2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்..?

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவத்தை இந்த பதிவில் வழங்கியுள்ளோம்.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் வாகனங்கள் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் புது முக வாகனங்களைப் பற்றிய தகவல்களை மிகவும் எக்ஸ்கிளூசிவாக நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது.

இதுமட்டுமின்றி, புதுமுக அறிமுகங்களாக அறிமுகமாக அனைத்து வாகனங்களை முதல் டிரைவ் செய்து அந்த வாகனத்தின் நிறை மற்றும் குறைகள் போன்ற சுவாரஷ்ய தகவல்களையும் வழங்கி வருகின்றது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

அந்தவகையில், சமீபத்தில் சந்தையில் அறிமுகமான பிரபல டிவிஎஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் முதல் ரைடு அனுபவத்தைப் பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்க இருக்கின்றோம்.

ஃப்ர்ஸ்ட் ரைடு அனுபவத்தைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு முன்னதாக அந்த பைக் பற்றிய ஒரு சுவாரஷ்ய தகவல்களை முதலில் பார்த்துவிடலாம்...

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

தமிழகத்தை மையமாகக் கொண்டு டிவிஎஸ் நிறுவனம் இந்த அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடலை முதல் முறையாக 2017ம் ஆண்டிற்கு பின்னரே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கே உரித்தான மிகவும் ஸ்டைலான தோற்றத்தைப் பெற்றிருந்ததால், இந்திய இருசக்கர வாகன சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

அதன் லுக் மட்டுமின்றி பெர்ஃபார்மன்ஸ், ஹேண்ட்லிங் மற்றும் ரைடிங் அனுபவம் உள்ளிட்ட அனைத்திலும் செம்ம மாஸான மாடலாக காட்சியளித்தது. இருப்பினும், இதனை மேலும் கூட்டும் விதமாக லேசமான அப்டேட்டை வழங்கி 2018ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை டிவிஎஸ் அறிமுகம் செய்தது.

இதில், புதிய அம்சமாக ஸ்லிப்பர் க்ளட் மற்றும் புதிய பெயிண்டிங் ஸ்கீம் உள்ளிட்டவை புது அப்டேட்டுகளாக வழங்கப்பட்டன.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

பெயரளவிலேயே செய்யப்பட்ட மாற்றம் என்றாலும், புதிய ஸ்லிப்பர் க்ளட் மற்றும் பெயிண்டிங் ஸ்கீம் ஆகியவை இந்திய சந்தையில் நல்ல இடத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், 2020ம் ஆண்டிற்கான அப்பாச்சி ஆர்ஆர்310 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பைக்கில் கணிசமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் இதில் செய்யப்பட்ட மிகப் பெரிய மாற்றமாக இருக்கின்றது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

இத்தகைய பைக்கைதான் நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ்குழு ஃபர்ஸ்ட் ரைட் செய்து பார்த்தபோது. இதற்கான, வாய்ப்பு சென்னை எம்எம்ஆர்டி ஓட்டப்பந்தய ஓடுதளத்தில் எங்களுக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பின்போது எங்களுக்கு கிடத்தை அனுபவத்தை ஒவ்வொரு தலைப்பு வாரியாக கீழே காணலாம்.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

டிசைன் மற்றும் ஸ்டைல்

டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த அப்பாச்சி ஆர்ஆர் 310 இந்த பிரிவில் விற்பனைக்கு கிடைக்கும் சிறந்த தோற்றமுடைய பைக்காக இருக்கின்றது. ஸ்போர்டி பேனல், ஷார்ப்பான லைன்கள் உள்ளிட்டவை இந்த பைக்கிற்கு ஆக்ரோஷமான ஸ்டைலை வழங்குகின்றது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

ஆகையால், இந்த மிகச்சிறப்பான மாற்றிக்கொள்ள டிவிஎஸ் விரும்பவில்லை. ஆகையால், முந்தைய மாடலில் என்ன மாதிரியான ஸ்டைலிஸ் அம்சங்கள் அதில் காணப்பட்டதே, அவையே தற்போதும் தக்க வைக்கப்பட்டுள்ளது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

குறிப்பாக, பிஐ எல்இடி ஹெட்லேம்ப், ஃபாவுக்ஸ் ரேம்-ஏர் இன்டேக்கர்கள் உள்ளிட்டவை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, இந்த அப்பாச்சி பைக்கின் பக்கவாட்டு டிசைன் மிகவும் ஷார்ப்பான வெட்டுக்கள் மற்றும் வென்டுகளுடன் காணப்படுகின்றது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

இந்த வெண்டுகள் எஞ்ஜினை குளிர்விக்கும் வகையில் காற்றை உள்ளே கடத்திச் செல்லும். இதுமட்டுமின்றி ரைடரின் கால் பகுதிக்கு வெப்பம் கடத்தப்படுவதையும் இந்த வெண்டுகள் தடுக்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் சிவப்பு நிறம் கொண்ட ட்ரெல்லிஸ் ஃபிரேமால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபிரேம் பைக்கிற்கு கூடுதல் ஸ்போர்ட்டி லுக்கை வழங்கும்.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

