வட்ட வடிவ எல்இடி முகப்பு மின் விளக்கு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் சிறிய ரக பின் பக்க மின் விளக்கு உள்ளிட்டவை இந்த பைக்கில் இடம்பெறவிருக்கின்றன.

இவையனைத்தும் டிரையம்பால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. புகைப்படத்தின் வாயிலாக யூகித்து வெளியிடப்பட்டிருக்கும் தகவல் ஆகும். இதனடிப்படையிலேயே இந்த பைக்கில் 3 சிலிண்டர் எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பிரிவில் போட்டி அதிகம் என்பதால் இந்த அதிக திறனுடைய எஞ்ஜினையே டிரையம்ப் நிச்சயம் அறிமுகம் செய்யும் என கூறப்படுகின்றது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை டிரையம்ப் விரைவில் வெளியிடும். அதேசமயம், இந்த பைக்கின் விலை குறைப்பிற்காக ஸ்டீல் சேஸிஸ் மற்றும் குறைந்த தொழில்நுட்ப வசதி உள்ளிட்டவற்றை டிரையம்ப் கையாள இருக்கின்றது. இந்த நடவடிக்கையால் அந்த பைக்கின் தோற்றம், திறன் எந்த விதத்திலும் குறைந்துவிடாது என கூறப்படுகின்றது.

ஆகையால், அதிகபட்சம் இந்த பைக் இந்தியாவில் ரூ. 6 லட்சம் முதல் 8 லட்ச ரூபாய் வரையிலான விலையில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ரோட்ஸ்டர் ரகத்தில் விற்பனையில் இருக்கும் பெரும்பாலான பைக்குகள் இந்த விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிக விலையில் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான், புதிய டிரையம்ப் டிரிடெண்ட் குறைந்த விலை பைக் என அழைக்கப்படுகின்றது.