டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் பிஎஸ்-6 மாடல் இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியின் மூலமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

சிறந்த சாய்ஸ்

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் கூட்டணியில் டிவிஎஸ் மோட்டார்ஸ் உருவாக்கிய இந்த பைக் அதிக தொழில்நுட்ப அம்ங்களுடன் மிக சரியான விலையில் கிடைக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

பிஎஸ்-6 எஞ்சின் விபரம்

இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பிஎஸ்-6 மாடலில் இருக்கும் 313 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் 34 பிஎச்பி பவரையும், 27.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. த்ராட்டில் பை ஒயர் தொழில்நுட்பம் மூலமாக சீரான செயல்திறனை பெறும் வாய்ப்பு உள்ளது. ஸ்லிப்பர் க்ளட்ச் தொழில்நுட்பமும் உள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

செயல்திறன்

இந்த பைக் மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 0 - 60 கிமீ வேகத்தை இந்த பைக் 2.9 வினாடிகளில் எட்டிவிடும்.

டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

ரைடிங் மோடுகள்

இந்த புதிய மாடலில் 4 விதமான ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கான அர்பன் மோடு, மழை நேரத்தில் பாதுகாப்பாக செலுத்துவதற்கான ரெயின் மோடு, செயல்திறனை வழங்கும் பவர் மோடு மற்றும் ரேஸ் டிராக்குகளில் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் முழு செயல்திறனை காட்டும் டிராக் மோடு ஆகியவை உள்ளன.

டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

பாாதுகாப்பான பயணம்

எஞ்சின் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை ரைடிங் மோடுகளுக்கு தக்கவாறு மாறிக் கொள்வதால், மிகுந்த பாதுகாப்பான பயணத்தை பெற முடியும். சாலை மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தக்கவாறு ஓட்டுபவர் விருப்பம்போல் பைக்கின் ரைடு மோடு இயக்கதை பைக் ஓட்டும்போதே மாற்றிக் கொள்ள முடியும். கிளைடு த்ரூ தொழில்நுட்பம் மூலமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மிக குறைவான வேகத்தில் பாதுகாப்பாக பைக் செல்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய வண்ணத் தேர்வு

டிவிஎஸ் அப்பாச்சி 310 பிஎஸ்6 பைக்கானது புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மற்றும் புதிய வண்ணத் தேர்வில் வந்துள்ளது. ஏற்கனவே, ரேஸிங் ரெட் மற்றும் ஃபான்டம் பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. தற்போது டைட்டானியம் பிளாக் என்ற புதிய வண்ணத் தேர்வும் சேர்க்கப்ப்டடு இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

சிறப்பம்சங்கள்

அழகான ஃபேரிங் பேனல்கள், வலிமையான பெட்ரோல் டேங்க் மற்றும் ஹெட்லைட் ஹவுசிங் ஆகியவை சிறப்பான தோற்றத்தை தருகின்றன. இந்த பைக்கில் இரண்டு புரொஜெக்டர்களுடன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், வசீகரமான டெயில் லைட் அமைப்பு, ட்ரெல்லிஸ் ஃப்ரேம் ஆகியவை முக்கிய அம்சங்களாக தக்க வைக்கப்பட்டுள்ளன.

டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இந்த பைக்கில் 5 அங்குல டிஎஃப்டி திரையுடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் புளூடூத் மூலமாக ஸ்மார்ட்ஃபோனுடன் இணைந்து பல்வேறு தகவல்களை பெறும் வகையில் வந்துள்ளது. அத்துடன், போன் அழைப்புகளை ஏற்பது மற்றும் மறுப்பது உள்ளிட்ட பணிகளையும் இந்த சாதனம் மூலமாக செய்ய இயலும். நேவிகேஷன் வசதியையும் வழங்குகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

பெட்டல் டிஸ்க் பிரேக்

புதிய அப்பாச்சி 310 பிஎஸ்-6 மாடலில் முன்சக்கரத்தில் 300 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் மிக முக்கிய பாதுகாப்பு அம்சமாக உள்ளது. மிஷலின் ரோடு 5 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

விலை விபரம்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் ரூ.2.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பழைய மாடலைவிட ரூ.15,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பைக் மாடல் 5 ஆண்டுகள் வாரண்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள டீலர்களில் இந்த அப்பாச்சி 310 பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு கிடைக்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்

போட்டியாளர்

புதிய அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு நேரடி போட்டியாக இருக்கிறது. கேடிஎம் ஆர்சி390 பைக்கின் பிஎஸ்-6 மாடல் ரூ.2.52 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Motors has launched Apache RR310 BS-6 model in India priced at Rs.2.40 lakhs (Ex-Showroom, Delhi).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X