இதேபோன்று, இந்த பைக்கின் பின் பக்க தோற்றமும் மிகவும் கூறான அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், முன்னிருக்கை பயணியைவிட பின்னிருக்கை பயணி சற்று மேலே அமர்ந்திருப்பதைப் போன்று வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

தொடர்ந்து, முகப்பு பகுதி மின் விளக்கைப் போலவே டெயில் பகுதிக்கும் எல்இடி மின் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, டிசைன் அனைத்தும் அப்படியே பயனப்படுத்தப்பட்டிருக்கும் வேலையில் பெயிண்டிங் ஸ்கீம் மட்டும் லேசான அப்டேட்டைப் பெற்றிருக்கின்றது.

ஆகையால், புதிய நிறத் தேர்வாக ட்யூவல் டோன் கிரே மற்றும் டைட்டானியம் கருப்பு எனப்படும் பிளாக் பெயிண்ட்டிங் ஸ்கீமில் அது கிடைக்கின்றது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

இந்த புதிய நிறத்தேர்வு கிளாஸ் கருப்பு நிற தேர்விற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறத்தேர்வை 2019ம் ஆண்டு ஸ்லிப்பர் க்ளட்ச் அப்டேட்டுன் முதல் முறையாக அறிமுகம் செய்தது டிவிஎஸ். ஆனால், இந்த அப்பாச்சி ஆர்ஆர் 310 அறிமுகம் செய்யப்பட்ட முதலில் இருந்து ரேஸிங் ரெட் மட்டும் அப்படியே தக்க வைக்கப்பட்டு வருகின்றது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

அம்சங்கள்

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் பல்வேறு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் மிக முக்கியமானதாக அம்சமாக முழுக்க முழுக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தைக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் களஸ்டர் காட்சியளிக்கின்றது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

இது யுஐ வசதிகொண்ட 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே ஆகும். இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் முன்பு காணப்பட்டதைக் காட்டிலும் மாடர்னாகவும், கூடுதல் சிறப்பு வசதிகளைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

குறிப்பாக, இந்த டிஸ்பிளே பைக் மற்றும் ரைடருக்கு தேவையான பல்வேறு வசதிகளை நமக்கு வழங்கும். மேலும், இந்த பைக் தற்போது நான்கு விதமான ரைடிங் மோட்களைக் கொண்டதாக களமிறக்கப்பட்டுள்ளது. அவை, மழை, அர்பன், ஸ்போர்ட் மற்றும் டிராக் ஆகும்.

இந்த மோடில் அர்பன் மற்றும் மழை ஆகியவை ஸ்போர்ட் மற்றும் ட்ராக் ஆகிய இரு மோடுகளைக் காட்டிலும் மிக வித்தியாசமான எஞ்ஜின் திறனைக் கொண்டதாக இருக்கின்றது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

அதாவது, மழை மற்றும் அர்பன் மோடில் பயணிக்கும்போது வெறும் 26 பிஎச்பி பவரை மட்டுமே அது வழங்குகின்றது. அதுவே, வழக்கமான மோட்களான ஸ்போர்ட்ஸ் மற்றும் ட்ராக் மோட்களில் உச்சபட்சமாக 34 பிஎச்பி வரை பவரை வெளிப்படுத்துகின்றது.

அதேசமயம், நான்கு மோட்களுக்குமிடையே சிறு சிறு வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அதேபோன்று, ஏபிஎஸ் ஊடுருவலுக்கு ஏற்பவும் திறன் மாறுபடுகின்றது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

இந்த நான்கு மோட்களுக்குமான கன்ட்ரோல் இடது பக்க ஹேண்டில் பாரில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், கிளைட் த்ரூ பிளஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி த்ரோட்டில் ஒயர் சிஸ்டத்தையும் இந்த பைக்கில் முதன்முதலாக டிவிஎஸ் வழங்கியுள்ளது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

இதேபோன்று, ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனுடன் பைக்கை இணைத்துக்கொள்ள உதவும். அவ்வாறு, இணைக்கும்பட்சத்தில், செல்போனின் டிஸ்பிளேவில் பைக்கைப் பற்றிய பல்வேறு தகவல்கள் வழங்கப்படும். குறிப்பாக, எரிபொருள் அளவு, நேரடி டிராக்கிங் வசதி, பைக்கின் ஃபெர்பார்மன்ஸ் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்கும்.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

எஞ்ஜின் மற்றும் அதன் பெர்பார்மன்ஸ்

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் பழைய 312 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்ட் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இது பிஎஸ்6 தரத்திலானது.

