ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

அதிசெயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் கவரும் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த ஆண்டு ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் என்ற ரோட்ஸ்டெர் மோட்டார்சைக்கிளும், ராக்கெட் 3 ஜிடி என்ற அதன் டூரிங் ரக மாடலும் உலக அளவில் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து, ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் மோட்டார்சைக்கிள் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், தற்போது அதன் டூரிங் மாடலான ராக்கெட் 3 ஜிடி என்ற அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மாடல் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளுக்கு ரூ.18.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ராக்கெட் 3 ஆர் பைக்கைவிட ரூ.40,000 கூடுதல் விலையிலும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ட்ரையம்ஃப் பைக் மாடல்களில் அதிக விலை கொண்ட மாடலாகவும் இது வந்துள்ளது. அதற்கு தக்கவாறு கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் மோட்டார்சைக்கிளின் டிசைன் அம்சங்களையே இந்த மோட்டார்சைக்கிளும் பெற்றிருந்தாலும், சில கூடுதல் சிறப்புகளுடன் தனித்துவம் பெற்றுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், கண்ணீர் துளி போன்ற உருவத்தில் வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் டேங்க், அகலமான டயர்கள்,தனித்துவமான சைலென்சர் அமைப்பு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கினஅறன.

ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிளில் தாழ்வான இருக்கை அமைப்பு, அட்ஜெஸ்ட் வசதியுடன் ஃபுட்பெக்குகள், வசதியான ஓட்டுதல் அனுபவத்தை அளிக்கும் ஹேண்டில்பார், ஃப்ளை ஸ்க்ரீன் அமைப்பு, ஸ்போக்ஸ் சக்கரங்கள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.

ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பிரம்மாண்ட மோட்டார்சைக்கிளில் டிஎஃப்டி திரையடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புளூடூத் வசதி, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதிகளும் உள்ளன.

ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிளில் கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், கீ லெஸ் இக்னிஷன், ஹீட்டடு க்ரிப் கவர்கள், கோ ப்ரோ கேமராவுக்கான கட்டுப்பாட்டு வசதி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 4 ரைடிங் மோடுகள் ஆகியவை உள்ளன.

ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ட்ரையம்ஃப்ட் ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிளில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 2,458சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 165 பிஎச்பி பவரையும், 221 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடனஅ 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி மற்றும் ரைடு பை ஒயர் தொழில்நுட்பங்கள் உள்ளன.

ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிளின் முன்புற்ததில் 47 மிமீ இன்வர்டெட் கேட்ரிட்ஜ் கொண்ட ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் உள்ளது. முன்புறத்தில் பிரெம்போ ஸ்டைல்மா காலிபர்களுடன் இரண்டு 320 மிமீ டிஸ்க்குகள் கொண்ட பிரேக்குகளும், பின்புறத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

டிசைன், தொழில்நுட்ப அம்சங்கள், சக்திவாய்ந்த எஞ்சின் என அனைத்திலும் மதிப்புவாய்ந்த டூரர் ரக மோட்டார்சைக்கிள் மாடலாக இருக்கும்.

Most Read Articles

English summary
Triumph has launched its ultimate tourer motorcycle, Rocket 3 GT in India.
Story first published: Thursday, September 10, 2020, 12:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X