ஆற்றல்மிக்க டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்6 பைக்கின் விலை உயர்வு.. கேடிஎம் ஆர்சி390-ஐ விட அதிகமா?

ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் முதன்மை தயாரிப்பு மாடலான அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆற்றல்மிக்க டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்6 பைக்கின் விலை உயர்வு.. கேடிஎம் ஆர்சி390-ஐ விட அதிகமா?

டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்துவரும் அதிக ஆற்றல் கொண்ட பைக் மாடல்களில் ஆர்ஆர்310 முதன்மையானதாக விளங்குகிறது. இதன் பிஎஸ்6 வெர்சனின் விலை முன்பு எக்ஸ்ஷோரூமில் ரூ.2.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆற்றல்மிக்க டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்6 பைக்கின் விலை உயர்வு.. கேடிஎம் ஆர்சி390-ஐ விட அதிகமா?

ஆனால் தற்போது ரூ.5 ஆயிரம் அளவில் விலை அதிகப்பட்டுள்ளதால் இனி இந்த பைக்கை ரூ.2.45 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் தான் வாங்க முடியும். முன்னதாக சமீபத்தில் தான் பிஎஸ்4 தரத்தில் இருந்து பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது விலையில் 17,000 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது.

ஆற்றல்மிக்க டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்6 பைக்கின் விலை உயர்வு.. கேடிஎம் ஆர்சி390-ஐ விட அதிகமா?

இத்தகைய விலை உயர்வுகளுக்கு பின்பும் சந்தையில் விற்பனையில் போட்டியாகவுள்ள கேடிஎம் ஆர்சி 390-ஐ காட்டிலும் குறைவான விலையையே இந்த பைக் பெற்றுள்ளது. ஏனெனில் கேடிஎம் ஆர்சி 390-ன் விலை ரூ.2.53 லட்சமாக எக்ஸ்ஷோரூமில் உள்ளது.

ஆற்றல்மிக்க டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்6 பைக்கின் விலை உயர்வு.. கேடிஎம் ஆர்சி390-ஐ விட அதிகமா?

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் மாடலுக்கு விற்பனையில் இந்த ஒரே பைக் மட்டும் தான் நேரடியாக போட்டியாளராக விளங்கினால் நாக்டு வெர்சன் மோட்டார்சைக்கிள்களான கேடிஎம் 250/390 ட்யூக், யமஹா எம்டி-15, பஜாஜ் என்எஸ்200 போன்றவையும் சில விஷயங்களில் போட்டியாக உள்ளன.

ஆற்றல்மிக்க டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்6 பைக்கின் விலை உயர்வு.. கேடிஎம் ஆர்சி390-ஐ விட அதிகமா?

அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை பற்றி கூற வேண்டுமென்றால், டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனங்கள் இணைவிற்கு பிறகு வெளியான முதல் தயாரிப்பாகும். 5.0 இன்ச்சில் வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை கொண்டுள்ள இந்த பைக்கில் மழை, நகரம், ஸ்போர்ட் மற்றும் ட்ராக் என்ற நான்கு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன.

ஆற்றல்மிக்க டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்6 பைக்கின் விலை உயர்வு.. கேடிஎம் ஆர்சி390-ஐ விட அதிகமா?

இவற்றுடன் டிவிஎஸ் ஸ்மார்ட்கனெக்ட் இணைப்பு தொகுப்பு, டிவிஎஸ் க்ளைட் இணைப்பு போன்ற தொழிற்நுட்ப வசதிகளும், மிச்செலின் ரோடு 5 ட்யூப்லெஸ் டயர்கள், ரைட்-பை-வயர் மற்றும் ஸ்லிப்பர்-க்ளட்ச் போன்றவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

ஆற்றல்மிக்க டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்6 பைக்கின் விலை உயர்வு.. கேடிஎம் ஆர்சி390-ஐ விட அதிகமா?

மற்ற அம்சங்களாக எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ட்யூல்-சேனல் ஏபிஎஸ், பிளவுப்பட்ட ட்ரெல்லிஸ் ஃப்ரேம், 41மிமீ-ல் யுஎஸ்டி ஃபோர்க்ஸ் உள்ளிட்டவை உள்ளன. இயக்க ஆற்றலுக்கு 312.2சிசி லிக்யூடு-கூல்டு ‘தலைகீழ்-சாய்ந்த' சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஆற்றல்மிக்க டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பிஎஸ்6 பைக்கின் விலை உயர்வு.. கேடிஎம் ஆர்சி390-ஐ விட அதிகமா?

6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,700 ஆர்பிஎம்-ல் 33.53 பிஎச்பி பவரையும், 7,700 ஆர்பிஎம்-ல் 27.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஆற்றல் அளவுகள் ரைடிங் மோடை பொறுத்து வேறுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Apache RR310 BS6 prices hiked by 5k.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X