இந்த புதிய தரத்தினால் எஞ்ஜின் திறனில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கேற்ப ட்யூனிங்கை டிவிஎஸ் வழங்கியுள்ளது. குறிப்பாக, பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் அதன் முந்தைய திறனை இழந்து நிற்கின்றன.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

ஆனால், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கோ அவற்றிற்கு மாறுபட்ட நிலையில் பழைய திறனை இழக்காமல் துடிப்புடன் காணப்படுகின்றது.

அந்தவகையில், புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் 9,700 ஆர்பிஎம்மில் 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கை 7,700 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

இந்த எஞ்ஜின் சிறப்பு திறனை வெளிப்படுத்தும் அதேவேலையில் சுற்றுப்புறச்சூழலுக்கு லேசான பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பிட்ட மாற்றங்களால் பைக் லேசான வைப்ரேஷனை வழங்குகின்றது. இதனை ரைடிங்கின் எங்களது நிரூபர் உணர்ந்துள்ளார். இதுபோன்ற அதிர்வுகள் முதல் தலைமுறை அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் காணப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

மேலும், இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் புதிய எலெக்ட்ரானிக் சிஸ்டம் பைக்கை மிக ஆக்ரோஷமாக பயன்படுத்த உதவுகின்றது. இத்துடன், உடனடியாக வேகத்தை அதிகரிக்கவும், கட்டுப்படுத்தவும் மிகவும் உதவிகரமாக இருக்கின்றது.

தொடர்ந்து ரைடிங் அனுபவத்தை மிக சிறப்பானதாக மாற்ற மிஷ்ஷெலின் ரோட் 5 ஸ்டிக்கி டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

அவை, சாலையில் செல்லும்போது அதிக க்ரிப்பை வழங்குகின்றது. இதனால், பைக் கன பொழுதில் சீறிப்பாயும் திறனைப் பெறுகின்றது. தொடர்ந்து, வளைத்து-நெலித்து ஓட்டுவதற்கு ஏதுவான அம்சத்தை அது பெற்றிருக்கின்றது.

இதுமட்டுமின்றி, இந்த டயர் அனைத்து கால சீதோஷ்ன நிலையிலும் சீரான கிரிப்பை பைக்கை வழங்குகின்றது. குறிப்பாக மழைக் காலங்களில் எளிதில் சரிக்கிவிடாத வகையில் க்ரிப்பை வழங்குகின்றது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

இந்த குறிப்பிட்ட மாற்றங்களால் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் முந்தைய மாடலைக் காட்டிலும் 8 கிலோ அதிகரித்துள்ளது. தொடர்ந்து, முந்தைய மாடலைக் காட்டிலும் அதிக திறன் மற்றும் சுறுசுறுப்பான மாடலாகவும் அது மாறியிருக்கின்றது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

முடிவு (தீர்ப்பு)

பல்வேறு மாற்றங்களால் இந்த பைக்கின் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன் முந்தைய மாடலைக் காட்டிலும் 2020 அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் விலை ரூ. 15 ஆயிரம் உயர்ந்துள்ளது. ஆகையால், இதன் விலை தற்போது ரூ. 2.40 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்த பைக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் இந்த விலையுயர்விற்கு நியாயமான காரணமாக இருக்கின்றது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

ஆகையால், ஒட்டுமொத்தமாக இந்த பைக்கிற்கு நமது டிரைவ்ஸ்பார்க் குழு ஐந்திற்கு 4 ஸ்டார்களை வழங்குகின்றது. இதனை, பைக்கின் ஸ்டைல், அப்டேட், திறன் உள்ளிட்ட அனைத்தையும் இயக்கி ஆராய்ந்து பார்த்ததன் அடிப்படையில் டிரைவ்ஸ்பார்க் வழங்குகின்றது.

2020 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ஃபர்ஸ்ட் ரைடு அனுபவம்... எப்படி இருக்கு இந்த புதிய பைக்...? சிறப்பு தகவல்..!

படையப்பா படத்தில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்து ரம்யா கிருஷ்ணன் கூறுவதைப் போல், நம்முடைய நிரூபரும் "அறிமுகம் செய்யப்பட்டு பல காலங்கள் ஆனாலும், இந்த பைக்கின் ஸ்டைல் மற்றும் திறன் ஆகிய எதையும் இழக்காமல், அப்படியே தக்க வைத்திருப்பதாக" கூறினார்.

இதுபோல மேலும் பல வாகனங்கள் பற்றிய சுவாரஷ்யமான தகவல்களை அறிந்துக்கொள்ள நமது டிரைவ்ஸ்பார்க் தளத்தின் முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், ஹலோ, டுவிட்டர் ஆகிய சமூக வலைதள பக்கத்தை உடனே Subscribe பன்னுங்க...

Most Read Articles
English summary
2020 TVS Apache RR310 BS6 (First Ride) Review: Crafted To Be More Invisible Than Before. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X