டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட ஸ்போர்ட் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...

ரூ.750 அளவில் விலை உயர்வை ஸ்போர்ட் மாடலின் கிக்-ஸ்டார்ட் மற்றும் செல்ஃப்-ஸ்டார்ட் என்ற இரு வேரியண்ட்களும் சந்தித்துள்ளன. இந்த இரு வேரியண்ட்களும் தற்சமயம் ரூ.52,500 மற்றும் ரூ.59,675 என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...

சந்தையில் இந்நிறுவனத்தின் ரேடியான் மாடலுடன் நிலைநிறுத்தப்பட்டு வருகின்ற ஸ்போர்ட் பைக்கில் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட 110சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,350 ஆர்பிஎம்-ல் 8.2 பிஎச்பி பவரையும், 4,500 ஆர்பிஎம்-ல் 8.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த பைக்கின் இரு வேரியண்ட்களிலும் ஸ்போர்ட்டியான பாடி கிராஃபிக்ஸ், ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பு, பகல்நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகள், 3டி லோகோ, க்ளீன் பாடி பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன.

டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...

17-இன்ச் அலாய் சக்கரங்களுடன் இந்த பைக்கில் 130மிமீ ட்ரம் ப்ரேக்குகள் இரு சக்கரங்களிலும் வழங்கப்படுகின்றன. சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸும், பின்புறத்தில் 5-விதமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரும் வழங்கப்படுகின்றன.

டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...

டிவிஎஸ் நிறுவனம் ஸ்போர்ட் மாடலை கருப்பு/சிவப்பு, வெள்ளை/பர்பிள், வெள்ளை/சிவப்பு, கருப்பு/நீலம், மெர்குரி க்ரே மற்றும் வால்கோனா சிவப்பு என்ற ஆறு விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்து வருகிறது.

டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...

ஸ்போர்ட் பிஎஸ்6 பைக் கணிசமான விலை உயர்வை பெறும் இரண்டாவது டிவிஎஸ் பைக்காகும். ஏனெனில் சமீபத்தில் இதனுடன் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்ற ரேடியான் பைக்கும் விலை உயர்வை பெற்றிருந்தது. ரேடியான் பைக் எக்ஸ்ஷோரூமில் ரூ.59,742 விலையாக கொண்டுள்ளது.

டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...

டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கானது மிகவும் பிரபலமான எண்ட்ரீ-லெவல் அன்றாட பயன்பாட்டு மோட்டார்சைக்கிளாக இந்திய சந்தையில் உள்ளது. தற்போது விற்பனையில் உள்ள இந்த பைக் மாடல் சமீபத்தில் குறிப்பிடத்தகுந்த அப்டேட்களையும், கூடுதல் வசதிகளையும் பெற்றிருந்தது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Sport BS6 Bike Prices Increased Marginally: New Prices Now Start At Rs 52,500
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X