டிவி பழுது பார்ப்பவர் உருவாக்கிய 'சமூக இடைவெளி' மின்சார பைக்.. எதையும் சாதிக்க திறன் மட்டும் போதும்!

பெரியளவில் படிக்காத டிவி பழுதுநீக்கம் பணி செய்து வரும் இளைஞர் ஒருவர், கொரோனா வைரசின் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கான 'சமூக இடைவெளி' மின்சார பைக்கை உருவாக்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணாலம்.

டிவி பழுது பார்ப்பவர் உருவாக்கிய 'சமூக இடைவெளி' மின்சார பைக்.. எதையும் சாதிக்க திறன் மட்டும் போதும்..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசிடம் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்வது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. மாஸ்க் அணிவது மற்றும் கிருமி நாசினிகள் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலமே வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதனாலயே உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை போல் அத்தியாவசிய தேவைகளின் பட்டியலில் இந்த பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றது.

டிவி பழுது பார்ப்பவர் உருவாக்கிய 'சமூக இடைவெளி' மின்சார பைக்.. எதையும் சாதிக்க திறன் மட்டும் போதும்..!

இதுமட்டுமின்றி சமூக இடைவெளி விட்டு செயல்படுவதும் தற்போது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதனை உறுதி செய்யும் வகையிலும், சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனம் ஒன்றை கஸ்டமைஸ் செய்துள்ளார். இது பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

டிவி பழுது பார்ப்பவர் உருவாக்கிய 'சமூக இடைவெளி' மின்சார பைக்.. எதையும் சாதிக்க திறன் மட்டும் போதும்..!

தற்போது உலக நாடுகள் முதல் சுகாதார பாதுகாப்பு அமைப்புகள் வரை சமூக இடைவெளியையே வலியுறுத்தி வருகின்றன.

ஏனென்றால், மனித குலத்திற்கே பேராபத்தை விளைவிக்கும் வகையில் பரவி வரும் கொரோனா வைரஸ், சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்களின் மூலமே அதிகம் பரவியிருக்கின்றது.

டிவி பழுது பார்ப்பவர் உருவாக்கிய 'சமூக இடைவெளி' மின்சார பைக்.. எதையும் சாதிக்க திறன் மட்டும் போதும்..!

இந்த வைரசிடம் இருந்து தப்பிப்பதற்காக என்னதான் மாஸ்க் மற்றும் கிருமி நாசினிகளைப் பயன்படுத்தினாலும் பாதிக்கப்பட்டவர்களின் இரும்பல், தும்பல் போன்றவற்றின் மூலம் காற்றில் பரவும் கொரோனா குறைந்தது ஒரு மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் இருக்கும் நபர்கள் படர்ந்து, பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

டிவி பழுது பார்ப்பவர் உருவாக்கிய 'சமூக இடைவெளி' மின்சார பைக்.. எதையும் சாதிக்க திறன் மட்டும் போதும்..!

அதாவது, தன்மீது கொரோனா வைரஸ் படர்ந்திருப்பதை அறியாத நபர், கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகிய பகுதிகளைத் தொடுவதன் மூலம் வைரஸ் அந்நபரின் உடற்பகுதிக்குள் சென்று விடுகின்றது. இதையடுத்து, மனித உடலை அடைந்த வைரஸ் முக்கிய பணியாக அவரின் சுவாச மண்டலங்களை குறியாக வைத்து தாக்க தொடங்கும்.

டிவி பழுது பார்ப்பவர் உருவாக்கிய 'சமூக இடைவெளி' மின்சார பைக்.. எதையும் சாதிக்க திறன் மட்டும் போதும்..!

இந்த நிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே மத்திய மற்றும் மாநில அரசுகள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும்போது குறைந்தது ஒரு மீட்டர் அல்லது 3 அடி இடைவெளி விட்டு பொருட்களை வாங்குமாறு கூறப்படுகின்றது. ஆனால், பெரும்பாலானோர் இதைக் கடைபிடிப்பதே இல்லை.

டிவி பழுது பார்ப்பவர் உருவாக்கிய 'சமூக இடைவெளி' மின்சார பைக்.. எதையும் சாதிக்க திறன் மட்டும் போதும்..!

இந்நிலையில், சமூக இடைவெளியின் அதீத முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் திரிபுராவைச் சேர்ந்த சஹா என்ற இளைஞர் ஒருவர் சமூக இடைவெளியை அம்சமாகக் கொண்ட மின்சார இரு சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார். இந்த மின்சார இரு சக்கர வாகனத்தை அவரின் குடும்பத்தினருடன் பயணிக்கும்போதும் கூட அந்த இளைஞர் பயன்படுத்தி வருகின்றார். இதுகுறித்த வீடியோவை நிபேதிதா மஜும்தர் என்ற யுடியூப் சேனல் வெளியிட்டுள்ளது.

டிவி பழுது பார்ப்பவர் உருவாக்கிய 'சமூக இடைவெளி' மின்சார பைக்.. எதையும் சாதிக்க திறன் மட்டும் போதும்..!

