புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக்கின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை தொடர்ந்து காணலாம்.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் கூடிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்ற மாடல். செயல்திறன் மிக்க எஞ்சின், தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் இந்த பைக்கிற்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சினுடன் ஸ்ட்ரீட் ட்வின் பைக் மாடல் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இந்த பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 900 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 65 எச்பி பவரையும், 80 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லைட், தட்டையான இருக்கை அமைப்பு, வட்ட வடிவிலான ரியர் வியூ மிரர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு வண்ண பாகங்களும் இந்த பைக்கின் வசீகரத்தை கூட்டுகிறது. டிஜிட்டல் திரை மற்றும் அனலாக் டயல் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இந்த பைக்கில் ரைடு பை ஒயர், டிராக்ஷன் கன்ட்ரோல், ட்வின் போர்ட் புகைப்போக்கி குழல்கள், முன்புறத்தில் 310 மிமீ டிஸ்க் பிரேக், பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

தவிரவும், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. அதேபோன்று, முன்புறத்தில் KYB 41 மிமீ ஃபோர்க்குகளும், பின்புறத்தில் KYB ட்வின் ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக்கில் ஜெட் பிளாக், கொரோஸி ரெட் மற்றும் மேட் அயன்ஸ்டோன் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பிஎஸ்-6 மாடலுக்கு ரூ.7.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பழைய மாடல் விலையிலேயே வந்தாலும், வண்ணத் தேர்வுக்கு தக்கவாறு ரூ.13,000 வரை கூடுதலாக இருக்கும்.

Most Read Articles

English summary
The new Triumph Street Twin BS6 has been launched in India at a price of Rs 7.45 lakh (ex-showroom).
Story first published: Monday, August 17, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X