ட்ரையம்ப்பின் இந்திய சந்தைக்கான புதிய 900சிசி பைக்... ஷோரூம்களை வந்தடைந்தது...

டைகர் 900ஜிடி, டைகர் 900 ராலி மற்றும் டைகர் 900 ராலி ப்ரோ என்ற மூன்று விதமான வேரியண்ட்களை கொண்ட 2020 ட்ரையம்ப் டைகர் 900 மாடல் இந்திய டீலர்ஷிப்களை வந்தடைய துவங்கியுள்ளது. இதுகுறித்து பைக்வாலே செய்தி தளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்கள் மூலம் கிடைத்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ட்ரையம்ப்பின் இந்திய சந்தைக்கான புதிய 900சிசி பைக்... ஷோரூம்களை வந்தடைந்தது...

ட்ரையம்ப் டைகர் 900 பைக்கின் மூன்று வேரியண்ட்களில் எண்ட்ரீ-லெவல் 900 ஜிடி-யின் விலை ரூ.13,70,000 ஆகவும், ராலி மற்றும் ராலி ப்ரோ வேரியண்ட்களின் விலைகள் முறையே ரூ.14,35,000 மற்றும் ரூ.15,50,000 ஆகவும் இந்திய எக்ஸ்ஷோரூமில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ட்ரையம்ப்பின் இந்திய சந்தைக்கான புதிய 900சிசி பைக்... ஷோரூம்களை வந்தடைந்தது...

ட்ரையம்ப் நிறுவனத்தின் டைகர் 800 பைக் மாடலுக்கு மாற்றாக புதிய டைகர் 900 பைக் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் டைகர் 800எக்ஸ்ஆர் பைக்கிற்கு மாற்றாக டைகர் 900ஜிடி வேரியண்ட்டும் டைகர் 800எக்ஸ்சி வேரியண்ட்டிற்கு மாற்றாக டைகர் 900 ராலி வேரியண்ட்டும் விளங்கும்.

ட்ரையம்ப்பின் இந்திய சந்தைக்கான புதிய 900சிசி பைக்... ஷோரூம்களை வந்தடைந்தது...

தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களில் அட்வென்ஜெர் டூரர் தோற்றத்தில் காட்சியளிக்கும் புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக் மாடல் சாகச பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக விளங்கும். இந்த 2020 பைக்கில் 888சிசி, இன்லைன் 3-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு, 12-வால்வு, டிஒஎச்சி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ட்ரையம்ப்பின் இந்திய சந்தைக்கான புதிய 900சிசி பைக்... ஷோரூம்களை வந்தடைந்தது...

6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,750 ஆர்பிஎம்-ல் 93.9 பிஎச்பி பவரையும், 7,250 ஆர்பிஎம்-ல் 87 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. முன்புறத்தில் இந்த பைக்கில் எல்இடி தரத்தில் ஹெட்லைட்கள் மற்றும் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ட்ரையம்ப்பின் இந்திய சந்தைக்கான புதிய 900சிசி பைக்... ஷோரூம்களை வந்தடைந்தது...

இவற்றுடன் புதிய டைகர் 900 பைக் ஆனது டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரையும் பெற்றுள்ளது. ப்ளூடூத் வசதியை கொண்ட இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மூலமாக ஓட்டுனர் தனது ஸ்மார்ட்போனை பைக்குடன் இணைத்து கொள்ள முடியும்.

ட்ரையம்ப்பின் இந்திய சந்தைக்கான புதிய 900சிசி பைக்... ஷோரூம்களை வந்தடைந்தது...

இதன் மூலமாக தொலைப்பேசிக்கு வரும் அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் நாவிகேஷன் உள்ளிட்டவற்றை பைக்கின் க்ளஸ்ட்டர் மூலமாகவே அறிந்து கொள்ள முடியும். இதுமட்டுமின்றி ரைடு-பை-ஒயர் தொழிற்நுட்பம், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், 6 ஸ்பீடு இனர்ஷியல் மெஷர்மெண்ட் யூனிட் மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்டவையும் இந்த பைக்கில் உள்ளன.

ட்ரையம்ப்பின் இந்திய சந்தைக்கான புதிய 900சிசி பைக்... ஷோரூம்களை வந்தடைந்தது...

ட்ரையம்ப் நிறுவனம் புதிய டைகர் 900 பைக்கிற்கு சாலைக்கு ஏற்றவாறு ரைடர் மாற்றி கொள்ளும் வகையில் 6 விதமான ரைடிங் மோட்களை வழங்கியுள்ளது. இதன் ஜிடி வேரியண்ட்டில் சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் 45மிமீ-ல் தலைக்கீழான மர்சோச்சி ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ட்ரையம்ப்பின் இந்திய சந்தைக்கான புதிய 900சிசி பைக்... ஷோரூம்களை வந்தடைந்தது...

ஆனால் அதேநேரம் டைகர் 900 பைக்கின் டாப் வேரியண்ட்களான ராலி மற்றும் ராலி ப்ரோவில் அதே 45மிமீ-ல் ஷோவா ப்ராண்டின் தலைக்கீழான ஃபோர்க்குகள் உள்ளன. இருப்பினும் பின்புறத்தில் மூன்று வேரியண்ட்களிலும் மோனோஷாக் அப்சார்பர்ஸ் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

ட்ரையம்ப்பின் இந்திய சந்தைக்கான புதிய 900சிசி பைக்... ஷோரூம்களை வந்தடைந்தது...

தற்போது டீலர்ஷிப்களை வந்தடைந்துள்ள இந்த பைக்குகளுக்கான முன்பதிவுகளை தயாரிப்பு நிறுவனம் ஜூன் மாத துவக்கத்தில் இருந்தே ரூ.50,000 என்ற முன்தொகை பணத்துடன் ஏற்று கொண்டு வருகிறது. இந்த 900சிசி பைக்கிற்கு போட்டியாக சந்தையில் டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950, பிஎம்டபிள்யூ எஃப்900 எக்ஸ்ஆர் போன்ற பைக் மாடல்கள் உள்ளன.

Most Read Articles
English summary
2020 Triumph Tiger 900 reaches dealership
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X