அடுத்த டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் இதுதானா! செம மாஸா இருக்கு

'ரெட்ரோன்' என்ற பெயரை டிவிஎஸ் நிறுவனம் தனது வருங்கால தயாரிப்பிற்காக பதிவு செய்துள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அடுத்த டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் இதுதானா! செம மாஸா இருக்கு

தமிழக்கத்தை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ், கடந்த சில வாரங்களில் மட்டும் மூன்று வர்த்தக முத்திரை பெயர்களை பதிவு செய்துள்ளது. இதில் முதலாவதான ஜெப்பேலின் ஆர், க்ரூஸர் மோட்டார்சைக்கிளாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் இதுதானா! செம மாஸா இருக்கு

இரண்டாவதான ‘ரைடர்', டிவிஎஸ் நிறுவனத்தின் முதலாவது அட்வென்ஜெர் தயாரிப்பாக வெளிவரலாம். தற்போது மூன்றாவதாக பதிவு செய்யப்பட்ட ‘ரெட்ரோன்', டிவிஎஸ் நிறுவனம் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய கிரியோன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டின் விற்பனை மாடலாக இருக்கலாம்.

அடுத்த டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் இதுதானா! செம மாஸா இருக்கு

பெயரில் ‘ரெட்ரோ' என்ற வார்த்தை மறைந்துள்ளதால், இந்த தயாரிப்பை பழமையான ஸ்கூட்டரின் தோற்றத்தில் எதிர்பார்க்கலாம். தற்சமயம் விற்பனையில் உள்ள டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மேலே நிலைநிறுத்தப்படலாம் என கூறப்படும் ரெட்ரோன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நேரடியாக ஏத்தர் 450 ப்ளஸ் ஸ்கூட்டருக்கு போட்டியாக விளங்க வாய்ப்புள்ளது.

அடுத்த டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் இதுதானா! செம மாஸா இருக்கு

அதேநேரம் ரெட்ரோன், டிவிஎஸ் ரேடியான் மோட்டார்சைக்கிளின் ரெட்ரோ-ஸ்டைல் வெர்சனாகவும் இருக்கலாம் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு வெளிவந்தால், என்ஜின் அமைப்பில் ரேடியானுக்கும் ரெட்ரோனுக்கு இடையே எந்த வித்தியாசமும் இருக்க வாய்ப்பில்லை.

அடுத்த டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் இதுதானா! செம மாஸா இருக்கு

ரெட்ரோன் பெயரை பதிவு செய்தது குறித்து டிவிஎஸ் நிறுவனம் தற்போதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் இதன் அறிமுகம் மற்றும் விலைகளை குறித்து இப்போது ஆராய்வது வீண். டிவிஎஸ்ஸின் ஒரே எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விற்பனை செய்யப்பட்டுவரும் ஐக்யூப்பின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.15 லட்சமாக உள்ளது.

அடுத்த டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் இதுதானா! செம மாஸா இருக்கு

இதற்கு மத்தியில் அப்பாச்சி வரிசை மோட்டார்சைக்கிள்களின் விற்பனையில் 4 மில்லியன் என்ற மைல்கல்லை கடந்ததை தொடர்ந்து 2021 அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கை சமீபத்தில் டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அடுத்த டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் இதுதானா! செம மாஸா இருக்கு

இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 197.75சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4-வால்வு, ஆயில்-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 20.5 பிஎச்பி மற்றும் 17.25 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. ரூ.1,31,050 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கிற்கு பஜாஜ் பல்சர் என்எஸ்200 மற்றும் யமஹா எஃப்இசட்250 பைக்குகள் போட்டியாக உள்ளன.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Registers ‘Retron’ Trademark, TVS’ Second Electric Scooter?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X