அட்டகாசமான மஞ்சள்-கருப்பு நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் அறிமுகம்- விலையில் மாற்றமில்லை

டிவிஎஸ் நிறுவனம் என்டார்க் 125 ஸ்கூட்டர் மாடலின் ரேஸ் எடிசனை இந்திய சந்தையில் ரூ.74,365 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த எடிசனில் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அட்டகாசமான மஞ்சள்-கருப்பு நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் அறிமுகம்- விலையில் மாற்றமில்லை

மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசனின் படங்கள் முன்னதாகவே இணையத்தளத்தில் வெளியாகி இருந்தன. என்டார்க் ரேஸ் எடிசனிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதே விலையில் தான் இந்த ஸ்கூட்டரின் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தேர்வும் விற்பனை செய்யப்படுகிறது.

அட்டகாசமான மஞ்சள்-கருப்பு நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் அறிமுகம்- விலையில் மாற்றமில்லை

டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரில் மிக முக்கியமான அம்சமாக ப்ளூடூத் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் ஸ்கூட்டர் மாடலாக என்டார்க்கில் வழங்கப்படுகின்ற இந்த வசதி இந்த ஸ்பெஷல் எடிசனுக்கும் தொடர்ந்துள்ளது.

அட்டகாசமான மஞ்சள்-கருப்பு நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் அறிமுகம்- விலையில் மாற்றமில்லை

புதிய மஞ்சள்/கருப்பு பெயிண்ட் அமைப்பை தாண்டி ஸ்கூட்டரில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. மற்ற வேரியண்ட்களை காட்டிலும் என்டார்க் மாடலின் சிவப்பு/கருப்பு நிறத்தேர்வு தான் உயர் நிலையில் நிலைநிறுத்தப்பட்டு வந்தது.

அட்டகாசமான மஞ்சள்-கருப்பு நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் அறிமுகம்- விலையில் மாற்றமில்லை

ஆனால் இனி அந்த இடத்தை புதிய ஸ்பெஷல் எடிசன் நிரப்பவுள்ளது. மேலும் புதிய ரேஸ் எடிசன் இளம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என்பது உறுதி. ஏனெனில் இந்த புதிய எடிசன் கூடுதல் ஸ்போர்ட்டியாகவும், கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான மஞ்சள்-கருப்பு நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் அறிமுகம்- விலையில் மாற்றமில்லை

முன் அப்ரான் மற்றும் பின்புற கௌல்-லில் கொண்டுவரப்பட்டுள்ள துணை கிராஃபிக்ஸ் ஸ்கூட்டரின் மொத்த தோற்றத்தையும் புத்துணர்ச்சியாக மாற்றியுள்ளது. அதேநேரம் முன்புற எல்இடி டிஆர்எல் மற்றும் சற்று நிமிர்த்தப்பட்ட ஸ்கூட்டரின் முன்பகுதி உள்ளிட்டவையும் கவனித்தக்க அம்சங்களாக உள்ளன.

அட்டகாசமான மஞ்சள்-கருப்பு நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் அறிமுகம்- விலையில் மாற்றமில்லை

விமானத்தின் தோற்றத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 125சிசி ஸ்கூட்டரில் முக்கிய பாகங்களாக T-வடிவில் எல்இடி டெயில்லேம்ப், ஸ்போர்ட்டியான எக்ஸாஸ்ட், 12 இன்ச்சில் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள், 220மிமீ-ல் பெடல் முன் டிஸ்க் மற்றும் 60 வசதிகளுடன் முழுவதும் டிஜிட்டல் தரத்திலான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை உள்ளன.

அட்டகாசமான மஞ்சள்-கருப்பு நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் அறிமுகம்- விலையில் மாற்றமில்லை

இவை மட்டுமின்றி ஏற்கனவே கூறியதுபோல் ப்ளூடூத் இணைப்பு, ஸ்போர்ட்டியான பிளவுப்பட்ட வடிவத்தில் க்ராப் ரெயில், என்ஜின் க்ளட்ச் ஸ்விட்ச், 22 லிட்டர் கொள்ளவில் இருக்கைக்கு அடியில் சேமிப்பிடம், யுஎஸ்பி சார்ஜர் மற்றும் வெளிப்புற எரிபொருள் மூடி போன்றவையும் டிவிஎஸ் என்டார்க்கில் வழங்கப்படுகின்றன.

அட்டகாசமான மஞ்சள்-கருப்பு நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் அறிமுகம்- விலையில் மாற்றமில்லை

இயக்க ஆற்றலிற்கு வழக்கமான என்டார்க் வேரியண்ட்களை போல் இந்த ஸ்பெஷல் எடிசனிலும் 124.8சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் நிறுவனத்தின் ரேஸ் ட்யூன்டு ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அமைப்பு அதிகப்பட்சமாக 7000 ஆர்பிஎம்-ல் 9.38 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 10.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS NTorq 125 Race Edition yellowblack colour option launched
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X