இந்த புதிய சமூக இடைவெளி மின்சார இருசக்கர வாகனம் பார்ப்பதற்கு நீள மிதிவண்டியைப் போன்று காட்சியளிக்கின்றது. அதற்கேற்ப, பைக்கின் என்ற பிம்பத்தை உருவாக்குகின்ற எந்தவொரு பேனல்களையும் அது பெற்றிருக்கின்றது. ஆனால், வீல் மற்றும் பின் பக்க வீலில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார் உள்ளிட்டவை அந்த வாகனத்திற்கு பைக் என்ற அம்சத்தை வழங்கியிருக்கின்றது.

டிவி பழுது பார்ப்பவர் உருவாக்கிய 'சமூக இடைவெளி' மின்சார பைக்.. எதையும் சாதிக்க திறன் மட்டும் போதும்..!

மேலும், வாகன ஓட்டி மற்றும் பின்னிருக்கையில் அமர்பவர் என இருவருக்கும் சமூக இடைவெளியை உறுதி செய்கின்ற வகையில் குறைந்தது ஒரு அடிக்கும் அதிகமான இடைவெளி விடப்பட்டிருக்கின்றது. அந்த இடைவெளியில்தான் மின்சார பைக்கிற்கு தேவையான ரீ-சார்ஜபிள் பேட்டரி பொருப்பட்டிருக்கின்றது.

டிவி பழுது பார்ப்பவர் உருவாக்கிய 'சமூக இடைவெளி' மின்சார பைக்.. எதையும் சாதிக்க திறன் மட்டும் போதும்..!

இந்த பேட்டரி, நேரடியாக பின்பக்க வீலுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின் மோட்டாருக்கு தேவையான திறனை வழங்கும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் குறைந்தது 80 கிமீ தூரம் வரை ரேஞ்ச் வழங்கும். மேலும், பைக்கில் இடம்பெற்றிருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 40 கிமீ வேகத்தில் செல்லும்.

இளைஞரின் இந்த முயற்சிக்கு திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சரும்கூட வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிவி பழுது பார்ப்பவர் உருவாக்கிய 'சமூக இடைவெளி' மின்சார பைக்.. எதையும் சாதிக்க திறன் மட்டும் போதும்..!

இதுதவிர பொதுமக்கள் இணைய வாசிகள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். காரணம், இந்த மின்சார இருசக்கர வாகனத்தை வடிவமைத்தவர் பள்ளி படிப்பைக்கூட முழுமையாக முடிக்காதவர் என கூறப்படுகின்றது. மேலும், அவர் தற்போது டிவி மெக்கானிக் பணியாற்றி வருகின்றார்.

டிவி பழுது பார்ப்பவர் உருவாக்கிய 'சமூக இடைவெளி' மின்சார பைக்.. எதையும் சாதிக்க திறன் மட்டும் போதும்..!

இருப்பினும், தனக்கிருக்கும் அபரீதமான திறனைக் கொண்டு சமூக இடைவெளி மின்சார பைக்கை அவரே வடிவமைத்துள்ளார். இதன்காரணத்தினாலே பலர் அவரை வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர். இது வழக்கமான பைக்குகளைக் காட்டிலும் அதிக நீளத்தைக் கொண்டிருந்தாலும் இருவர் மட்டுமே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிவி பழுது பார்ப்பவர் உருவாக்கிய 'சமூக இடைவெளி' மின்சார பைக்.. எதையும் சாதிக்க திறன் மட்டும் போதும்..!

குறிப்பாக, தனது செல்ல மகள் பள்ளி பேருந்தில் செல்ல விரும்பாத காரணத்தினாலேயே இத்தகைய மின்சார பைக்கை அவர் உருவாக்கியிருக்கின்றார். குறிப்பாக, கொரோனா அச்சம் நிறைந்த சூழ்நிலை உருவாகியதன் காரணத்தினால், பொதுவெளியில் சமூக இடைவெளி இல்லாமல் தனது மகள் பயணிப்பது பாதுகாப்பு அற்றது எண்பதை உணர்ந்ததை அடுத்தே இந்த தனித்துவமான வாகனத்தை உருவாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஸ்கிராப் செய்யப்பட்ட பைக்கை வாங்கி, அதையே மாடிஃபை செய்து பயன்படுத்தி மின்சார சமூக இடைவெளி பைக்கை மாற்றியிருக்கின்றார். இதற்காக 3.2 அடி நீளமுள்ள உலோக கம்பிகளை அவர் பயன்படுத்தியிருக்கின்றார். இதுதவிர, அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக்குகள், சஸ்பென்ஷன், ஹெட்லேம்ப் மற்றும் சைட் ஸ்டாண்டு உள்ளிட்டவற்றையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

டிவி பழுது பார்ப்பவர் உருவாக்கிய 'சமூக இடைவெளி' மின்சார பைக்.. எதையும் சாதிக்க திறன் மட்டும் போதும்..!

இதனால், இதுவரை சாலையில் காணப்படாத ஓர் புதுவிதமான மின்சார பைக்காக அது உருவெடுத்துள்ளது. ஸ்கிராப் செய்யப்பட்ட (காய்லாங் கடையில் எடைக்கு போடப்பட்ட) பைக்கை விலைக்கு வாங்கியே இவ்வாறு சஹா கஸ்டமைஸ் செய்துள்ளார். இம்மாதிரியான சமூக இடைவெளியே தற்போதைய முக்கிய தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது.

Most Read Articles
English summary
TV Mechanic Builds EBike For Social Distancing During COVID-19. Read In Tamil.
Story first published: Monday, May 4, 2020, 17:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X