ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் வங்க தேசத்தை கலக்க சென்ற தமிழக தயாரிப்பு... என்னென்ன வசதிகளை பெற்றிருக்கு தெரியுமா?

டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்டிஆர் 4வி பைக் வங்க தேசத்தில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் வங்க தேசத்தை களக்க சென்ற தமிழக தயாரிப்பு... என்ன வசதிகளைப் பெற்றிருக்கு தெரியுமா?

தமிழகத்தை தலைமையமாகக் கொண்டு இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது டிவிஎஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகன தயாரிப்புகளில் அப்பாச்சி மாடலும் ஒன்று. இதன் ஆர்டிஆர் 160 4வி மாடலையே பங்களாதேஷ் நாட்டில் டிவிஎஸ் அறிமுகம் செய்துள்ளது.

ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் வங்க தேசத்தை களக்க சென்ற தமிழக தயாரிப்பு... என்ன வசதிகளைப் பெற்றிருக்கு தெரியுமா?

சிறப்பு தொழில்நுட்ப வசதியாக ஸ்மார்ட் எக்ஸொன்னெக்ட் (SmartXonnect) வசதியுடன் இப்பைக்கை டிவிஎஸ் அறிமுப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வசதியைக் கொண்டு இருசக்கர வாகன ஓட்டிகளால் அழைப்பு, குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றை பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் திரை வாயிலாகவே பெற முடியும்.

ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் வங்க தேசத்தை களக்க சென்ற தமிழக தயாரிப்பு... என்ன வசதிகளைப் பெற்றிருக்கு தெரியுமா?

இத்துடன், செல்போன் வாயிலாகவும் பைக் பற்றிய குறிப்பிட்ட சில முக்கியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதாவது, பைக் இருக்கும் இடம், செல்லும் இடம், எரிபொருள் அளவு என பல்வேறு தகவல்களை விரல் நுணியில் பெற முடியும். இத்துடன், நேவிகேஷன் பேன்ற சிறப்பு தொழில்நுட்பத்தையும் இப்பைக் பெற்றிருக்கின்றது. ஆகையால், ரியல் டைம் இருப்பிட தகவலையும் உடனடியாக செல்போன் வாயிலாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் வங்க தேசத்தை களக்க சென்ற தமிழக தயாரிப்பு... என்ன வசதிகளைப் பெற்றிருக்கு தெரியுமா?

ஆகையால், இப்பைக்கை திருடிச் செல்வது என்பது சற்றே சாத்தியமற்ற செயலாகும். இத்தகைய சிறப்பு வசதிகளைக் கொண்ட அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கையே டிவிஎஸ் நிறுவனம் வங்காளதேசத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுபோன்று சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்க காரணத்தினாலயே இது பிரீமியம் இருசக்கர வாகனமாக கருதப்படுகின்றது.

ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் வங்க தேசத்தை களக்க சென்ற தமிழக தயாரிப்பு... என்ன வசதிகளைப் பெற்றிருக்கு தெரியுமா?

இது நிச்சயம் வங்காளதேச இளைஞர்களுக்கு பிடிக்கும் என டிவிஎஸ் நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, பைக்கின் அறிமுகத்தின்போது கலந்துக் கொண்ட டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சர்வதே வர்த்த பிரிவின் துணைத் தலைவர் ஆர். திலீப் கூறியதாவது, 2021 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் ரேஸ் பைக்குகளுக்கு இணையான வசதியைப் பெற்றிருக்கின்றது.

ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் வங்க தேசத்தை களக்க சென்ற தமிழக தயாரிப்பு... என்ன வசதிகளைப் பெற்றிருக்கு தெரியுமா?

ஆகையால், இதனை இயக்கும்போது பந்தயங்களில் கலந்துக் கொண்டதைப் போன்ற அனுபவத்தைப் பெற முடியும்" என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இந்த மோட்டார்சைக்கிளில் எக்கசக்கமான பிரீமியம் வசதிகள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. செயல்பாட்டிலும் சிறப்பான திறனையே வெளிப்படுத்தும். ஆகையால் வங்கதேசத்தைச் சேர்ந்த பந்தய விரும்பிகளுக்கு இப்பைக் மிகவும் பிடிக்கும்" என்றார்.

ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் வங்க தேசத்தை களக்க சென்ற தமிழக தயாரிப்பு... என்ன வசதிகளைப் பெற்றிருக்கு தெரியுமா?

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் 159.7 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், ஆயில்-கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 16.05 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக் கூடியது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Launches 2021 Apache RTR 160 4V Bike In Bangladesh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X