டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியீடு!

புதிய டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள்!

கடந்த மாதம் டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், ஸ்கூட்டரின் எஞ்சினின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த சூழலில், தற்போது தொழில்நுட்ப விபரங்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள்!

இதன்படி, டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடலில் இருக்கும் 124.8 சிசி எஞ்சின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9.4 பிஎஸ் பவரையும், 10.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள்!

புதிய டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 மாடல் மிகச் சிறப்பான ஏரோடைனமிக் டிசைனுடன் வந்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. புளூடூத் மூலமாக இந்த சாதனத்தை இணைத்துக் கொண்டு பல்வேறு வசதிகளை பெறும் வாய்ப்பை பெற முடியும்.

மேலும், இந்த ஸ்கூட்டரில் 0 - 60 கிமீ வேகத்தை எட்டும் அளவை காட்டும் வசதி, டிராக்கில் ஒரு சுற்றை கடந்த நேரத்தை காட்டும் வசதி, பவர் மற்றும் ஈக்கோ இண்டிகேட்டர் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள்!

தவிரவும், டைமண்ட் கட் அலாய் வீல்கள், பெரிய டயர்கள், முன்சக்கரத்தில் 220 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக், வெளிப்புறத்தில் பெட்ரோல் டேங்க் மூடி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள்!

இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள், எஞ்சின் கில் சுவிட்ச், 22 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி, யுஎஸ்பி சார்ஜர், சிறப்பான கிராப் ரெயில் கைப்பிடி, கவர்ச்சிகரமான சைலென்சர் மஃப்ளர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

டிவிஎஸ் என்டார்க் பிஎஸ்6 ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள்!

புதிய டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் ரூ.65,975 எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது. பழைய மாடலைவிட ரூ.65,513 முதல் ரூ.7,530 வரை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Motor Company has released the specification details of the BS-VI TVS NTorq scooter.
Story first published: Tuesday, March 17, 2020, 11:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X