Just In
- 15 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 4 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 4 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 டக்கார் ராலியில் பங்கேற்கவில்லை: டிவிஎஸ் திடீர் அறிவிப்பு!
2021ம் ஆண்டு டக்கார் ராலியில் பங்கேற்கப்போவதில்லை என்று டிவிஎஸ் ரேஸிங் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு இந்திய மோட்டார் பந்தய ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

உலகின் மிக சவாலான டக்கார் ராலி பந்தயம் வரும் ஜனவரி 3ந் தேதி முதல் 15ந் தேதி வரை நடக்க இருக்கிறது. சவூதி அரேபியாவில் நடைபெற உள்ள இந்த போட்டியில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் இருந்து வீரர்கள் தங்களது வாகனத்துடன் அங்கு குழுமி உள்ளனர். மேலும், போட்டிக்கான யுக்திகளுடன் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்தியாவிலிருந்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் டிவிஎஸ் ரேஸிங் அணியும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் பிரிவும் டக்கார் ராலியில் பங்கேற்று வருகின்றன. இந்த அணிகளில் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இடம்பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 2021ம் ஆண்டு டக்கார் ராலி பந்தயம் துவங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில், 2021 டக்கார் ராலியில் பங்கேற்கப்போவதில்லை என்று டிவிஎஸ் ரேஸிங் அணி தடாலடியாக அறிவித்துள்ளது.

எனினும், டிவிஎஸ் ஷெர்கோ அணியின் சார்பில் பங்கேற்க இருந்த இந்திய வீரர் ஹரீத் நோவா டக்கார் ராலியில் பங்கேற்பதற்கான ஸ்பான்சராக செயல்பட உள்ளதாக டிவிஎஸ் ரேஸிங் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர் டிவிஎஸ் ரேஸிங் பிரிவு உருவாக்கிய டிவிஎஸ் ஆர்டிஆர் 450 ராலி ரேஸ் பைக்கை பயன்படுத்த உள்ளார். அவருக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப மற்றும் ஒத்துழைப்பை வழங்க இருப்பதாக டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

வரும் 3ந் தேதி துவங்கும் டக்கார் ராலியில் தனிநபர் பிரிவில் ஹரீத் நோவா பங்கு கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டக்கார் ராலியில் இருந்து திடீரென டிவிஎஸ் பின்வாங்கியதற்கான காரணம் குறித்த தகவல் இல்லை.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஷெர்கோ ரேஸிங் நிறுவனத்துடன் இணைந்துதான் உலக அளவில் நடைபெறும் பல்வேறு ராலி பந்தயங்களில் டிவிஎஸ் ரேஸிங் அணி பங்கு கொண்டு வந்தது. டக்கார் ராலி, மொராக்கோ ராலி, பான்ஆப்ரிக்கா ராலி உள்ளிட்ட பல்வேறு ராலி பந்தயங்களில் டிவிஎஸ் மற்றும் ஷெர்கோ இணைந்து பங்கேற்று வந்தன.

இந்த சூழலில், இரு நிறுவனங்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது. எனினும், இந்த திடீர் முடிவு குறித்த இதுவரை எந்த அதிகாரப்பூர்வ காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக டக்கார் ராலி பந்தயங்களில் டிவிஎஸ் ரேஸிங் அணி பங்கு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.