டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம்

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் மிகச் சரியான விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் கிடைக்கும் மாடல் என்ற பெருமையை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் பெற்றிருக்கிறது. பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் கூட்டணியின் ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட இந்த பைக் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம்

இந்த நிலையில், புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கும் இந்த பைக் விரைவில் சந்தைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, வரும் 25ந் தேதி இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் பிஎஸ்-6 மாடலில் 312 சிசி எஞ்சின் உள்ளது. தற்போது இந்த எஞ்சின் 34 பிஎஸ் பவரையும், 27.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம்

இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சினின் செயல்திறன் சற்றே குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி தக்க வைக்கப்படும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம்

அதேநேரத்தில், அதிக எரிபொருள் சிக்கனத்தையும், குறைவான மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம்

அப்பாச்சி 310 பைக்கில் பிஎஸ்-6 எஞ்சின் மட்டுமின்றி, புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், வண்ணத் தேர்வுகளில் புதுப்பொலிவுடன் வர இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம்

இந்த பைக்கில் எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருக்கு பதிலாக டிஎஃப்டி திரையுடன் வர இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம்

மேலும், ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் தொழில்நுட்ப வசதியும் இடம்பெற்றிருக்கும். புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி மற்றும் நேவிகேஷன் வசதிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் ரூ.2.28 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பிஎஸ்-6 மாடலானது ரூ.15.000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம்

டிவிஎஸ் ஜுபிடர், அப்பாச்சி ஆர்டிஆர் 160, அப்பாச்சி ஆர்டிஆர் 200 ஆகிய பிஎஸ்-6 மாடல்களை தொடர்ந்து நான்காவது மாடலாக புதிய அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் வர இருக்கிறது. பிஎஸ்-6 மாடலின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்தாலும், இதன் சந்தையில் விலை குறைவான மதிப்பு வாய்ந்த மாடலாக தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும்.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Motor Company is all set to launch the Apache RR 310 BS-6 model on January 25, 2020 in the domestic market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X