செம கெத்தாக போஸ் கொடுத்த புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக்... அதிகாரப்பூர்வ படங்கள்!

ட்ரையம்ஃப் நிறுவனத்தின் புதிய ட்ரைடென்ட் பைக் தயாரிப்பு நிலையை நெருங்கிவிட்டதை காட்டும் வதையில் புதிய படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக்கின் புதிய படங்கள் வெளியீடு!

ட்ரையம்ஃப் நிறுவனம் ட்ரைடென்ட் என்ற புத்தம் புதிய ரோட்ஸ்டெர் வகை பைக் மாடலை உருவாக்கி இருக்கிறது. கடந்த 1969ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ட்ரைடென்ட் பைக்கின் பெயரிலேயே இந்த புதிய மாடல் நவீன அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக்கின் புதிய படங்கள் வெளியீடு!

பழைய டிரைடென்ட் பைக்கின் சில டிசைன் அம்சங்கள் இந்த புதிய ட்ரைடென்ட் பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் கிளாசிக் ரோட்ஸ்டெர் பைக் மாடலாக நிலைநிறுத்தப்படும்.

ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக்கின் புதிய படங்கள் வெளியீடு!

ஹோண்டா சிபி750 பைக் மாடலுக்கு இணையான ரகத்தில் இந்த பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த பைக்கில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது.

ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக்கின் புதிய படங்கள் வெளியீடு!

அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய ட்ரைம்யஃப் ட்ரைடென்ட் பைக் தற்போது இறுதிக்கட்ட சோதனையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக்கின் புதிய படங்கள் வெளியீடு!

இதனிடையே, சில முக்கிய பாகங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அடையாளம் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த பைக்கின் படங்களை ட்ரையம்ஃப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக்கின் புதிய படங்கள் வெளியீடு!

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட புரோட்டோடைப் மாடலை அப்படியே தயாரிப்பு நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். டிசைனில் சில மாற்றங்களுடன் தயாரிப்பு நிலையை இந்த பைக் நெருங்கி இருப்பது தெரிகிறது.

ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக்கின் புதிய படங்கள் வெளியீடு!

வட்ட வடிவிலான ஹெட்லைட், உயர்த்தப்பட்ட ஹேண்டில்பார், ஸ்டெப் அப் இருக்கை, உயர்த்தப்பட்ட வால் பகுதி, மிக அடக்கமான அமைப்புடன் புகைப்போக்கி குழாய் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக்கின் புதிய படங்கள் வெளியீடு!

இந்த புதிய பைக் மாடலானது புத்தம் புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் இருக்கும் 765சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ரைடிங் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக்கின் புதிய படங்கள் வெளியீடு!

புதிய ட்ரையம்ஃப்ட் ட்ரைடென்ட் பைக் இந்தியா உள்பட உலக அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. ஹோ்டா சிபி650ஆர், கவாஸாகி இசட்650 ஆகிய பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Triumph has released new images of the Trident bike in camouflaged form.
Story first published: Wednesday, September 30, 2020, 12:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X